ஆறறிவு

ஆறறிவு என்றால் என்ன? ஏழாம் அறிவு என்பது சாத்தியமா?

மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு உள்ளதா?

அறிவு என்றால் ஆங்கிலத்தில் knowledge என்று சொல்வார்கள். இது யார் யாருக்கு எத்தனை அறிவு உள்ளது என்று அவர்களுக்கே தெரியாது. பொதுவாக எத்தனை விஷயங்கள் தெரிகிறதோ அத்தனை அறிவு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சரி தற்போது ஆறு அறிவுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

1. ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே - அதாவது தொட்டுப் பார்த்து அறிந்து கொள்வது.

2. இரண்டு அறிவதுவே அதனொடு நாவே – அதாவது நாக்கால் ருசித்து அறிந்துகொள்வது.

3. மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே - அதாவது மூக்கால் நுகர்ந்து அறிந்து கொள்வது.

4. நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே - அதாவது கண்ணால் பார்த்து அறிந்து கொள்வது.

5. ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே - அதாவது காதால் கேட்டு அறிந்து கொள்வது.

6. ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே - அதாவது மனதால் அறிந்து கொள்வது.

இந்த ஆறு வகையில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். அறிவது அதாவது அறிந்துகொள்வது.

அதனால் ஏழாவது வகை அறிதல் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று.

இந்த 6 வகை அறிதல் அனைத்து உயிர்களுக்கும் உள்ளது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் மனம் இல்லாமல் எந்த உயிராவது உணவருந்த முடியுமா, இனப்பெருக்கம் செய்ய முடியுமா, இடம் விட்டு இடம் பெயர முடியுமா. எடுத்துக்காட்டாக கரையான் புற்று கட்டுகிறது, மனம் செயல்படவில்லை என்றால் அதனால் எவ்வாறு புற்று கட்ட முடியும். எரும்பு உணவு சேமிக்கிறது, மனமற்ற உயிர் எவ்வாறு உணவு சேமிக்கும். பறவைகளும் கூடுகட்டி வாழ்வதையும் பார்த்திருப்பீர்கள். தாவரங்களும் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டு இனப்பெருக்கம் செய்கின்றன வளர்ச்சி அடைகின்றன. இதில் குறை ஏதும் இருந்தால் தமிழறிஞர்கள் கோபப்படாமல் தெளிவு படுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொல்காப்பியம் சூத்திரம் – 1517.

பிங்கல நிகண்டு ஐந்தாவது ஆடவர் வகை சூத்திரம் 367 முதல் 372 வரை.

மேலே சொல்லப்பட்ட சூத்திரங்களில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த தெளிவுரையை எனது மனம் ஏற்காத காரணத்தினால் இந்த தெளிவுரையை நான் எழுதியுள்ளேன்.

நன்றி வணக்கம்.

இது பிடித்திருந்தால் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும் அதாவது லைக் செய்யவும், மற்றவர்களுக்கும் பகிரவும் அதாவது ஷேர் செய்யவும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

லேபிள்கள்

மேலும் காட்டு