வியாச முனிவர்


இவர் பெயர் வியாசர். இவர் வேதத்தை சுருக்கி எழுதியதால் வேதவியாசர் என்று பெயர்பெற்றார்.இவர் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக்கொண்டவர். இவர் பிறந்து 5118  ஆண்டுகள் ஆகின்றன.. இவர் ஞான நிலையை அடைந்தவுடன் சிவன் காட்சி கொடுத்து ஐந்து பங்கு தர்மமும் நூறு பங்கு அதர்மமும் இருப்பதாக கூறினார். அதாவது 5/100= 5%. அதை அவர் மற்றவர்களிடம் சொல்ல யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.காரணம் இவர் மீனவர் குலத்தில் பிறந்தவர் என்பதால்.ஒரு மன்னரோ அல்லது செல்வச்சீமானோ சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.அதனால் தர்மத்தை மக்களுக்கு உணர்த்த மஹாபாரதம் என்ற கதையை எழுதினார்.அதாவது வேதத்தை சுருக்கி எழுதினார்.
கதாபாத்திரம்: அவருடைய உயிருக்கு துறவுபதி என்றும் அதாவது லட்சங்களை கொண்டவனை லட்சாதிபதி என்கிறோம், துறவுக்கு கரணம் உயிர் உச்சந்தலையை அடைவது அதனால் துறவுபதி என்று பெயர், நல்ல எண்ணத்திற்கு பஞ்சப்பாண்டவர்கள் என்றும் கெட்ட எண்ணங்களுக்கு கெளரவர்கள் என்றும் பெயரிட்டார்.
கிருஷ்ணர்: குண்டலினியை சுழிமுனையில் வைத்து பார்க்கும் போது கிருஷ்ண பட்சம் அதாவது தேய்பிறை நிறத்தில் தெரியும், அதுவே ஞான நிலையில் உண்மைகளை உணரச்செய்யும், இதனால் இதற்கு கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.

கருத்துகள்

  1. மிக சிறந்த பதிவு காலத்தால் பாதுகாக்கப் படவேண்டிய உண்மையான பொக்கிஷம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

லேபிள்கள்

மேலும் காட்டு