வர்ணாசிரமம் - Varnasiramam


வர்ணாசிரமம் பற்றி அறிந்துக்கொள்வோம்.

இதை தென்நாடாகிய நம் தமிழ்நாட்டில் சிவமடம் என்றும் சிலர் ஆண்டிகள் மடம் என்றும் சொல்வார்கள். சதுரகிரி, திருவாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இதுபோன்ற மடங்கள் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

இறைவனின் நேரடி தரிசனம் பெறவும் முனிவராக விரும்பியும் இந்த மடங்களுக்கு வருபவர்களை அவர்களின் கை ரேகை மற்றும் ஜாதகம் மூலம் அவர்களுக்கு அந்த விதி உள்ளதா என்று சோதித்து அதற்க்கான விதி இருந்தால் மட்டுமே மடத்தில் சேர்த்துக்கொள்வார்கள்

இது முனிவர் ஆவதற்கான பயிற்ச்சிபெறும் ஒரு கல்விக்கூடம் ஆகும். இந்த கல்விமுறை நான்கு படிகளை கொண்டது.


அவை தமிழில் சரியை, கிரியை, யோகம், ஞானம் இதை சமஸ்கிருதத்தில் நான்கு வர்ணம் சூத்ரியன், வைசியன், சத்ரியன், பிராமணன். 


அதில் முதல் நிலை தமிழில் சரியை சமஸ்கிருதத்தில் சூத்திரியன்:. ஆதாவது ஒரு கல்லு சிலையையோ செப்பு சிலையையோ போட்டோவையோ வைத்து இதுதான் தெய்வம், இதுதான் கடவுள், இதுதான் இறைவன் என்று நம்ப வைக்கும் நிலை. இதற்காக பல கதைகள் சொல்லி நம்பவும் வைப்பார்கள். இந்த முதல் நிலையில் உள்ளவர்களால் தன்னை உணர முடியாது.தான் உருவான விதம், தான் சாப்பிட்ட சாப்பாடு சீரண மண்டலத்தில் உயிர் பெறுவது போன்ற விடயங்களை கூட உணரமாட்டார்கள்.இவர்களுக்கு ஆசை, கோபம், பொறாமை, பற்றுதல், உயர்வு தாழ்வு பார்த்தல் (மதம்), பழிவாங்குதல் போன்ற உணர்வுகள் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் உள்ளவர்கள் முனிவராக விரும்பி ஆசிரமத்தில் சேர்ந்து அங்கு குருவாக இருக்கும் முனிவருக்கு சேவைகள் செய்வார்கள். (எ.கா) மூலிகைகள் சேகரிப்பது, அதை மருந்தாக்க தேவையான வேலைகளை செய்வது போன்றவை. மடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்வது மடத்தில் உள்ள மாடுகளை பராமரிப்பது போன்றவற்றை செய்யவேண்டும். மேலும் மூன்றாம் வகுப்பில் உள்ள (துறவிகளுக்கு) சுயநினைவு இல்லாதவர்களை காப்பதும் அவர்களுக்கு உணவளிப்பதும் இவர்களது பொறுப்பு. இதுவே பகவத்கீதை பதினெட்டாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. குருவுக்கு அவர்மீது நம்பிக்கை வந்தவுடன் அவருக்கு சில பயிற்சிகளை கற்றுத்தருவார். இதுதான் முதல் வகுப்பு பாடத்திட்டம்.
சூத்திரியன் என்றால் தாழ்ந்தவர் என்று அர்த்தம் இல்லை நன்றாக புரிந்துகொள்ளவும். 

இரண்டாவது நிலை தமிழில் கிரியை சமஸ்கிருதத்தில் வைசியன்.அதாவது தெய்வம் (உயிர், குண்டலினி) தன்னுள்ளே இருப்பதை உணர்ந்தவர்கள் அதை காண மூச்சு பயிற்சி (வேள்வி), யோகா செய்வார்கள்.
சிவ சமயத்தை சேர்ந்தவர்கள் குரு வழிகாட்டுதலின்படி மூச்சுப்பயிற்ச்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்வார்கள்.
வைஷ்ணவ சமயத்தை சேர்ந்தவர்கள் அரை மொட்டை அடித்துக்கொண்டு பூணூல் அணிந்துக்கொள்வார்கள். அதன்பின் வேதம் படிப்பார்கள். முனிவரானதும் துறவு ஏற்படும் அப்போது முழு மொட்டை அடிக்கவேண்டும் என்றார்கள். இதைதான் புத்த சமய துறவிகள் செய்கிறார்கள். ஆனால் சிவ சமயத்தவர் இப்படி செய்யமாட்டார்கள். அகத்தியர் வழிகாட்டுதலின்படி முனிவர் நிலையை அடைந்தவர்கள் தன்னை வேறுபடுத்தாமல் உலகத்தோடு ஒத்துவாழ்வார்கள் ( வேறுபடுத்த காவி உடை உடுத்துவார்கள்). குடும்பம் செய்பவர்கள் குடும்பி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் துறந்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

பகவத்கீதைப்படி இந்த இரண்டாம் வகுப்பில் உள்ளவர்கள் மடத்தில் உள்ள விற்பனை செய்யவேண்டியவற்றை விற்க வேண்டும் மேலும் மடத்திற்கு தேவையானவற்றை வாங்கிவரவேண்டும். இதுபோல பொறுப்புகளை பகிர்வது மடநிர்வாகத்திற்கு அவசியமாகிறது

பூணூல் – ஆசிரமத்தில் சேராதவர்களுக்கும் பூணூலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காலப்போக்கில் ஒரு கலையை கற்றுக்கொள்பவர்கள் அதன் அடையாளமாக பூணூல் அணிந்துக்கொள்வார்கள். (.கா.) வேதம் படிப்பவர்கள், ஆச்சாரியர் (ஆசிரியர் ஆவதர்க்காக படிப்பவர்கள்).
இதேபோல் ஒரு காரியம் நிறைவேற்ற சபதம் எடுப்பவர்கள் கங்கணம் கட்டிக்கொள்வார்கள். 

மூன்றாவது நிலை தமிழில் யோகம் சமஸ்கிருதத்தில் சத்திரியன். இந்நிலையில் குண்டலினி(உயிர்) மூல ஆதார சக்கரத்திலிருந்து நெற்றிக்கு வந்து நெற்றியில் (ஆக்கினை, சுழிமுனை) தீபச்சுடராக சுற்றும். அதாவது மூக்கு நுனியியை பார்த்துக்கொண்டே இருந்தால் மூக்கு கரைந்துவிடும்.இவ்வாறு செய்வதற்கு பதிலாகதான் வினாயகர் சதுர்த்தி என்று மண் பிள்ளையாரை கரைக்கிறார்கள்.பின்பு இரண்டு கண்களையும் மூடி இரண்டு கண் பார்வையையும் நெற்றியில் செலுத்தி பார்க்க வேண்டும்.அப்போதான் தீபச்சுடரை பார்க்க முடியும். இதற்கு நெற்றி கண் என்று பெயர். 
இந்த நிலையை அடைந்ததும் துறவு நிலை ஏற்படும். இதை இவ்வளவுதானா என்று முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டால் சுயநினைவு அற்றவர்களாக திரிவார்கள். இதையே சத்திரிய நிலை அல்லது பற்றற்ற நிலை என்று சொல்வார்கள் அதனால் இந்நிலையில் உள்ளவர்கள் அடுத்தநிலையான ஞானநிலைக்கு செல்ல முயற்சிப்பது அவசியம்.  

நான்காவது நிலை தமிழில் ஞானம், சமஸ்கிருதத்தில் பிராமணன். இந்நிலைக்கு சிவ நிலை, சித்த நிலை, ஞான நிலை, முனிவ நிலை என்றும் அழைப்பார்கள். குண்டலினியை உச்சந்தலைக்கு(துரிதம்) ஏற்றிய பின்பு பிடரியில் வெளிச்சத்தை பார்க்கலாம். பின்பு நேரம் கிடைக்கும்போது சுழிமுனையை பார்க்க கிருஷ்ணன், ராமர் நிறத்தில் ஒளிவட்டம் தெரியும்.அப்போது ஆறு குணம் சீரமைக்கப்பட்டு தெய்வ தரிசனம் தினமும் காண முடியும். இந்த நிலையை கோடியில் ஒருத்தன் அல்லது கோடான கோடியில் ஒருத்தனால் மட்டுமே அடைய முடியும். இந்த நிலையை அடைந்தவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர். இந்த நிலையை அடைந்தவர்கள் சிவன், நந்தி, அகத்தியர், திருமூலர் போன்றவர்கள் பலர் நம் பகுதியிலும் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் பகுதியில் வால்மீகி, வியாசர் போன்றவர்கள்.
பிராமணன் என்றால் தமிழில் முனிவர், ஐயர், சான்றோன், ஞானி, இருடி, ஆன்றோன், தவசீலன், தவோபதி, சித்தன் என்று பல பெயர்கள் உண்டு. முனிவர்கள் உயர்வு தாழ்வு பார்க்கமாட்டார்கள். மனிதனையே மற்ற உயிரினம்போல் ஒரு இனமாகதான் கருதுவார்கள். 

இந்த நிலையை அடைந்தவர்கள் தவம் செய்து அதன்மூலம் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு உபதேசிக்கவேண்டும் மேலும் மற்ற மூன்று வர்ணத்தவர்களுக்கும் குருவாக இருந்து ஆசிரமத்தை வழிநடத்த வேண்டும்.
தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது எவ்வளவு அவசியம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மற்ற மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதற்கு நிகரான தாய்மொழியில் உள்ள வார்த்தையையும் அறிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் உண்மையான வேறுபாடு இல்லா வாழ்வு வாழமுடியும்.

நமக்கு எப்படி சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதற்கு அர்த்தம் தெரியாதோ அதேபோல் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கும் சூத்ரியன், வைசியன், சத்ரியன், பிராமணன் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. இப்படி புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டால் எப்படி சொல்லமுடியும். 

சமஸ்கிருதத்தில் பத்தினி என்றால் தமிழில் மனைவி என்று அர்த்தம். திருமணமான அனைத்துப்பெண்களுமே பத்தினிதான் (மனைவிதான்) அவரது கனவருக்கு. இதுக்கு தமிழில் புது அர்த்தம் கட்டி பெண்களுக்கு எவ்வளவு மன கஷ்டங்கள்.

அனைவரது மனைவியும் பத்தினியே புரிந்துகொள்ளுங்கள். 

தற்போது ஆங்கில மோகம் அறிவுகுறைபாடுகளை உருவாக்குகிறது. 25 வயதுவரை படித்தோம் ஆனால் சளியை குணப்படுத்தக்கூட தெரியாத நிலை. பல இல்லாத நோய்களுக்கு சாகும்வரை மாத்திரைகள் சாப்பிடுவதை அறிவியல் வளர்ச்சி என்கிறோம். நம் முன்னோர் அறிவியலில் எந்த நோயாக இருந்தாலும் 48 நாட்கள் மட்டுமே மருந்து சாப்பிடவேண்டும். பல நோய்கள் விரதம் இருந்து குணப்படுத்திவிடலாம். 

இது தாய்மொழியின் அவசியம் புரியவைக்கவே. புரிதலுக்கு நன்றி.

கருத்துகள்

கருத்துரையிடுக

லேபிள்கள்

மேலும் காட்டு