பிரம்மன்: உச்சந்தலைக்கு ஏற்றப்பட்ட குண்டலினி சக்திக்கு
பிரம்மம் அல்லது பிரம்மன் என்று பெயர். இதுபோல் ஏற்றியவர்கள் ஐந்து மடங்கு சக்தியுடன்
செயல்படுவார்கள்.இதை புரிய வைக்க பிரம்மனுக்கு ஐந்து தலை வைத்து காட்டினார்கள்.கோயில்களில்
சிலைகளின் தலையில் ஐந்து தலை நாகம் இருக்கும்.அதாவது குண்டலினி சக்தி இருக்கும் இடத்தை
உணர்த்துவது.
விஷ்ணு – பிண்டு: பெண்ணின் கருவரைக்கு சென்ற குண்டலினி சக்தி குழந்தையாக
உருவெடுக்கிறது அதாவது கோயில் கட்டப்படுகிறது. இது கருவரையில் இருக்கும் நீர் குடத்தில்
வளரும். அப்போது ஐந்து மடங்கு சக்தியுடன் இருக்கும்.இந்த நீர்குடத்தை பாற்கடல் என்றும்
உள்ளே படுத்திருக்கும் கருவை விஷ்ணு என்றும் சொல்வார்கள்.இதைத்தான் விஷ்ணு பாற்கடலில்
பள்ளிக்கொண்டுள்ளார் என்று ஐந்து தலை நாகத்தின் மீது படுத்திருப்பதாக காட்டுவார்கள்.
சிவன்: உடலை சிவன் என்பார்கள். சிறிய உடலோ பெறிய உடலோ எதுவாக
இருந்தாலும் அது சிவனே. உயிரை சக்தி என்பர்.
சிவன் சிலை: பூமியை சிவனின் உடலாகவும் இமயமலை சிவனின் சடாமுடியாகவும்
காசி சிவனின் சுழிமுனையாகவும் (ஆக்கினை சக்கரம்) இராமேஸ்வரம் பூமியின் மூல ஆதாரச்சக்கரமாகவும்
கருதப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இமயமலையில் கங்கை உருவாகி வருவதால் கங்கையை தலையில்
வைத்துள்ளதாக கூறுவார்கள்.
இதைத்தான்
சிவன் வானத்துக்கும் பூமிக்கும் நின்றார் பிரம்மன் சிவனின் தலையை. பார்க்க சென்றார்
என்றும் விஷ்ணு சிவனின் பாதத்தை பார்க்க சென்றார் என்றும் பார்க்க முடியாமல் பூமியை
முட்டிக்கொண்டு திரும்பி வந்துவிட்டார் என்றும் ஒரு கதை சொல்வார்கள்.
தெய்வம்: உயிரை தெய்வம் என்கிறோம். உயிறோடு இருக்கிற அனைத்தையும்
தெய்வமாக வழிபடுவது நமது வழக்கம்.உதாரணத்திற்கு அரச மரம், வேப்பம் மரம், வில்வ மரம்,
துளசி செடி, மாடு, ஆடு, யானை, குதிரை, நாய் என்று அனைத்தும் தெய்வம்.நம்மைப்போல் மற்ற
உயிர்களும் இறைவன் படைப்புகளே.
மும்மூர்த்திகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது...??
பதிலளிநீக்குMumbai,Elephanta
பதிலளிநீக்கு