முருகன்


முருகன்: ராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகளைக்கொண்டு மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டிருந்தார்கள். இதை உணர்ந்த நம்ம ஊர் சித்தர்கள் ஒளவையார், திருமூலர் போன்றவர்கள் முருகனை உருவாக்கினார்கள்.முருகு என்றால் அழகு என்று பொருள்.குண்டலினி மேலே வந்தவுடன் ஆறு குணம் சீரமைக்கப்பட்டு அழகான குணம் வரும்.இதற்கு முருகன் என்று பெயரிட்டார்கள்.ஆறு தலை உடையவன் என்றும் சொல்வார்கள்.
ஞானப்பழம்: ஞானம் என்றால் அறிவு தெளிவு அல்லது அறிவு முதிர்ச்சி என்று சொல்லலாம். இதை புரியவைக்க சினிமாவில் மாம்பழத்தை காட்டினார்கள்.அதைப்பார்த்து சிலர் ஞானப்பழம் என்றால் மாம்பழம் என்று நினைக்கிறார்கள்.
தமிழ்கடவுள்: இவரை தமிழ் கடவுள் என்றும் தமிழில் மட்டுமே பூசை செய்யவேண்டும் என்றார்கள். அதாவது சமஸ்கிருதத்தில் பூசை செய்யக்கூடாது என்றார்கள்.காரணம் சமஸ்கிருதம் மனிதர்களிடம் வேறுபாடுகளை உருவாக்கியது என்பதால்.
வள்ளித்திருமணம்:மலைகளில் வாழ்பவர்கள் குறவர்கள். இவர்களை தாழ்ந்தவர்கள்என்றார்கள்.சித்தர்கள் பூமியுடைய தலை என்று மலைப்பகுதிகளை கருதி கதை எழுதுவது வழக்கம். சிவனின் தலையாக இமய மலையை கருதி தலையில் கங்கை நதி உள்ளது என்று கூறுகிறார்கள் அல்லவா, அதுபோல் தலையாகிய மலையில் ஏறிய முருகன் வள்ளிக்குறத்தியை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்தார் என்று கதை கட்டினார்கள். என்ன கதை கட்டினாலும் சமஸ்கிருத கதைக்கு முன்னால இந்த கதை எல்லாம் எடுபடவில்லை.சாதி வேறுபாடுகளும் ஒழியவில்லை, கோயில்களிலும் சமஸ்கிருத பூசைகளே நடந்துகொண்டிருக்கிறது.தமிழர்களுக்கு தன் மொழியை தாழ்வாகவும் மற்ற மொழியை உயர்வாகவும் நினைப்பது என்பது நீண்ட காலமாகவே உள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.
மயில்வாகனன்: நம் கையில் நாடி பார்க்கும்போது வாதம் மயில்போல் ஓடும் பித்தம் குயில்போல் ஓடும் கபம் ஆமைபோல் ஓடும். இதில் வாதம் என்பது காற்று பித்தம் என்பது சூடு கபம் என்பது நீர்.மூச்சு பயிற்சி செய்யும் போது மயில்போல் ஓடும் காற்றுதான் குன்டலினியை உச்சந்தலைக்கு கொண்டு செல்லும்.அதனால்தான் மயில்வாகனன் என்று பெயர்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு