மதம்:
மதம்
என்பது உயர்வு தாழ்வு பார்க்கும் குணத்தை குறிக்கும் சொல் ஆகும். என்னை பொருத்தவரை
இறைவன் ஒருவனே, இறைவனுக்கு சூட்டப்பட்ட பெயர்தான் ஒவ்வொரு மொழியிலும் பகுதியிலும்
வெவ்வேறாக இருக்கிறது,
சமயம்:
சிவன்
சொன்ன வழியை பின்பற்றினால் அது சிவ (சைவ) சமயம். சிவ என்பது வேற்று மொழியினரின்
உச்சரிப்பில் சைவ என்று மாறிவிட்டது. புத்தர் சொன்ன வழியை பின்பற்றினால் அது புத்த
சமயம்.ஏசுநாதர் சொன்ன வழியை பின்பற்றினால் அது கிரிஸ்துவ சமயம்.நபிகல்நாயகம் சொன்ன
வழியை பின்பற்றினால் அது இஸ்லாமிய சமயம்.இவற்றை மதம் என்று சொல்லக்கூடாது.சிலர்
தந்தை, தாய் மற்றும் முன்னோர்களை, சிலர் நல்லாட்சி செய்தவர்களை (ஆண்டவர்)
பின்பற்றி வணங்குவார்கள்.
இறைவனை
எந்த வடிவில் எந்த பெயரில் வணங்க விருப்பமோ அப்படியே வணங்குங்கள்.ஆனால் உண்மையாய்
இருங்கள், சத்தியம், தர்மம் மற்றும் அற நெறியுடன் இருங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக