அம்மன் கோயில் திருவிழா


மனிதனின் வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் ஒரு விழாதான் அம்மன் கோயில் திருவிழா.அதற்கான விளக்கத்தை இப்போ பார்க்கலாம்.
காப்பு கட்டுதல்:
நம் வீட்டில் பெண்ணுக்கு குழந்தை பிறப்பதற்கு முன் மூன்றாம் மாதம் அதாவது ஏழாவது மாதத்தில் வலையல் காப்பு நடத்தப்படுகிறது.அதேபோல் அம்மன் கோயிலில் சாமி தூக்குவதற்கு முன் மூன்றாவது நாள் காப்பு கட்டப்படுகிறது.
கரகம் தூக்குதல்:
பின்பு வீட்டில் பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது அதேபோல் கோயிலில் கரு+அகம்=கரகம் தூக்கி வரப்படுகிறது. அதாவது கரு என்றால் குழந்தை அகம் என்றால் உள்ளே, உள்ளே இருக்கும் குழந்தை தூக்கி வரப்படுகிறது.தாய் என்ற உலகை கடந்து வருவதால் பிறக்கும் குழந்தையை கடவுள் என்கிறோம்.
அலங்காரம்:
பின்பு பிறந்த குழந்தையை சட்டை போட்டு பவுடர் பூசி அலங்கரிப்போம் அதேபோல் கரகம் அலங்கரிக்கப்படுகிறது.
வீதி உலா அல்லது ஊர் வலம்:
அதன்பின் குழந்தை வளர்கிறது ஊரெல்லாம் சுத்துகிறது அதாவது நாம் வாழும் வாழ்வு.இதை புரியவைக்க ஒரு சின்ன சிலையை வண்டியில் வைத்துக்கொண்டு வீதி உலா நடத்தப்படுகிறது.
செடல் திருவிழா:
மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பேராசை, கடுங்கோபம், பொறாமை, கடும்பற்றுதல், உயர்வு தாழ்வு பார்த்தல் (மதம்), பழிவாங்குதல் போன்ற உணர்வுகள் அதிகமாகி சூலம், கத்தி, தடி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொள்வார்கள். இதனால் சிலர் காயங்களுடன் இருப்பார்கள் சிலர் இறந்துவிடுவார்கள்.பின்பு இறந்தவர்களை பாடை கட்டி தூக்கிச்செல்வார்கள்.இது செடல் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
மஞ்சள் விளையாட்டு:
அடுத்த நாள் உறவுக்காரர்கள் ஒருவர் மேல் மற்றொருவர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி (ஆன்டி பயாட்டிக்) குளிப்பார்கள்.இத்துடன் விழா நிறைவடைகிறது.
இதை ஏன் ஆடி மாதத்தில் கொண்டாட வேண்டும்?.

ஆடி மாதம்:
நமக்கு இரவு பகல் வருவது போல் பூமிக்கும் இரவு பகல் வருகிறது.இதில் பகல் காலத்தை உத்ராயன காலம் என்பர்.(அதாவது தை மாதம் முதல் ஆணி மாதம் வரை) இரவு காலத்தை தட்சாயன காலம் என்பர் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை).இதில் ஆடி மாதம் என்பது மாலை நேரம் அதாவது பகல் முடியும் நேரம் இரவு தொடங்கும் நேரம்.ஆடி மாதம் 18 நாட்களுக்கு பிறகு முழு இரவு காலம். ஆடி மாதம் 18 நாட்களுக்குள் கருவாகி உருவாகும் குழந்தைகள் பல துன்பங்களை அனுபவிக்கும், நிம்மதியாக வாழாது, பிறப்பதும் கடும் வெய்யில் காலமான சித்திரை மாதத்தில் பிறக்கும். இவைகளை தவிர்க்கவே புது பொண்ணு மாப்பிள்ளையை ஆடி பதினெட்டு வரை பிரித்து வைப்பார்கள்.பழைய பொண்ணு மாப்பிள்ளையை பிரிக்க முடியாது என்பதால் அம்மன் கோயில் திருவிழா கொண்டாடுவார்கள்.இக்காலக்கட்டத்தில் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது மீறி சேர்ந்தால் அது பாவச்செயல் ஆகும்.
மார்கழி மாதம்:
இது பூமிக்கு விடியற்காலம் நேரம் ஆகும்.இது மிகச்சிறந்த காலம் என்பதால் பூசைக்கு உகந்த காலம் என்பர்.இம்மாதத்தில் கருவாகி உருவாகும் குழந்தைகள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள் சிலர் மிகச்சிறந்த ஞானியாகவும் வருவார்கள்.அதனால்தான் இந்த மாதத்தில் ஐயர்கள் திருமணம் செய்துகொள்வார்கள்.
சூழ்ச்சி: மற்றவர்களை இந்த மாதம் பீடை மாதம் என்று சொல்லி அனைத்து நல்லக்காரியங்களையும் தவிர்க்கும்படி சொல்வார்கள்.
குறிப்பு:
நம் முன்னோர்கள் மனித இனம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வதர்க்காகவே  கோயில் கட்டி வழிபடும் முறைகளையும், திருவிழா மற்றும் சடங்கு முறைகளையும் கொடுத்துள்ளார்கள்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு