தாய் மொழி


ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதவும் சரளமாக பேசவும் அறிந்த சிலரிடம் பின்வரும் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுக்கும்படி வேண்டினேன்.
இறைவன், கடவுள், தேவர்கள், தேவன், தெய்வம், ஆண்டவன் – அவர்கள் இந்த அனைத்து வார்தைகளுக்கும் காட் (God) என்ற ஒரே வார்த்தையை சொன்னார்கள்.இவைகள் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்ட வார்தைகள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.காரணம் தாய் மொழி அறியாமை.பின்பு எனக்கு தெளிவு ஏற்பட்டது எத்தனை மொழி கற்றாலும் தாய் மொழியில் கற்காத கல்வி அர்த்தமற்ற கல்வியே என்றும் அது அரை கல்வியே என்றும்.எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள் அது நல்லதே ஆனால் தாய் மொழி தெரியாமல் தாய் மொழியில் அர்த்தம் தெரியாமல் இருந்துவிடாதீர்கள். இங்கு தமிழை மட்டும் குறிப்பிடவில்லை அனைத்து மொழிக்கும் பொதுவாக சொல்கிறேன்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு