வேதமும் மஹாபாரதமும்


கர்ணன்: சூரியனின் பிள்ளை. அதாவது சிம்ம ராசிக்காரன். இவன் அதர்மத்திற்கு அரசன்.அதாவது சிம்மராசிக்காரனுக்கு பேராசை, கடுங்கோபம், பொராமை, கடும்பற்று, உயர்வு தாழ்வு பார்த்தல் பழிவாங்குதல் போன்ற குணங்கள் மேலோங்கி இருக்கும்.ஏகனாய் பிறந்திருப்பான் அல்லது சகோதரனுடன் பிறந்திருந்தால் சாகும்வரை சேர்ந்து வாழமாட்டான்.இதில் கர்ணன் சேர்ந்து வாழவில்லை.எவனாவது திரமையாக எதாவது செய்தால் அவனுக்குமட்டும்தான் தெரியுமா அவனை விட சிறப்பாக நான் செய்கிறேன் பார் என்று போட்டியிடுவான்.அர்ச்சுனனுடன் போட்டியிடுவான்.பெண்ணை இழிவுப்படுத்தி ரசிப்பான்.பாஞ்சாலி சேலையை உருவும்போது ரசிப்பதுபோல்.பேராசை உடையவனே இவனுக்கு நண்பன் ஆவான் துரியோதினன் போல. இவனுக்கு வணக்கம் போடவில்லை என்றால் கூட நிம்மதி இழந்துவிடுவான் பழிவாங்க துடிப்பான். மொத்தத்தில் நரகத்தில் வாழக்கூடியவன்., எந்த அளவுக்கு துன்பத்தை அனுபவிப்பார்கள் என்றால் தாய் தந்தை யார் என்று தெரியாதவர்கள் சமூகத்தில் எவ்வளவு அவமானங்களை சந்தித்து துன்புறுவார்களோ அந்த அளவுக்கு துன்புருவார்கள். பெண்ணின் சேலையை உருவி இழிவுப்படுத்தினால் எப்படி இருக்கும் அந்த அளவுக்கு இவர்கள் மற்றவரை இழிவுப்படுத்தி ரசிப்பார்கள். கடைசி காலத்தில் செய்த பாவங்களுக்காக நீண்ட காலம் துன்பத்தை அனுபவித்து இறப்பார்கள்.
சொர்க்கம்: கட்டுபாடுடைய மனம் (சுவர்+அகம்). இந்த மனம் உடையவர்கள் சந்தோஷமாக நிம்மதியாக இருப்பார்கள், மற்றவர்களையும் நிம்மதியாக வைப்பார்கள்.தனது தேவை என்ன என்று அறிந்தவர்கள்.நல்ல மனதுடன் கூடிய உடலை சொர்க்க உலகம் என்பார்கள்.
நரகம்: கெட்ட மனம் (நர+அகம்). தானும் நிம்மதியாக இருக்கமாட்டார் மற்றவர்களையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார்.தனக்கு என்ன தேவை எவ்வளவு தேவை என்று அறியாதவர்கள். கெட்ட மனதுடன் கூடிய உடலை நரக உலகம் என்பார்கள்..
துரியோதினன்:சிம்மராசிக்காரருக்கு பேராசை உடைய ஒருவன்தான் சிறந்த நண்பனாக இருப்பான்.சிம்மராசிக்காரரை பயன்படுத்தி தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

பீஷ்மர்:இவரை கங்கையின் மைந்தன் என்பர். அதாவது கங்கை நதிக்கு மனித குழந்தை பிறக்கவில்லை, கதையில் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. இவர் எட்டாவது குழந்தை ( எட்டாம்பேர்).
வேதம்: எட்டாவதாக பிறந்தவர்கள் தன்னுடைய குடும்பவாழ்வை சிறப்பாக வாழமாட்டார்கள். அதர்மக்காரர்களுக்கே துணையாக பாதுகாவலராக இருப்பார்.இவர்களது குடும்ப அங்கத்தினர்களே அதர்மிகளாக இருப்பர்.இவர் சொல்லை அவர்கள் மதிக்கமாட்டார்கள். பலதிரமைகள் உடையவர். நீண்டநாள் வாழக்கூடியவர். செய்த பாவங்களுக்காக நீண்டநாட்கள் நொந்து வேதனையடைந்து துன்புற்று இறப்பார்கள்.


அர்ச்சுனன் :இவர் தனுசுராசிக்காரர். தனுசு என்பது குரு வீடு. இவர் அதர்மத்தை அழிக்கும் திறன் படைத்தவர். நல்ல குணம், பண்புகள், தர்மத்தை  உணரக்கூடியவர்கள். நிம்மதியாக வாழ்பவர்கள்.அதாவது சொர்க்க உலகத்தில் வாழ்பவர்கள்.
அதாவது உடல் என்பது ஒரு உலகம். நல்ல எண்ணங்கள் உள்ள உடல் சொர்க்க உலகம். கெட்ட எண்ணங்கள் உள்ள உடல் நரக உலகம்.'


துரிதராஷ்டிரன்: இவரது தாயார் உடலுறவில் ஈடுபடும்போது அருவருப்பான எண்ணத்தில் இருந்ததால் குருடாக பிறந்தார்.

பாண்டு:இவரது தாயார் பயந்தநிலையில் உடலுறவில் ஈடுபட்டதால் வெண்மையாக பிறந்தார்.

விதுரன்:இவரது தாயார் இன்பமாக உடலுறவில் ஈடுபட்டதால் குறையில்லாமல் ஞானத்துடன் பிறந்தார்.
தெளிவு: உடலுறவில் எந்த எண்ணத்தில் ஈடுபடுகிறார்களோ அதற்கேற்ப குழைந்தை பிறக்கும்.

அம்பை:இவர் பழிவாங்கும் எண்ணத்துடன் உயிர் துறந்ததால் மீண்டும் பிறந்து பழிவாங்கி தனது எண்ணத்தை நிறைவேற்றுகிறார். அதாவது எந்த எண்ணத்துடன் உயிர் பிரிகிறதோ அதே எண்ணத்துடன் மறுஜென்மம் எடுக்கும்.
ஆயக்கலைகள் ஆறுபத்திநான்கில் வேதம் என்பது ஒரு முக்கியகலை. வேதம் என்பது ஆறாவது உணர்வு பகுத்துணர்வு பற்றி சொல்வது. அதாவது என்ன செய்தால் என்ன நடக்கும் என்பதை உணர்த்துவது.ஆறு உணர்வு (Sense) என்பதைதான் ஆறு அறிவு (Knowledge) என்கிறார்கள். வேதத்தை பற்றி முழுமையாக எனக்குத்தெரியாது. அறிந்தவற்றை எழதியுள்ளேன். அதுவே மேலே குறிப்பிட்டுள்ளவை கோயில்(உடல்) பற்றியும் மகாபாரதத்தின் சிறுதுளியும். மற்றவற்றைப்பற்றி அறிய இன்னும் தவம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. அறிந்தவுடன் தெறிவிக்கிறேன். எங்கேனும் இவற்றை பற்றி பேச வாய்ப்பு கிடைத்தால் தெளிவாக சொல்ல இயலும்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு