பாடப்புத்தகத்தில்
உள்ளவற்றையும் கூகுலில் உள்ளவற்றையும்
படித்துவிட்டு எனக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் படித்தவர்கள். பாடப்புத்தகத்தில்
புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது நியூட்டன் என்று உள்ளது, இதை படித்தவர்கள் இதையே
உண்மை என்று நம்புகிறார்கள். இவர் பிறந்தது இங்கிலாந்து என்று படிக்கும்போது
ஆங்கிலேயர்கள்தான் அறிவாளி என்பதுபோல் தோன்றும் இதனால் ஆங்கில மோகம்
அதிகரிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் ஆங்கிலத்தில் பேசி தன்னை படித்தவன் என்று
காட்டிக்கொள்கிறார்கள்.தன்னை அறிவுடையவன் என்று காட்டுபவர்கள்
மிகக்குறைவு.
மருந்து மாத்திரை இல்லாமல் எளிதில் குணமாகக்கூடிய நீரிழிவு, இரத்த அழுத்தம்
போன்றவற்றிற்கு சாகும் வரை மருந்து மாத்திரை சாப்பிடுவதா அறிவு வளர்ச்சி?.
வாழ்க்கைக்கு
தேவையான அடிப்படை அறிவு மற்றும் மருந்தில்லா மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள ஹீலர்
பாஸ்கர் அவர்களின் பேச்சை கேளுங்கள்.மேலும் விபரங்களுக்கு anatomictherapy.org
என்ற வெப்சைட்டை பாருங்கள்.
சிந்திக்க:
சிறிது
அறிவுபூர்வமாக அறிவியலையும் வரலாற்றையும் ஒப்பிட்டு சிந்திப்போம்.
நியூட்டன்
பிறந்தது கி.பி.1643 என்று படித்தோம்.373 வருடங்கள்கூட நிறைவடையவில்லை.
தஞ்சை
பெரிய கோயில் கட்டி 1200 வருடங்கள் ஆகின்றது.
கல்லனை
கட்டி 2000 வருடங்கள் ஆகின்றது.
புவியீர்ப்பு
விசை என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாமலா இக்கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு
கட்டப்பட்டிருக்கும், சிந்தித்து பாருங்கள்.
சிலர்
சொல்கிறார்கள் நியூட்டன்தான் சூத்திரத்தை (Formula) உருவாக்கி கொடுத்தார் என்று.
நம்
முன்னோர்களிடம் இதைவிட சிறந்த சூத்திரம் இருந்திருக்கிறது, ஆயக்கலை 64 ல்
கட்டிடக்கலையும் ஒரு கலை என்பதையும், அதில் அனைத்து விதிமுறைகளும் உள்ளன என்பதை
நினைவில் கொள்ளவேண்டும். இவைகள் ஆட்சியாளர்கள் மாறி மாறி ஆட்சிசெய்யும்போது அவரவர்
சமய கொள்கைகலும் அறிவியலும் திணிக்கப்பட்டு இங்கிருந்த அறிவியல் அழிக்கப்பட்டது.இதனால்
நமது முன்னோர்களின் அறிவியல் நமக்கு தெரியாமல் போய்விட்டது.இங்கு நம் முன்னோர்கள்
மட்டுமே அறிவாளி என்று சொல்லவில்லை, உலகில் உள்ள அனைவருடைய முன்னோர்களுமே
அறிவாளிகள்தான்.உதாரணங்களை ஏராளமாக சொல்லலாம் ஆனால் மேலே உள்ளவை அனைவரும் அறிந்தது
என்பதால் புவியீர்ப்பு விசையை உதாரணமாக எடுத்துக்கொண்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக