பலி இடுதல்


பலி இடுதல்:

ஒரு இனம் மற்றொரு இனத்தை கொன்று தின்று வாழ்வதே இயற்கை. இது தவிர்க்க இயலாத ஒன்று. இதில் மாமிசம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்காது என்றாலும் ஒரு சிலர் மனது மாமிசத்தை விரும்புகிறது. அப்படிப்பட்டவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தரப்பரிசோதனை முறை. அதாவது ஒரு ஆட்டின் மேல் நீரை ஊற்றினால் அது ஆரோக்கியமான ஆடாக இருந்தால் சிலிர்த்துக்கொண்டு நிக்கும். இதுபோன்ற ஆடுகள் உண்ண தகுந்தவை. சிலிர்க்காமல் அப்படியே நின்றால் அது நோய்வாய்பட்ட ஆடு, அதை சாப்பிடக்கூடாது. கொல்லும்போது சித்திரவதை செய்யக்கூடாது. கருனை அடிப்படையில் ஒரே வெட்டில் கொல்வார்கள். இரத்தத்தில் செல்களின் கழிவுகளும் கலந்து இருப்பதால் இரத்தத்தை சாப்பிடாமல் கீழே ஊற்றிவிடுவார்கள். இதற்கு ஆண் இனம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (எ.கா ஆட்டுகிடாய், சேவல்). காரணம் பெண் இனம் இருந்தால்தான் இனவிருத்தி செய்யமுடியும். இதே போல்தான் மனித இனத்திலும் ஆண்கள் மட்டுமே போருக்கு செல்லவேண்டும், பெண்கள் காக்கப்படவேண்டும்.

குறிப்பு: எந்த இனத்தை சாப்பிட விரும்புகிறோமோ அந்த இனத்தை முதலில் வாழவைக்க வேண்டும் பின்பு அதில் சிறிதளவு எடுத்து உணவாக்கலாம்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு