யுகங்கள்


யுகங்கள்:

இதை படிக்கும்போது நாம் கருவாகி உருவானது முதல் முதுமையடைந்து இறப்பது வரை கற்பனை செய்துகொள்ளவும்

கிருத யுகம் – பூமியின் குழந்தை பருவம் – 4800 x 360 = 17,28,000 வருடங்கள். இதில் உடல் வளர்ச்சி அடையும்.

திரேதா யுகம் – பூமியின் விடலை பருவம் – 3600 x 360 = 12,96,000 வருடங்கள். இதிலும் உடல் வளர்ச்சி அடையும்.

துவாபர யுகம் – பூமியின் இளமை பருவம் – 2400 x 360 = 8,64,000 வருடங்கள். இதில் உடல் அதே நிலையில் இருக்கும். வளராது.

கலி யுகம் – பூமியின் முதுமை பருவம் – 1200 x 360 = 4,32,000 வருடங்கள். இதில் என்னதான் ஆரோக்கிய உணவுகள் சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்காது. தோல் சுருங்கும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். இதுவே தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது. தற்போது 5118 ம் வருடம் நடந்துகொண்டிருக்கிறது. அப்போ மீதம் உள்ள ஆண்டுகள் வரை மனித இனம் இருக்குமா என்றால் இருக்காது. நம்மை சுற்றி உள்ள இயற்கையை உற்று கவனியுங்கள் உண்மை புரியும். அன்னப்பறவை அழிந்தது, சிட்டுக்குருவி, பச்சைக்கிளி போன்ற இனம் அழிந்துக்கொண்டே வருகிறது. சில புதிய இனம் உருவாகி வருகிறது. இதேபோல்தான் மனித இனமும். முன்பு இருவர் சேர்ந்து பத்து பதினாறு குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள், தற்போது இருவர் சேர்ந்து இரண்டு அதுவும் குறைந்து ஒன்று என்று ஆகிவிட்டது. அதுவும் தாய்ப்பால் மற்றும் பாசத்தை கொடுக்க முடியாத அதர்ம தாய்மார்கள். இதிலேயே புரிந்திருக்கும் தர்மத்தின் நிலை என்னவென்று. மேலும் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.  

கருத்துகள்

  1. என்னய்யா நம்ப முடியலா?குறிஞ்சி(கிருதம்),முல்லை(திரேதம்),மருதம்(துவாபாரகம்),நெய்தல்(சத்தியம்),பாலை(கலி).

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

லேபிள்கள்

மேலும் காட்டு