தமிழ் ஆன்மீக வார்த்தைகளின் அர்த்தங்கள்
தமிழ் மொழி சிவனால் அருளப்பட்டு அவர் வழி வந்த முனிவர்களால் காக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் வந்தது என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் சிவன் புகழை உலகெங்கும் பரப்பும் நோக்கத்துடனும் தமிழ் அறிந்தவர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்த தொகுப்பை தொடங்குகிறேன்.
இறைவன் :
பஞ்சபூத சக்திகளே இறைவன் ஆகும். இறைவனுக்கு தொடக்கமும் கிடையாது முடிவும் கிடையாது. எங்கு உற்பத்தி ஆகிறது யார் உற்பத்தி செய்கிறார் என்று எவராலும் வரையறுத்து சொல்ல இயலாது. அதனால் பஞ்சபூதங்களும் சிவன் என்று நம்முன்னோர்கள் சிவன் கோயில் கட்டி பூசை செய்தார்கள். ஆதியும் அந்தமும் (முதலும் முடிவும்) இல்லாத இறைவனை மனித அறிவால் உற்பத்தி செய்யவோ தயாரிக்கவோ முடியாது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிவை பஞ்சபூதங்கள். இந்த சக்திகளில் ஒன்று ஒன்று குறைந்தாலும் உடல் நிலைக்காது உயிர் தங்காது. எந்த உயிராக இருந்தாலும் சரி ( மனிதன், விலங்குகள், பறவை, தாவரம், புழு, பூச்சி, வண்டு மற்றும் அனைத்து இனத்திலும் உள்ள செல்கள், அனைத்து கிரகங்கள்).
கடவுள் :
நவ கிரகங்களே கடவுள். வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் கடவள்தான் காரணம். இன்பம் துன்பம் லாபம் நஷ்டம் உயர்வு தாழ்வு மற்றும் அனைத்துவகையான எண்ணங்களும் கடவுளினாலேயே நிகழ்கிறது. இவற்றை தெளிவாக புரிந்துகொள்ள சிறிது சாதகம் பார்ப்பது பற்றிய ஞானம் தேவைபடுகிறது. சந்திரன் இருக்கும் இடத்தை பொருத்தே அவரது மனநிலை அமையும். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதை போல நமக்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முன்னோடியாக நமது எண்ணங்கள் தோன்றி அது அந்த இடத்திற்கோ அல்லது அந்த சூழலுக்கோ கொண்டு சென்று அடையவேண்டிய பலனை அடையச்செய்யும். இவைகள் ஒருவரின் சாதகத்தின் கிரக அமைப்புகளை வைத்து தெரிந்துகொள்ள முடியும். கஷ்டப்படுகிறவர்களை பார்த்து கவலைப்படாதே கடவுள் காப்பாத்துவார் என்று சொல்ல கேட்டிருப்போம். அதன் அர்த்தம் ஒரு கிரக தசாபுத்தியில் கஷ்டப்பட்டால் அடுத்தது நல்ல தசாபுத்தி வரும் நன்றாக வாழலாம் என்று அர்த்தம். அதிகம் பாவம் செய்பவர்களை பார்த்து கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கார் என்று சொல்வார்கள். பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது காலம் வரும்போது தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். நவகிரகங்களுக்கும் சிவன் கோயில் கட்டி வழிபடுவதே வழக்கம். எல்லாம் சிவம்.
தேவர்கள் :
எந்த உடலாக இருந்தாலும் அது பலகோடி ஜீவன்களின் கூட்டுத்தொகுப்பே ஆகும். இப்படி உடலாக அமைந்த செல்களே தேவர்கள். இந்த செல்களை அழிக்கும் நோய்கிருமிகளே அசுரர்கள். மனித உடல் முப்பது முக்கோடி (30000000000000000000000) தேவர்களின் கூட்டமைப்பு ஆகும். பூமியின் மேல் வாழும் அசுர இனம் மனித இனம், காரணம் கனிம வளம் எடுக்கிறோம் என்ற பெயரில் பூமியை சிதைப்பது.
தெய்வம் :
உயிரைதான் தெய்வம் மற்றும் சக்தி என்கிறோம். அதனால் உயிருள்ள அனைத்து ஜீவன்களையும் வணங்குகிறோம். எ.கா. செடி, மரம், மாடு, நாய், குதிரை, யானை.
சாமி :
நடந்தது நடப்பது நடக்கவிருப்பது போன்றவற்றை சொல்பவர் சாமி, மரியாதையாக சாமியார் என்று அழைப்பர். சுவாமி என்று சொல்லக்கூடாது. சுவாமி என்பது சமஸ்கிருத வார்த்தை, இதன் அர்த்தம் எஜமான் (Boss) ஆகும்.
முனிவர் :
குண்டலி சக்தியை f ஏற்றி, பின் தவம் இயற்றுவதன் மூலம் இறைவனிடம் நேரடி உபதேசம் பெறுபவர். எதார்த்தமாக இவர்கள் சொல்லும் வார்த்தைகள் பலிக்கும்.
கர்த்தர் :
மூலகாரணம் ஆனவர்.
ஆண்டவன் :
சிறந்த முறையில் ஆட்சி செய்து மக்களை காத்தவர்களை ஆண்டவன் என்பர்.
மூலவர் :
சிவன் கோயிலில் தெய்வம் இருக்குமிடம் மூலவர் (மூல ஆதார சக்கரம்).
கருவரை :
அம்மன் கோயிலில் தெய்வம் அல்லது சக்தி இருக்குமிடம்.
சிவனே நமக்கு பிரபஞ்ச ரகசியங்களையும், சாதகம், வைத்தியம், அனைத்து உயிரினத்தின் பண்புகள், எதை எப்படி உணவாக்கலாம் எவை உண்ணக்கூடாது(உயிருக்கு ஆபத்தான உணவுகள்), கட்டிடக்கலை இசை போன்ற ஆயக்கலைகள் 64 யும் வழங்கினார். எந்த சட்டத்திட்டமும் போடாதவர்.

கருத்துகள்
கருத்துரையிடுக