எந்த
நாட்டிலும் இல்லாத சாதி நம் நாட்டில் மட்டும் எங்கிருந்து வந்தது?.
மனிதனின்
பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை. பின்பு எங்கே இருந்து வந்தது உயர்வு தாழ்வு?.
அறியாமை!
தாய்மொழி அறியாமை.சாதி என்பது பழந்தமிழ், தொழில் என்பது புதுதமிழ்.சாதி என்றாலும் தொழில்
என்றாலும் ஒரே அர்த்தம்தான்.
ஆரியர்
வருகைக்கு பிறகு ஆரியர்களையும் அவரது கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டவர்கள் உயர்ந்தவர்கள்
என்றும் ஏற்க மறுத்தவர்கள் எதிர்த்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வேறுபாடு உண்டாயிற்று.
யாரால் அவர்களுக்கு அதிக லாபமோ அதை பொருத்து உயர்நிலையுலும் வேறுபாடு வந்தது.
வெல்டரா இருந்தவர் ஒரு கம்பெனி வைத்து அந்த கம்பெனியின் ஓனர் ஆயிட்டார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்கிறோம். இதை தமிழில் ஒரு பத்தர் முதலியாராயிட்டார் என்று சொன்னால் ஏற்க மறுக்கிறோம்.
தமிழனுக்கு தமிழில் சொன்னால் புரியவில்லை ஆங்கிலத்தில் சொன்னால் புரிகிறது. இது தமிழுக்கும் தமிழனுக்கும் வந்த அவல நிலையை காட்டுகிறது.
விளக்கம் : (எ.கா. ) ஒரு பெற்றோருக்கு நான்கு மகன்கள் அவர்கள் நால்வரும் வெவ்வேறு தொழில் செய்கிறார்கள் 1. ஆசிரியர் - Teacher ( ஆச்சாரியார்),
2. படைவீரர் - மிலிட்டரி ( படையாட்சி),
3. வியாபாரி - Business Man (செட்டியார்),
4. வெல்டர் (பத்தர்). இவ்வாறு அவரவர் செய்யும் தொழிலை சொல்வதுதான் சாதி. அதாவது சாதிப்பது சாதி. இங்கு இவர்கள் நால்வரும் சகோதரர்கள் என்பதை நினைவில் கொள்ளவும், அவர்களின் தொழில் மட்டுமே வேறுபடுகிறது. அதனால் மனிதனில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்.
வெல்டரா இருந்தவர் ஒரு கம்பெனி வைத்து அந்த கம்பெனியின் ஓனர் ஆயிட்டார் என்று சொன்னால் ஏற்றுக்கொள்கிறோம். இதை தமிழில் ஒரு பத்தர் முதலியாராயிட்டார் என்று சொன்னால் ஏற்க மறுக்கிறோம்.
தமிழனுக்கு தமிழில் சொன்னால் புரியவில்லை ஆங்கிலத்தில் சொன்னால் புரிகிறது. இது தமிழுக்கும் தமிழனுக்கும் வந்த அவல நிலையை காட்டுகிறது.
விளக்கம் : (எ.கா. ) ஒரு பெற்றோருக்கு நான்கு மகன்கள் அவர்கள் நால்வரும் வெவ்வேறு தொழில் செய்கிறார்கள் 1. ஆசிரியர் - Teacher ( ஆச்சாரியார்),
2. படைவீரர் - மிலிட்டரி ( படையாட்சி),
3. வியாபாரி - Business Man (செட்டியார்),
4. வெல்டர் (பத்தர்). இவ்வாறு அவரவர் செய்யும் தொழிலை சொல்வதுதான் சாதி. அதாவது சாதிப்பது சாதி. இங்கு இவர்கள் நால்வரும் சகோதரர்கள் என்பதை நினைவில் கொள்ளவும், அவர்களின் தொழில் மட்டுமே வேறுபடுகிறது. அதனால் மனிதனில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்.
சரி சாதியின் அர்த்தங்களை பார்ப்போம்.
பிராமிணன் - பிராமிணன் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் முனிவர், ஐயர் என்று பொருள். (எ.கா) சிவன், நந்தி, அகத்தியர், திருமூலர் போன்றவர்கள்.
செய்தி வாசிப்பவர் - பறையர்–(எ.கா. )ஒரு மன்னர் சொன்ன தகவலை மக்களிடம் அறிவிப்பவர். இதற்கு பயன்படும் கருவிக்கு பறை என்றும், இத்தொழிலுக்கு பறை சாற்றுதல் என்றும் அழைக்கப்பட்டது.அதாவது டி.வி, ரேடியோவில் செய்தி வாசிப்பவர் பிரச்சாரம் செய்பவர் மட்டுமே தன்னை பறையர் என்று சொல்லவேண்டும்.மற்றவர்கள் தன்னை பறையர் என்று சொல்லக்கூடாது.
பிராமிணன் - பிராமிணன் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் முனிவர், ஐயர் என்று பொருள். (எ.கா) சிவன், நந்தி, அகத்தியர், திருமூலர் போன்றவர்கள்.
செய்தி வாசிப்பவர் - பறையர்–(எ.கா. )ஒரு மன்னர் சொன்ன தகவலை மக்களிடம் அறிவிப்பவர். இதற்கு பயன்படும் கருவிக்கு பறை என்றும், இத்தொழிலுக்கு பறை சாற்றுதல் என்றும் அழைக்கப்பட்டது.அதாவது டி.வி, ரேடியோவில் செய்தி வாசிப்பவர் பிரச்சாரம் செய்பவர் மட்டுமே தன்னை பறையர் என்று சொல்லவேண்டும்.மற்றவர்கள் தன்னை பறையர் என்று சொல்லக்கூடாது.
போர்வீரர் (மிலிட்டரி ) - படையாட்சி - ஒரு மன்னன்
ஆட்சி அமைக்க வேண்டுமானால் படை வீரர்கள் தேவை. இப்படி போர்வீரர்களாக இருக்கும் தொழிலுக்கு
படையாட்சி.என்று பெயர்.மிலிட்டரி மேன் மட்டுமே தன்னை படையாட்சி என்று சொல்லவேண்டும்.மற்றவர்கள்
தன்னை படையாட்சி என்று சொல்லக்கூடாது.
சிற்பி - பல்லர் - சிற்பங்கள்,
சிலைகள் செய்பவர்.
வியாபாரி (பிசினஸ் மேன்) -
செட்டியார்.அதாவது எந்த
வியாபாரம் செய்தாலும் அவர் செட்டியாரே.பெரிய பிசினஸ் பன்னினா அவர் பெரிய செட்டியார்.மற்ற
தொழில் செய்பவர்கள் தன்னை செட்டியார் என்று சொல்லக்கூடாது.
சமையல் செய்பவர் - பிள்ளை, சைவம் சமைத்தால் சைவ பிள்ளை (பிள்ளைமார்).அதாவது
ஹோட்டல்ல கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் குக்கா இருக்கிறவர்கள் தன்னை பிள்ளை என்று
சொல்லலாம்.மற்ற தொழில் செய்பவர்கள் தன்னை பிள்ளை என்று சொல்லக்கூடாது.
நாயகன் ( ஹீரோ) – நாயக்கர் அதாவது சினிமா
நாடகம் போன்றவற்றில் கதாநாயகனாக நடிப்பவர்..
மாடு வளர்ப்பவர் – கோனார் அல்லது யாதவர்.
ஆடு வளர்ப்பவர் - இடையர்.
கள்ளன் - கள்ளன் என்பது மரியாதையாக
கள்ளர் என்று அழைக்கப்படுகிறது.
மறவர் - மறவர் என்பது வழிப்பறி கொள்ளை அடிப்பவர்களை குறிக்கும் வார்த்தை.
இவர்கள் பாலைவனப்பகுதியில் வாழும் ஒரு பிரிவினர். இவர்கள் சண்டையிட்டு பொருட்களை கொண்டுவருவதால்
இவர்களை வீரர்கள் என்றும் அழைப்பர்.
மருத்துவர் - மருத்துவர் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பவர்.
இவர்கள் நோயாளிகளை தொட்டு சிகிச்சை அளிப்பதினால் இவர்கள் கொடுக்கும் பொருட்களை ஆரியர்கள்
(பிரமிணர்கள் )ஏற்றுக்கொள்வதில்லை இவர்கள் வீட்டிற்கு பூஜை செய்ய செல்வதுமில்லை. இதைப்பார்த்து
மற்றவர்களும் இவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை.
ஆசான் - ஆச்சாரியார் - தனக்கு தெரிந்த
கலையை கற்பிப்பவர்.மஹாபாரத கதையில் கிருபனை கிருபாச்சாரியார் என்றும் துரோனரை துரோனாச்சாரியார்
என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பற்ற வைப்பவர் (வெல்டர்) -
பத்தர்.
முதலீட்டாளர், முதலாளி ( ஓனர், பிராபிரிட்டர்) - முதலியார். அதாவது ஒரு பெரிய கம்பெனி முதலாலிகிட்ட நீங்க என்ன செய்றிங்க என்று கேட்டால் அவர் அதற்கு ஐ அம் ஓனர் அஃப் த கம்பெனின்னு சொல்லுவார் இல்லையா அதைதான் முதலியார் என்கிறோம். சம்பலத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் தன்னை ஓனர் (முதலியார்) என்று சொன்னால் அவரிடமே விளக்கம் கேட்டுக்கொள்ளவும்.ஒருவேளை அவர் நிலத்துக்கு, காருக்கு அல்லது வீட்டுக்கு ஓனர் என்பதை குறிப்பிடலாம்.
முதலீட்டாளர், முதலாளி ( ஓனர், பிராபிரிட்டர்) - முதலியார். அதாவது ஒரு பெரிய கம்பெனி முதலாலிகிட்ட நீங்க என்ன செய்றிங்க என்று கேட்டால் அவர் அதற்கு ஐ அம் ஓனர் அஃப் த கம்பெனின்னு சொல்லுவார் இல்லையா அதைதான் முதலியார் என்கிறோம். சம்பலத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் தன்னை ஓனர் (முதலியார்) என்று சொன்னால் அவரிடமே விளக்கம் கேட்டுக்கொள்ளவும்.ஒருவேளை அவர் நிலத்துக்கு, காருக்கு அல்லது வீட்டுக்கு ஓனர் என்பதை குறிப்பிடலாம்.
தெளிவு :
தொழிலை குறிக்கும் பெயர்களே
சாதி என்று உணரவும்.
தொழிலை சாராத பெயர்களை சாதி
என்று சொல்லக்கூடாது உதாரணத்திற்கு பின் வரும் பெயர்கள்.
அகமுடையார் -
மனம் உடையவர். கோயில் பொறுப்புகளை ஆரியர்களிடம் ஒப்படைத்ததால் இப்பெயர் வழங்கப்பட்டது.
மனம் உடையவர். கோயில் பொறுப்புகளை ஆரியர்களிடம் ஒப்படைத்ததால் இப்பெயர் வழங்கப்பட்டது.
உடையார் - இருக்கப்பட்டவர்.
தலித் :
தலித் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பிரிக்கப்பட்டவர்கள்
என்று அர்த்தம்.இரண்டு வெவ்வேறு தொழில் செய்பவர்களின் பிள்ளைகள் திருமணம் செய்துக்கொண்டால்
அவர்களை பிரித்தார்கள். (எ.கா) ஒரு ஆசிரியர்(ஆச்சாரியார்)ன் பிள்ளையும் ஒரு மிலிட்டரிகாரர்(படையாட்சி)ன்
பிள்ளையும் திருமணம் செய்தால் பிரித்தார்கள். அதாவது இருவர் வீட்டிலும் சேர்த்துக்கொள்ளாமல்
தனிமைபப்டுத்தப்பட்டனர்.இது எடுத்துக்காட்டுக்காக மட்டுமே.ஆதாவது ஒரே (Same) தொழிலை
செய்பவர்கள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.உயர்வு
தாழ்வு இல்லாமல் அண்ணன் தம்பி மாமன் மச்சான் என்று வாழ்ந்தவர்களே பிற்காலத்தில் அடுத்தவர்
பேச்சை கேட்டு பிரிந்துவிட்டார்கள்.
வேண்டுகோள்: தலித் மற்றும் அருந்ததியினர் என்ற வார்த்தைகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மலைவாழ் மக்கள்:
மலையில் வாழும் மக்களை மலை வாழ் மக்கள் என்கிறர்கள்.இவர்களை
பழைய தமிழில் குறவர்கள் என்பர். ஐவகை நிலங்கள் என்று படித்திருப்பீர்கள். குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல், பாலை இதில் குறிஞ்சி - மலையையும், முல்லை - காட்டையும், மருதம்
- விவசாய நிலத்தையும், நெய்தல் - கடல் சார்ந்த பகுதியையும், பாலை - பாலைவனத்தையும்
குறிக்கும். அந்தந்த பகுதியில் வாழ்வதற்கு தேவையான அறிவு அங்குள்ளவர்களுக்கு மட்டுமே
சிறப்பாக இருக்கும். இதில் ஒரு பகுதியை சார்ந்தவர் மற்றொரு பகுதியை சார்ந்தவரை சாதரணமாக
நினைப்பதே வேறுபாடு.உதாரணமாக நகரத்தார் கிராமத்தாரை சாதரணமாக நினைப்பது போல்.நினைத்து
பாருங்கள் கிராமத்தாருக்கு தெரியும் எந்த விஷயமும் நகரத்தார்க்கு தெரியாது.கிராமத்தார்
அறவழியில் வாழ்வார்கள் அதாவது விவசாயம், மரம், செடி, கொடி, மாடு, ஆடு போன்ற உயிரினங்ளை
வாழ வைத்து தானும் வாழ்வார்கள். நகரத்தார் பிஸினஸ் என்ற பெயரில் ஒருவரை ஒருவர்
ஏமாற்றி வாழ்வார்கள். ஆனால் தானே உயர்ந்தவர் என்ற எண்ணம் இருக்கும். இதுபோல்தான் வேறுபாடுகள்
உருவாயின.
வன்னியர் :
வன்னியர் என்பது ஒரு சிறந்த தளபதியின் பெயர். அவர்
சிறப்புற்று விளங்கியதால் அவருடைய உறவுகள் சொந்தம் பந்தம் அனைவரும் அவர் பெயரை அவரவர்
தொழிலுக்கு அடை மொழியாக வைத்துகொண்டார்கள்.எ.கா.வன்னிய குல ஷத்ரியர் – வன்னிய குல போர்வீரர்
(படையாட்சி), வன்னிய நாயக்கர் – வன்னிய குல
ஹீரோ, வன்னிய கவுன்டர்.
ஆதிதிராவிடர்:
சிவனையும் அம்மனையும் வழிபட்டு அம்மன் கோயில் திருவிழா
கொண்டாடி மற்றும் சிவக்கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்.ஆரியர்கள் கொள்கைகளை
ஏற்காமல் சிவக்கொள்கையை விடாப்பிடியாக கொண்டவர்கள் ஆதிதிராவிடர்கள்.இதேபோல் ஆரியர்கள்
கொள்கைகளைகளுக்கு எதிரானவர்கள் இந்தியா முழுவதும் இருக்கிரார்கள்.நம் மொழியில் ஆதிதிராவிடர்கள்
என்பதுபோல் ஆதிஆந்திரா, ஆதிகர்நாடகா என்று உள்ளார்கள். மற்ற மொழியில் சொல்ல எனக்கு
தெரியவில்லை அந்தந்த மொழிக்காரர்களுக்கு தெரியும்..ஆரியர்களுக்கு
எதிராகவும், சாமியார் மற்றும் பூசாரிக்கு ஆதரவாகவும் இருந்தவர்கள் ஆதிதிராவிடர்கள்.
இவர்கள் சிவனின் வழியை பின்பற்றியவர்கள்.
இவர்கள்
ஐயரைவைத்து எந்த பூசையும் செய்யமாட்டார்கள். இதுவே பிற்காலத்தில் தலைகீழாக மாறிவிட்டது.
அதாவது
ஆரியர்கள் வருகைக்கு முன்பு கோயில்களில் சாமியாரும் பூசாரியும் பூசை செய்து வந்தார்கள்.
சாமியார்- ஒருவருக்கு
நடந்தது நடப்பது நடக்கஇருப்பது துன்பத்திற்கான காரணம் எப்போது விலகும் என்பன போன்ற
விஷயங்களை சொல்பவர்.இதுபோல் சக்தி உடையவர்களுக்கு சாமி என்று பெயர் மறியாதையாக சாமியார்
என்று அழைப்பர். பிற்காலத்தில் ஒருசாரர் ஐயரை சாமி என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.
பூசாரியார்
–
பூ என்றால் மனம் என்று அர்த்தம், ஆச்சாரி என்றால் ஆசிரியர்.அதாவது மனதை ஒருநிலைப்படுத்தி
காரிய சித்தி அடைய கற்றுக்கொடுப்பவர்.இவருக்கு மற்றவர் மனதில் உள்ளது தெரியாது.நம்
மனதில் உள்ளதை சொன்னால் எப்படி பூசை செய்தால் (மனதை ஒருநிலைப்படுத்தினால்) காரிய சித்தி
அடையமுடியும் அல்லது துன்பம் அகலும் என்று சொல்லித்தருவார்.
நடந்தசம்பவம்:
ஆரியர்கள் ராமாயணம்
மற்றும் மஹாபாரத கதைகளை சொல்லி அதில் உள்ள நெறிமுறைகளை பின்பற்ற செய்தார்கள்.இவர்கள்
கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களே கடுவுளை உணர்ந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும்
சொல்லிக்கொண்டு ராமம் போட்டுக்கொண்டார்கள்.பின்பு அது தனி சமயமாக மாறியது.அதற்கு வைஷ்ணவம்
என்று பெயரிடப்பட்டது.அதாவது வைஷ்ணவம் என்றால் வைசியன் – இரண்டாம் நிலை என்று மேலே
சொல்லியிருந்தேன் அல்லவா அந்த நிலையை ஒரு சமயம் என்று சொல்லிக்கொண்டார்கள்.சிவனை வழிபடுபவர்கள்
அசுரர்கள் என்றும் ராமர், கிரிஷ்ணரை வழிபடுபவர்கள் தேவர்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.இங்கிருந்தவர்கள்
கொஞ்ச கொஞ்சமாக சமயம் மாறினார்கள்.அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சொந்தம், பந்தம்
என்று வாழ்ந்தவர்களிடையே மதம் (உயர்வு தாழ்வு பார்த்தல்) உருவானது.சிவ சமயம் வைணவ சமயம்
என்று இரு பிரிவுகளாக மாறி பல கலவரங்கள் நடந்தன.
பின்பு
சில ஆரிய வம்சத்தினர் சைவ சமயத்திற்கு மாறினார்கள்.மாறிய பின்பு பூசை இப்படி செய்யவேண்டும்
அப்படி செய்ய வேண்டும் என்று கூறி சிலரின் ஆதரவைப்பெற்று கோயிலை கைப்பற்றினார்கள்.அதன்பின்பு
கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை வைத்து உயர்வு தாழ்வு உருவாக்கப்பட்டது.கோயில்களில் இருந்த
ஆவணங்களை கோயில் பராமரிப்பு என்ற பெயரில் அழித்தார்கள்.அதனால் தமிழில் இருந்த வேத நூல்கள்
நமக்கு கிடைக்காமல் போய்விட்டது.இவர்களின் கட்டுப்பாட்டில் சிக்காத ஓலைச்சுவடிகளே ஆங்காங்கே
இருக்கின்றன.
தேவர்கள்:
இவர்கள்
ஆரியர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள்.அதாவது கோயிலில் பூசை செய்வதை
மையமாக வைத்து ஊர் மக்கள் இரண்டு பிரிவானார்கள்.ஒரு பிரிவினர் சாமியார் மற்றும் பூசாரிக்கு
ஆதரவாகவும் மற்றொரு பிரிவினர் ஐய்யருக்கு ஆதரவாகவும் இருந்தார்கள்.ஐயரை கோயிலில் பூசை
செய்ய வைத்து அவர்களை பாதுகாக்க மற்றவர்களிடம் சண்டையிட்டார்கள்.அதனால் பிராமணனை காப்பதினால்
நீதான் தேவன் என்றார்கள், கோயில் பூசையிலும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அதன்பின்பு
சாமியார்,பூசாரி மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் கோயிலுக்கு வருவதை நிருத்திக்கொண்டார்கள்.தனியே
மூல ஆதார சக்கரம் வைத்து அல்லது கல்லை வைத்து கும்பிட தொடங்கினார்கள்.
ஆரியர்களின்
ஆதரவாளர்கள் : யாரெல்லாம் ஐயரை வீட்டிற்கு அழைத்து பூசை செய்கிறார்களோ அவர்கள்தான்
ஆரியர்களின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். .
உண்மையான
சக்தி உடையவர்கள் ஆங்காங்கே குறி சொல்லிக்கொண்டு இருப்பதை இப்பொழுதும் பார்க்கலாம்.இவர்களுக்கு
கொயில்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
இங்கு முழுமையாக அனைத்து சாதிகள் பற்றி பதிவிட இயலாது. இது புரிதலுக்காக
மட்டுமே.மற்றவற்றை அவரவர்களே புரிந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
எழுதியவன் எந்த சாதி:என்னை பொருத்தவரை
நான் பல சாதிக்கு சொந்தக்காரன். அரசாங்கத்தில் பணிபுரியும் படித்தவர்கள் வன்னியர் என்று
சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.பூ விற்றேன், மாடு மேய்த்தேன், ஆடு மேய்த்தேன், விவசாயம்
செய்தேன், பிரச்சாரங்கள் செய்தேன் தற்போது பொறியாலராக (Engineer) உள்ளேன்.எனக்கு ஐயர்
சடங்கு முறையில் சிறிதளவும் உடன்பாடில்லை.இறை தரிசனத்திற்கு பிறகு சடங்கு முறைகள் எல்லாம்
சுய நலனுக்கு செய்யப்படுபவை என்பது புறிந்தது.
சிந்திக்க:
சிந்திக்க:
பகவத் கீதையில் நான்கு வர்ணங்களே உள்ளன.ஆனால் வர்ணம் என்ற பெயரில் சாதிகளை
சொல்வது தவறு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.இது சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்களுக்கே
புரியாத ஒன்று.நமக்கு எப்படி சரியை, கிரியை, யோகம், ஞானம் புரியவில்லயோ அதேபோல்தான்
அவர்களும்.இவைகளை சொல்லி புரிய வைக்க முடியாது உணரத்தான் முடியும்.சமஸ்கிருதத்தில்
மந்திரம் சொல்லும்போது ஏதோ உயர்வாக நினைக்கிறோம்.அதை அவரவர் தாய் மொழியில் சொன்னால்
இவ்வளவுதானா என்றாகிவிடும்.அன்று சமஸ்கிருதத்தால் மனிதனிடையே வேறுபாடு உருவானது இன்று
ஆங்கிலத்தால் மனித இனமே உயிரோடு சித்திரவதை அனுபவித்து பாதி ஆயுட்காலத்திலேயே அழிகிறது.சிறு
வயதிலேயே குழந்தைகளுக்கு சக்கரை மாத்திரை கொடுத்து முப்பது வயதுக்குள் டயாலிசிஸ் செய்து
கொன்றுவிடும் நிலை. என்ன ஆங்கில மருத்துவ அறிவியல்?சிந்தியுங்கள் நன்றாக சிந்தியுங்கள்.
வேண்டுகோள்:
இது முழுக்க முழுக்க உண்மையை உணரவும் மனித வேறுபடுகளை களைந்து ஒன்றிணைக்க
தொகுக்கப்பட்டது.இதை படித்தபின் யார் மீதும் வெருப்புணர்வு வரவேண்டாம்.இவைகள் அனைத்தும்
முன்னோர்கள் செய்த வினை.தற்போது உண்மையை உணர்ந்துவிட்டோம் ஒற்றுமையாய் வாழ்வோம்.
கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது.மிக்க நன்றி.இந்த சாதி ஒரு வகையில் நல்லதாகும், ஒரு வகையில் கெட்டதாகவும் எனக்கு தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅருமையான விளக்கமளித்தமைக்கு மிகுந்த நன்றி தோழமையே. ...
பதிலளிநீக்கு"தீ" யிலிட்டு "சா"க வேண்டும் சா.... தீ....!!
arumayaana padhivu thozhare
பதிலளிநீக்குNice sir best👍💯
பதிலளிநீக்குநாம் தமிழர்களின் புது ரூட்டு தானே இந்த பதிவு.. இன்னும் நிறைய பொய்களை கற்று எழுதவும்.. நல்ல கதைவிடும் திறன் இருப்பதால் சைமன் செபாஸ்டியன் போல சினிமா துறையில் நுழையுங்கள்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநடுகல் வழிபாடு எப்படி வந்தது என்பதற்கு சரியான விளக்கம். ஆரியர் கோவிலை கைப்பற்றிய விதம் குறித்து அறிய முடிந்ததுதொது.
பதிலளிநீக்குகண்டிபாக சாதிகள் ஒழிந்து சமத்துவம் நிலவும்....ஒரு நாள் எல்லாமே மாறும்....அந்த நாளுக்காக காத்திருப்பேன் என்றும்....
பதிலளிநீக்கு