தெய்வ நிலையை காண்பது


தெய்வ நிலையை காண நான்கு நிலைகள் உள்ளன.அவை தமிழில் சரியை, கிரியை, யோகம், ஞானம் இதை சமஸ்கிருதத்தில் நான்கு வர்ணம் சூத்ரியன், வைசியன், சத்ரியன், பிராமணன்.
அதில் முதல் நிலை தமிழில் சரியை சமஸ்கிருதத்தில் சூத்திரியன்.ஆதாவது ஒரு கல்லு சிலையையோ செப்பு சிலையையோ போட்டோவையோ வைத்து இதுதான் தெய்வம், இதுதான் கடவுள், இதுதான் இறைவன் என்று நம்ப வைக்கும் நிலை.இதற்காக பல கதைகள் சொல்லி நம்பவும் வைப்பார்கள்.இந்த முதல் நிலையில் உள்ளவர்களால் தன்னை உணர முடியாது.தான் உருவான விதம், தான் சாப்பிட்ட சாப்பாடு சீரண மண்டலத்தில் உயிர் பெறுவது போன்ற விடயங்களை கூட உணரமாட்டார்கள்.இவர்களுக்கு ஆசை, கோபம், பொறாமை, பற்றுதல், உயர்வு தாழ்வு பார்த்தல் (மதம்), பழிவாங்குதல் போன்ற உணர்வுகள் அதிகமாக இருக்கும்.
இரண்டாவது நிலை தமிழில் கிரியை சமஸ்கிருதத்தில் வைசியன்.அதாவது தெய்வம் (உயிர், குண்டலினி) தன்னுள்ளே இருப்பதை உணர்ந்தவர்கள் அதை காண மூச்சு பயிற்சி (வேள்வி), யோகா செய்வார்கள்.
மூன்றாவது நிலை தமிழில் யோகம் சமஸ்கிருதத்தில் சத்திரியன்.இந்நிலையில் குண்டலினி(உயிர்) மூல ஆதார சக்கரத்திலிருந்து நெற்றிக்கு வந்து நெற்றியில் (ஆக்கினை, சுழிமுனை) தீபச்சுடராக சுற்றும். அதாவது மூக்கு நுனியியை பார்த்துக்கொண்டே இருந்தால் மூக்கு கரைந்துவிடும்.இவ்வாறு செய்வதற்கு பதிலாகதான் வினாயகர் சதுர்த்தி என்று மண் பிள்ளையாரை கரைக்கிறார்கள்.பின்பு இரண்டு கண்களையும் மூடி இரண்டு கண் பார்வையையும் நெற்றியில் செலுத்தி பார்க்க வேண்டும்.அப்போதான் தீபச்சுடரை பார்க்க முடியும்.இதற்கு நெற்றி கண் என்று பெயர்.
நான்காவது நிலை தமிழில் ஞானம் சமஸ்கிருதத்தில் பிராமணன்.இந்நிலைக்கு சிவ நிலை, சித்த நிலை, ஞான நிலை, முனிவ நிலை என்றும் அழைப்பார்கள். குண்டலினியை உச்சந்தலைக்கு(துரிதம்) ஏற்றிய பின்பு பிடரியில் வெளிச்சத்தை பார்க்கலாம். பின்பு நேரம் கிடைக்கும்போது சுழிமுனையை பார்க்க கிருஷ்ணன், ராமர் நிறத்தில் ஒளிவட்டம் தெரியும்.அப்போது ஆறு குணம் சீரமைக்கப்பட்டு தெய்வ தரிசனம் தினமும் காண முடியும்.இந்த நிலையை கோடியில் ஒருத்தன் அல்லது கோடான கோடியில் ஒருத்தனால் மட்டுமே அடைய முடியும். இந்த நிலையைஅடைந்தவர்கள் சிவன், நந்தி, அகத்தியர், திருமூலர் போன்றவர்கள் பலர் நம் பகுதியிலும் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் பகுதியில் வால்மீகி, வியாசர் போன்றவர்கள்.
தெளிவு :
பூ நூல் போட்டவர் எல்லாம் பிராமணன் அல்ல.
ஈஸ்வரப்பட்டம் : எப்பொழுதெல்லாம் புருவ மத்தியை பூசை (மனதை ஒருநிலைபடுத்துதல்) செய்கிறார்களோ அப்பொதெல்லம் நாக்கில் விருவிருப்பு ஏற்படும், இந்த நிலையில் சொல்கின்ற சொல் எல்லாம் நடக்கும். இதற்கு ஈஸ்வரப்பட்டம் என்று பெயர்.இதில் திட்டம்போட்டு சொல்லக்கூடாது எதார்த்தமாக சொல்லும் வார்தைகளே நடக்கும்.இந்நிலைகளை முதன் முதலில் அடைந்தவர் சிவன்.அதனால்தான் சிவனை ஆதி சித்தன் என்கிறோம்.சிவன் சொன்ன வழி முறைகளை பின்பற்றி ஞான நிலையை அடைபவர்களை சிவனடியார் என்கிறோம்.
இவ்வாறு ஞான நிலையை அடைந்தவர்களுக்கு சிவனை நேரில் பார்க்கும் வாய்ப்பும் சிவனின் திருவிளையாடலை அனுபவிக்கும் பாக்கியமும் சிவன் என்ற பட்டமும் கிடைக்கும்.இதனால்தான் அனைத்து சித்தர்களையும் சிவன் என்றும் சித்தன் வாக்கே சிவன் வாக்கு என்றும் சொல்வார்கள்.
சிவன் என்கின்ற பட்டம் மேடை போட்டு மக்கள் கூடி தேர்ந்தெடுத்து வழங்கப்படும் பட்டம் அல்ல. இறைவன் அசரிரியாக இருந்து உன் உயிர்தான் சிவமதாச்சு என்று சொல்வார்.அதன் பின்பே நம் மனதால் உலகம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை உணர முடியும்.இதை வியாச முனிவர் அனுபவித்ததால் மகாபாரத கதையில் அர்ச்சுனனுக்கு கிரிஷ்ணன் தன் விஸ்வரூபத்தை காட்டியதாக எழுதியிருக்கிறார்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு