உண்மைகள்
முன்னுரை
எனக்கு உபதேசம் செய்து எழுத தூண்டிய இறைவனை போற்றி வணங்கி
இத்தொகுப்பினை தொடங்குகிறேன்.இதில் சொல்லப்படும் அறிவியல் அனைத்தும் குறைந்த
பட்சம் 7000 ம் ஆண்டுகளுக்கு முன்பானவை, சம்பவங்கள் அனைத்தும் 5000 ம்
ஆண்டுகளுக்கு பின்பானவை.தற்கால புத்தகங்களில் உள்ளவற்றை இத்துடன் ஒப்பிட்டு
குழப்பிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் தற்போதைய மனிதர்களிடம் இரண்டு சதவிகிதம்
மட்டுமே (2/100 = 2%) உண்மை, சத்தியம், தர்மம் உள்ளது மற்றவை பொய், உண்மைக்கு புறம்பான
மனிதர்கள், உண்மைக்கு புரம்பான பாடத்திட்டம் மற்றும் விளம்பரங்கள். இது வியாச
முனிவர் காலத்தில் ஐந்து சதவிகிதமாகவும் (5/100 = 5%) வால்மீகி முனிவர் காலத்தில்
பத்து சதவிகிதமாகவும் (1/10 = 10%) இருந்திருக்கிறது.
எ.கா:
டித்தவர்கள்:
பாடப்புத்தகத்தில் உள்ளவற்றையும் கூகுலில் உள்ளவற்றையும் படித்துவிட்டு எனக்கு எல்லாம் தெரியும்
என்பவர்கள் படித்தவர்கள். பாடப்புத்தகத்தில் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது
நியூட்டன் என்று உள்ளது, இதை படித்தவர்கள் இதையே உண்மை என்று நம்புகிறார்கள். இவர்
பிறந்தது இங்கிலாந்து என்று படிக்கும்போது ஆங்கிலேயர்கள்தான் அறிவாளி என்பதுபோல்
தோன்றும் இதனால் ஆங்கில மோகம் அதிகரிக்கிறது. மருந்து மாத்திரை இல்லாமல் எளிதில் குணமாகக்கூடிய
நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு சாகும் வரை மருந்து மாத்திரை சாப்பிடுவதா
அறிவு வளர்ச்சி?.
வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அறிவு மற்றும் மருந்தில்லா
மருத்துவம் பற்றி தெரிந்துகொள்ள ஹீலர் பாஸ்கர் அவர்களின் பேச்சை கேளுங்கள்.மேலும்
விபரங்களுக்கு anatomictherapy.org என்ற வெப்சைட்டை பாருங்கள்.
சிந்திக்க:
சிறிது அறிவுபூர்வமாக அறிவியலையும் வரலாற்றையும் ஒப்பிட்டு
சிந்திப்போம்.
நியூட்டன் பிறந்தது கி.பி.1643 என்று படித்தோம்.373
வருடங்கள்கூட நிறைவடையவில்லை.
தஞ்சை பெரிய கோயில் கட்டி 1200 வருடங்கள் ஆகின்றது.கல்லனை கட்டி 2000 வருடங்கள் ஆகின்றது.
புவியீர்ப்பு விசை என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாமலா
இக்கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கும், சிந்தித்து பாருங்கள்.
சிலர் சொல்கிறார்கள் நியூட்டன்தான் சூத்திரத்தை (Formula)
உருவாக்கி கொடுத்தார் என்று.
நம் முன்னோர்களிடம் இதைவிட சிறந்த சூத்திரம் இருந்திருக்கிறது,
ஆயக்கலை 64 ல் கட்டிடக்கலையும் ஒரு கலை என்பதையும், அதில் அனைத்து விதிமுறைகளும்
உள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இவைகள் ஆட்சியாளர்கள் மாறி மாறி
ஆட்சிசெய்யும்போது அவரவர் சமய கொள்கைகலும் அறிவியலும் திணிக்கப்பட்டு இங்கிருந்த
அறிவியல் அழிக்கப்பட்டது.இதனால் நமது முன்னோர்களின் அறிவியல் நமக்கு தெரியாமல்
போய்விட்டது.இங்கு நம் முன்னோர்கள் மட்டுமே அறிவாளி என்று சொல்லவில்லை, உலகில்
உள்ள அனைவருடைய முன்னோர்களுமே அறிவாளிகள்தான்.உதாரணங்களை ஏராளமாக சொல்லலாம் ஆனால்
மேலே உள்ளவை அனைவரும் அறிந்தது என்பதால் புவியீர்ப்பு விசையை உதாரணமாக
எடுத்துக்கொண்டேன்.
தாய் மொழி:
ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதவும் சரளமாக பேசவும் அறிந்த
சிலரிடம் பின்வரும் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுக்கும்படி
வேண்டினேன்.
இறைவன், கடவுள், தேவர்கள், தேவன், தெய்வம், ஆண்டவன் – அவர்கள்
இந்த அனைத்து வார்தைகளுக்கும் காட் (God) என்ற ஒரே வார்த்தையை சொன்னார்கள்.இவைகள்
வெவ்வேறு அர்த்தங்கள் கொண்ட வார்தைகள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.காரணம் தாய்
மொழி அறியாமை.பின்பு எனக்கு தெளிவு ஏற்பட்டது எத்தனை மொழி கற்றாலும் தாய் மொழியில்
கற்காத கல்வி அர்த்தமற்ற கல்வியே என்றும் அது அரை கல்வியே என்றும்.எத்தனை மொழி
வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள் அது நல்லதே ஆனால் தாய் மொழி தெரியாமல் தாய்
மொழியில் அர்த்தம் தெரியாமல் இருந்துவிடாதீர்கள். இங்கு தமிழை மட்டும்
குறிப்பிடவில்லை அனைத்து மொழிக்கும் பொதுவாக சொல்கிறேன்.
வேண்டுகோள்:
பின்வரும் தொகுப்பை படிக்கும்போது ஏதோ மதம் சார்ந்து
எழுதியுள்ளதாக நினைக்க வேண்டாம்.நான் மதம் சார்ந்து எப்பொழுதும் எழுதவோ பேசவோ
மாட்டேன்.ஏனென்றால் மதம் என்பது உயர்வு தாழ்வு பார்க்கும் குணத்தை குறிக்கும் சொல்
ஆகும். என்னை பொருத்தவரை இறைவன் ஒருவனே, இறைவனுக்கு சூட்டப்பட்ட பெயர்தான் ஒவ்வொரு
மொழியிலும் பகுதியிலும் வெவ்வேறாக இருக்கிறது. இங்கு முழுமையாக சொல்லப்படுவது நம்
முன்னோர்களின் அறிவியல் பற்றி என்பதை நினைவில் கொள்ளவும்.அதுபோல் முழுமையாக
படிக்காமல் முடிவுக்கு வரவேண்டாம்.பின்வரும் தகவல்களை எவரேனும் சொல்லியிருந்தாலோ
எழுதியிருந்தாலோ இங்கு நான் எழுதவேண்டிய அவசியம் இருக்காது.ஆனால் இதுவரை இவற்றைப்பற்றி
எவரும் சொல்லவுமில்லை எழுதவுமில்லை என்பதால் நான் எழுதுகிறேன்.
சமயம்:
சிவன் சொன்ன வழியை பின்பற்றினால் அது சிவ (சைவ) சமயம். சிவ
என்பது வேற்று மொழியினரின் உச்சரிப்பில் சைவ என்று மாறிவிட்டது. புத்தர் சொன்ன
வழியை பின்பற்றினால் அது புத்த சமயம்.ஏசுநாதர் சொன்ன வழியை பின்பற்றினால் அது
கிரிஸ்துவ சமயம்.நபிகல்நாயகம் சொன்ன வழியை பின்பற்றினால் அது இஸ்லாமிய
சமயம்.இவற்றை மதம் என்று சொல்லக்கூடாது.சிலர் தந்தை, தாய் மற்றும் முன்னோர்களை,
சிலர் நல்லாட்சி செய்தவர்களை (ஆண்டவர்) பின்பற்றி வணங்குவார்கள்.
இறைவனை எந்த வடிவில் எந்த பெயரில் வணங்க விருப்பமோ அப்படியே
வணங்குங்கள்.ஆனால் உண்மையாய் இருங்கள், சத்தியம், தர்மம் மற்றும் அற நெறியுடன்
இருங்கள்.
நம் முன்னோர்களின்ஆன்மீகஅறிவியல்
பரமேஸ்வரனாகிய சிவனால் அருளப்பட்டு
காலத்தால் அழிக்கப்பட்ட உண்மைகள்
உன்னையே நீ அறிந்தால் அதுவே ஆன்மிகம்.
உன்னையே நீ உணரும்போது மற்ற உயிரினங்களை பற்றியும்
உலகத்தை பற்றியும் தானே புரிந்துவிடும். இதோ உன்னையே நீ உணரும் வழி. இது பரமேஸ்வரரால்
அருளப்பட்டது. உலகெங்கும் மனிதர்கலும் அறிவியலும் இருந்தாலும் நாம் இங்கு அலசி
ஆராய இருப்பது நம் முன்னோர்களின் (ஆதி தமிழனின்)அறிவியல் பற்றி. ஆதி என்ற
வார்த்தைக்கு தொடக்கம் என்று அர்த்தம்.
உடலை கோயில் என்றும் உயிரை தெய்வம்
என்றும் சொன்னார்கள்.உயிரின் உருவத்தை புரிய வைக்க பெண் வடிவத்தில்
காட்டினார்கள்.உயிரும் உடலும் சேர்ந்து உள்ளது என்பதை ஆணும் பெண்ணும் சேர்ந்த
அமைப்பாக காட்டினார்கள் (எ.கா) சிவனும் சக்தியும் இணைந்த அமைப்பாக காட்டினார்கள்.
ஆணின் உடல் அமைப்பை சிவன் கோயில்
என்றும் பெண்ணின் உடல் அமைப்பை அம்மன் கோயில் என்றும் கோயில் கட்டினார்கள்.
இதை படிக்கும்போது மனித இனத்தில் மட்டுமே
ஆண் பெண் இருப்பதாக நினைக்கக்கூடாது. சிறிய அணுவை உடைத்தால் கிடைக்கும் சிறிய உயிர்
முதல், காற்றை உடைத்தால் கிடைக்கும் சிறிய மூலக்கூறுகள் முதல், நமது உடலாக மற்றும்
உடலில் உள்ள செல்கள், நாம், செடி, கோடி, புழு, பூச்சி, விலங்குகள், தாவரங்கள் வாழ்வது
பூமியில், பூமி சூரியன் சந்திரன் வாழ்வது அகாண்டத்தில், அகாண்டம் வாழ்வது அடுத்த அடுக்கு
(பெயர் தெரியவில்லை ) இப்படி ஏழாவது அடுக்கான பெரிய உடல் (இதுவே பரமசிவன்) அனைத்துமே
ஆண் பெண் கூட்டுத்தொகுப்பே. புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
சரி உடலுக்கும் கோயிலுக்கும் உள்ள
தொடர்பை இப்போது பார்க்கலாம்.
ஆணின் உடல் அமைப்பை சிவன் கோயில் என்றும் பெண்ணின் உடல் அமைப்பை அம்மன் கோயில் என்றும் கோயில் கட்டினார்கள்.
இதை படிக்கும்போது மனித இனத்தில் மட்டுமே
ஆண் பெண் இருப்பதாக நினைக்கக்கூடாது. சிறிய அணுவை உடைத்தால் கிடைக்கும் சிறிய உயிர்
முதல், காற்றை உடைத்தால் கிடைக்கும் சிறிய மூலக்கூறுகள் முதல், நமது உடலாக மற்றும்
உடலில் உள்ள செல்கள், நாம், செடி, கோடி, புழு, பூச்சி, விலங்குகள், தாவரங்கள் வாழ்வது
பூமியில், பூமி சூரியன் சந்திரன் வாழ்வது அகாண்டத்தில், அகாண்டம் வாழ்வது அடுத்த அடுக்கு
(பெயர் தெரியவில்லை ) இப்படி ஏழாவது அடுக்கான பெரிய உடல் (இதுவே பரமசிவன்) அனைத்துமே
ஆண் பெண் கூட்டுத்தொகுப்பே. புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
வினாயகர் – மூக்கு:
உடலில் வாய்க்கு முன்னாடி மூக்கு
இருக்கும் அதேபோல் கோயிலில் நுழை வாயிலின் முன்பு பிள்ளையார் இருக்கும்.சிவனின்
பிள்ளை என்பதால் மறியாதையாக பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறது.வடக்கே தலை வைத்து
தூங்கக்கூடாது (தூங்கினால் நிம்மதி இருக்காது) என்பதை மக்களுக்கு உணர்த்த யானை தலை
வைத்து கதை கட்டினார்கள்.
சரியை மற்றும் கிரியை நிலையில் உள்ளவர்கள்
கோயிலுக்கு சென்று விநாயகரை முறைப்படி வழிபடவும். யோகம் மற்றும் ஞான நிலையை அடைந்தவர்கள்
மூக்கு நுனியை இரண்டு கண்களாலும் பார்க்கவும், மூக்கு முழுமையாக மறைந்தவுடன் (கரைந்தவுடன்)
கண்களை மூடி ஆக்கினை சக்கரத்தை (தீபச்சுடரை ) பார்க்கவும். இப்போது ஞானம் கிடைக்கத்தொடங்கிவிடும்.
மண் பிள்ளையார் செய்து அதை கரைப்பதால்
ஞானம் கிடைக்காது. சதுர்த்தி திதி ஞானம் பெறுவதற்கு முயற்சிக்க சிறந்த திதி ஆகும்.
புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நந்தி – கண்டம்:
வாய்க்கு பிறகு ஆண்களுக்கு கண்டம்
(தொண்டையில்) இருக்கும்.கோயிலில் நந்தி இருக்கும்.நந்தீஸ்வரன் மனித வடிவில்
இருந்தவர்தான்.இவர் சிவனின் முதல் சீடன்.இவரை சிவன் தனது உயிருக்கு நிகராக
மதித்தார் மனித இனம் எப்பொழுது அழியும் என்றால் மாட்டு இனம் அழியும் போது மனித
இனம் தானாகவே அழியும்.மாட்டு சானத்தை பயன்படுத்திதான் விவசாயம் செய்ய முடியும்,
மருந்து போட்டு பயிர் செய்தால் மண் வளம் அழியும் அதோடு மனித வளமும்
அழியும்.மனிதனின் கண்டத்தை நெரித்தால் இறந்துவிடுவான் அதுபோல் மாட்டை அழித்தால்
மனித இனமே அழியும்.இதை புரிய வைக்க நந்தி மாடு வடிவில் வைக்கப்பட்டுள்ளது.ஆணாக
இருப்பதால் காளை மாடு வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.காளை மாடு பசு மாடு என்று
வேறுபடுத்த வேண்டாம்.இரண்டும் இருந்தால்தான் இனம் தழைக்கும்.
பெண் உடல் அமைப்பில்
கண்டம் இல்லை அதனால் அம்மன் கோயிலில் நந்தி இருக்காது.
ஆயிரம் கால் மண்டபம் - எலும்பு மண்டலம்
நரம்பு மண்டலம்:
எலும்பு மண்டலம் நரம்பு மண்டலம் உள்ளதை புரிய வைக்க ஆயிரம் கால் மண்டபம்.
சீரண மண்டலம்:எலும்பு மண்டலம் நரம்பு மண்டலம் உள்ளதை புரிய வைக்க ஆயிரம் கால் மண்டபம்.
வேக வைத்தோ அல்லது வேக வைக்காமலோ,
நாம் சாப்பிட்ட உணவிற்கு ஜீரண மண்டலத்தை கடந்த பின் உயிர் பெற்று வெவ்வேறு வகையான
உயிரினமாக (எ.கா. சக்கரை, கொழுப்பு, கால்சியம்) வந்துவிடுகிறது பின்பு இரத்தத்தின்
மூலம் அனைத்து உறுப்புகலுக்கும் செல்கிறது. நம் உடலில் உள்ள செல்கள் அவற்றை
பிடித்து சாப்பிடுகின்றன.வெளி உலகில் ஒரு இனம் மற்றொரு இனத்தை சாப்பிட்டு
வாழ்கின்றன (தாவரத்தை மனிதன், விலங்குகள், பறவைகள் சாப்பிடுவதை போல).நம் உடலில்
உள்ள செல்களும் இனப்பெருக்கம் செய்கின்றன, தினமும் பிறப்பதும் இறப்பதும் நடந்து
கொண்டே இருக்கின்றன.இதையே அண்டமெல்லாம்
பிண்டத்துக்குள் அடக்கம் என்றார்கள்.இது தெளிவாக புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு
உடலும் ஒரு உலகம் என்பது புரியும்.இதை புரிய வைக்கும் விதமாக கோயில் கோபுரத்தில்
அனைத்து விதமான சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் - தேவர்கள்:
ஆண் செல் தேவன் பெண் செல் தேவி அல்லது
தேவதை.இரண்டு செல்களும் சேர்ந்து குட்டி போட்டு குட்டி போட்டு உடல் உறுப்புகள்
அனைத்தும் உருவானது.இப்படி ஒரே இனம் மீண்டும் மீண்டும் சேரும்போது வேறு வேறு
உறுப்புகள் உருவானதுஅல்லவா.இந்த காரணத்தினால்தான் மனிதனை ஒரே உறவுக்குள் திருமணம்
செய்யக்கூடாது என்றார்கள் (எ.கா. அண்ணனும் தங்கையும்).ஒரு சராசரி மனிதனின் உடலில்
உள்ள செல்களின் எண்ணிக்கை முப்பது முக்கோடி (மூன்றுக்கு அருகில் இருபத்தி இரண்டு
ஜீரோ சேர்த்தால் அதற்கு முப்பது முக்கோடி – 30000000000000000000000 - தமிழில்).
இதையே முப்பது முக்கோடி தேவர்கள் நம்மை காப்பதாக சொல்வார்கள் ( செல்கள் கூட்டாக
இருப்பதால்தான் உடல் உடலாக உள்ளது). இதை புரிய வைக்க கோபுரம் முழுவதும் சிலைகளால்
அமைக்கப்பட்டிருக்கும்.இந்த தேவர்களுக்கு (செல்களுக்கு) கெடுதல் செய்யும்
கிருமிகளை அசுரர்கள் என்பர்.
ஐந்து கோபுரங்கள் - இறைவன்:
உடலுக்கும் செல்களுக்கும் இரையாவது
பஞ்ச பூதங்களே, இரையாவதால் இதனை இறைவன் என்றழைக்கப்படுகிறது. நிலம், நீர்,
நெருப்பு, காற்று, ஆகாயம், இதில் நிலம் என்பது நாம் சாப்பிடும் சாப்பாடு, ஆகாயம்
என்பது பிரானன் அல்லது உயிர்.இதை உணர்த்தும் விதமாக ஐந்து கோபுரங்கள்
அமைக்கப்பட்டிருக்கும்.தனித்தனி கோபுரம் அமைக்க வசதி இல்லாதவர்கள் ஒரு நடு கோபுரத்தின்
நான்கு புரமும் சிறு சிறு கோபுரம் அல்லது ஆர்ச் அமைப்பார்கள்.ஆதி மனிதர்கள்
இயற்கையை இறைவனாக வழிப்பட்டதாக படித்தோம்.ஆதி மனிதன் மட்டுமல்ல இந்த கால மனிதனும்
அதைத்தான் வழிபடுகிறோம். பஞ்ச பூத கோயில்கள் நிலம் - காஞ்சிபுரம், நீர் - திருவாணைக்காவல்,
நெருப்பு - திருவண்ணாமலை, காற்று – விருத்தாசலம் & காலகஸ்தி, ஆகாயம் –
சிதம்பரம்.
மூல ஆதார சக்கரம்:
சிவன் கோயிலில் ஐந்தாவது கோபுரமான நடு கோபுரத்தில் மூல ஆதார
சக்கரம் அமைக்கப்பட்டிருக்கும். ஆண்களுக்கு நடு எலும்பு முடியும் இடத்தில் மூல ஆதார
சக்கரம் இருக்கும்.அங்குதான் விந்து உற்பத்தி ஆகுகின்றது.விந்துவிற்கு வேறு சில
பெயர்களும் உண்டு அவை தெய்வம், உயிர், குண்டலினி, வித்து, பாம்பு, சர்ப்பம்,
பூரனம், சக்தி, இந்திரியம், இந்திரன்.இது பிறக்கும்போது உச்சந்தலையில் (துரிதம்)
இருக்கும், நாம் வளர வளர கீழ்நோக்கி இறங்கி மூல ஆதார சக்கரத்தை அடையும்போது
விடலைப்பருவம் (இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலை).ஆண்கள்ஆண்களுக்கு உயிர்
இருக்கும் இடமான மூல ஆதார சக்கரத்தை பூசை செய்யவேண்டும்.
வேண்டுகோள்:
சிவலிங்கம் என்ற வார்த்தையை தவிர்த்து மூலவர் என்று அழைக்கும்படி
அனைவரயும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்றால் லிங்கம் என்ற சமஸ்கிருத
வார்த்தைக்கு ஆணுறுப்பு என்று அர்த்தம். சிலர் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சேர்ந்த
அமைப்பு என்று தவறாக கூறுகிறார்கள். நாம் மூல ஆதார சக்கரத்தை பூசை செய்கிறோம்
லிங்கத்தை அல்ல என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளவும். சிலர் இந்திய கலாச்சாரத்தை உலகெங்கும்
பரப்ப நினைத்து ஆணுறுப்புக்கு பெண்ணுறுப்பும் சேர்ந்த அமைப்பு லிங்கம் என்று ஆங்கில
சினிமா எடுத்து உலகெங்கும் பரப்பி உள்ளார்கள். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை
நீக்கி உண்மையை பரப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கருவரை:
அம்மன் கோயிலில்ஐந்தாவதுகோபுரமானநடுகோபுரத்தில்கருவரைஅமைக்கப்பட்டிருக்கும் அங்கு
ஒரு சின்ன சிலையை வைத்து பூசை செய்வார்கள்.பெண்களுக்கு அடி வயிற்றில் கருவரை இருக்கும்
அங்குதான் கரு வளரும்.பெண்கள் தன்னுள் இருக்கும் கருவரையை பூசை செய்தால் குழந்தை பாக்கியம்
கிடைக்கும் அதே போல் எந்த எண்ணத்தில் பூசிக்கிறார்களோ அதே மாதிரியான குழந்தை பிறக்கும்.ஓவரியில்
வித்து அல்லது கருமுட்டை உற்பத்தி ஆகுகின்றது. வித்துவிற்கு வேறு சில பெயர்களும் உண்டு
அவை தெய்வம், உயிர், குண்டலினி, பாம்பு, சர்ப்பம், பூரனம், சக்தி, இந்திரியம், இந்திரன்.இது
பிறக்கும்போது உச்சந்தலையில் (துரிதம்) இருக்கும், நாம் வளர வளர கீழ்நோக்கி இறங்கி
கருவரையை அடையும்போது விடலைப்பருவம் (இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலை).பெண்கள் தன்னுடைய
கருவரையை பூசை செய்யவேண்டும்.
நவக்கிரகங்கள்:நமக்கு வரும் இன்பம், துன்பம், உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் நவக்கிரகங்களால் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை புரியவைக்கிறது.
பூசை என்றால் மனதை ஒருநிலைப்படுத்துதல்
என்று அர்த்தம்.
அபிஷேகம்: அபிஷேகம் என்பது சமஸ்கிருத வார்த்தை.இதற்கு அர்த்தம் அபி என்றால் இப்போ, ஷேகம் என்றால் உண்மை.அதாவது உண்மையை உணருங்கள் என்று அர்த்தம்.அதாவது நாம் உண்ட உணவு பலநிலைகளை கடந்து கடைசியாக வித்துவாக மாறுகிறது.ஆண் உடலில் நடு எலும்பு வழியாக சென்று மூல ஆதார சக்கரத்தில் வித்துவாக மாறுகிறது. பெண் உடலில் ஓவரியில் வித்துவாக மாறி பின்பு கருவரையை அடைகிறது. இதை செய்முறை(Demo) செய்து காட்டுவதுதான்அபிஷேகம்.
பிறர் சாதம் (பிரசாதம்):
ஐந்து லிட்டர் அல்லது பத்து லிட்டர் பால் கொண்டு சென்றால்
அதில் சிறிது பாலை மூல ஆதார சக்கரத்தில் அல்லது கருவரையில் இருக்கும் கருவில்
ஊற்றி சிவன் அல்லது அம்மன் வாய் வழியாக சென்ற உணவு கடைசியாக எங்கே செல்கிறது
என்பதை உணருங்கள் அதேபோல் நாம் உண்ட உணவு நம் உடலிலும் கடைசியாக தெய்வமாக,
சக்தியாக, வித்துவாக, குண்டலினியாக, உயிராக, பாம்புவாக மாறுகிறது என்பதை
உணர்த்திவிட்டு மீதம் உள்ள பாலை பிறருக்கு கொடுக்க வேண்டும். இதற்கு பிறர் சாதம்
என்று பெயர். ஐந்து லிட்டர் அல்லது பத்து லிட்டர் பாலை முழுவதுமாக அங்கு ஊற்றுவது அறியாமையாகும்.
பிரசாதம் என்ற பெயரில் வியாபாரம் செய்வதும் அறியாமையே.
அகம் (ஆகம) விதி: மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆண் அல்லது பெண் உடல் உள்(அகம்) அமைப்புப்படி கோயில் கட்டினால் அதுவே அகம் விதிப்படி கட்டப்பட்ட கோயில் ஆகும் எ.கா சிவன் கோயில், அம்மன் கோயில்.இதுவே மிக பழமையான நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்ட முறை ஆகும்.
கோயிலின் உள்புறம் ஒரு ஆள் இருப்பதாக கொண்ட கோயில்கள் அகம்
விதிப்படி கட்டப்பட்டவை அல்ல எ.கா வினாயகர் கோயில் முருகன் கோயில், ராமர் கோயில்,
கிருஷ்ணர் கோயில்.இதுபோல் கோயில் கட்டும் பழக்கம் ஆரியர்கள் வருகைக்கு பின்
வந்தவையே. இக்கோயில்களில் உள்ளே இருக்கும் சிலையை உர்ச்சவர் என்பர்.
கோயில் குடமுழக்கு விழா:பெண்ணின் கருவரையில் உள்ள ஒரு குழந்தை முழு வளர்ச்சி (கோயில் கட்டி முடிக்கப்பட்டது) அடைந்ததும் நீர் குடத்தை உடைத்துக்கொண்டு வெளிவரும்.இதற்குதான் குடமுழக்கு என்று பெயர்.இதைத்தான் கோயிலின் உச்சியில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி உணரச்செய்வார்கள்.கருவரையில் உள்ள நீர் குடத்தின் நீர் குழந்தைக்கு பாதுகாப்பை கொடுக்கக்கூடியது.
மண்டலப்பூசை:
பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனது எண்ணமும் ஆசையும் நிறைவேற 48
நாட்கள் மனதை ஒருநிலைப்படுத்தி வணங்க வேண்டும்.இதற்குதான் மண்டலப்பூசை என்று
பெயர்.மண்டலம் என்றால் 48 நாட்கள், பூசை என்றால் மனதை ஒருநிலைப்படுத்துதல்.
யாக சாலை அல்லது யாக குண்டம்:யாக சாலை அல்லது யாக குண்டம் என்பது நமது வயிறு.இங்கு போடப்படும் உணவுகள் உயிர் பெற்றுவிடுகின்றன.அதனால் நம் உடல் (கோயில்) சக்திப்பெற்று சிறப்பாக செயல்படுகிறது.
எ.கா.விலாம் பழம் – அறுசுவை கொண்டது, மிகச்சிறந்த உணவு.இதை தீயில் போடக்கூடாது சாப்பிடவேண்டும்.
கும்பாபிஷேகம்:
கும்பாபிஷேகம் என்பது சமஸ்கிருத வார்த்தை.இது அகம விதி மீறி கட்டப்பட்ட கோயில்களின் திறப்பு விழாவின்போது சொல்லப்படும் வார்த்தை.அதாவது கும்பம் என்றால் புகழ், அபி என்றால் இப்போ, ஷேகம் என்றால் உண்மை.அதாவது இப்போது இறைவனின் புகழை உணருங்கள் என்று அர்த்தம்.
அம்மன் கோயில் திருவிழா
மனிதனின் வாழ்க்கை தத்துவத்தை
உணர்த்தும் ஒரு விழாதான் அம்மன் கோயில் திருவிழா. அதற்கான விளக்கத்தை இப்போ
பார்க்கலாம்.
காப்பு கட்டுதல்:
நம் வீட்டில் பெண்ணுக்கு குழந்தை
பிறப்பதற்கு முன் மூன்றாம் மாதம் அதாவது ஏழாவது மாதத்தில் வலையல் காப்பு நடத்தப்படுகிறது.
அதேபோல் அம்மன் கோயிலில் சாமி தூக்குவதற்கு முன் மூன்றாவது நாள் காப்பு
கட்டப்படுகிறது.
கரகம் தூக்குதல்:
பின்பு வீட்டில் பெண்ணுக்கு குழந்தை
பிறக்கிறது அதேபோல் கோயிலில் கரு+அகம்=கரகம் தூக்கி வரப்படுகிறது. அதாவது கரு
என்றால் குழந்தை அகம் என்றால் உள்ளே, உள்ளே இருக்கும் குழந்தை தூக்கி
வரப்படுகிறது.தாய் என்ற உலகை கடந்து வருவதால் பிறக்கும் குழந்தையை கடவுள் என்கிறோம்.
கரகம் சுமந்து வருபவர் : கரு + அகம் சுமந்து வருபவர் என்பது கர்ப்பிணி பெண்ணை குறிக்கும்.
இவர் செல்லும் வீட்டிலெல்லாம் இவருக்கு சிறந்த உணவு படைக்கப்படும் (தயாரித்து கொடுக்கப்படும்).
இதனாலேயே கரகம் சுமந்து வருபவருக்கு சுண்டல், மாவு, பழரசம் (பானம்) வழங்கப்படுகிறது. மேலும் இவர் (கர்ப்பிணி) வெயிலில் நடக்கும்போது
அவரது துன்பம் தீர்க்க அவரது காலில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
நோக்கம்:
கர்ப்பிணி பெண்
இன்பமாக இருந்தால்தான் கருவில் இருக்கும் குழந்தை (கடவுள்) அறிவளியாகவும் நிம்மதியாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சொல்லிக்கொண்டே போகலாம். புரிதலுக்கு இது போதும்
என்று நம்புகிறேன்.
அலங்காரம்:
பின்பு பிறந்த குழந்தையை சட்டை போட்டு
பவுடர் பூசி அலங்கரிப்போம் அதேபோல் கரகம் அலங்கரிக்கப்படுகிறது.
வீதி உலா அல்லது ஊர் வலம்:
அதன்பின் குழந்தை வளர்கிறது ஊரெல்லாம்
சுத்துகிறது அதாவது நாம் வாழும் வாழ்வு. இதை புரியவைக்க ஒரு சின்ன சிலையை
வண்டியில் வைத்துக்கொண்டு வீதி உலா நடத்தப்படுகிறது.
செடல் (அலகு) திருவிழா:
மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட வயதை
அடைந்தவுடன் பேராசை, கடுங்கோபம், பொறாமை, கடும்பற்றுதல், உயர்வு தாழ்வு பார்த்தல்
(மதம்), பழிவாங்குதல் போன்ற உணர்வுகள் அதிகமாகி சூலம், கத்தி, தடி போன்ற ஆயுதங்களால்
தாக்கிக்கொள்வார்கள். இதனால் சிலர் காயங்களுடன் இருப்பார்கள் சிலர்
இறந்துவிடுவார்கள்.பின்பு இறந்தவர்களை பாடை கட்டி தூக்கிச்செல்வார்கள்.இது செடல்
திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அறிவியல்: சில நோய்கள் அக்குப்பஞ்சர் மூலம் குணப்படுத்தப்படும் அதனால் அலகு
குத்தப்படுகிறது. சில நோய்கள் அக்குப்பிரஷர் மூலம் குணப்படுத்தப்படும் அதனால் அங்கப்ரதட்ஷணம்
செய்யப்படும். நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்த ஆணி செருப்பு அணிந்து நடப்பார்கள்
காரணம் இரண்டு கால்களிலும் நரம்பு முடிச்சுகள் உள்ளன, கால்களின் பாதம் முழுவதும் ஆணிகளால்
அழுத்தி விடும்போது உடலின் அணைத்து உறுப்புகளும் சீராக செயல்படும் மேலும் நோயிருந்தாலும்
குணமாகிவிடும்.
மஞ்சள் விளையாட்டு:
அடுத்த நாள் உறவுக்காரர்கள் ஒருவர்
மேல் மற்றொருவர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி (ஆன்டி பயாட்டிக்) குளிப்பார்கள்.இத்துடன்
விழா நிறைவடைகிறது.
இதை ஏன் ஆடி மாதத்தில் கொண்டாட
வேண்டும்?.
நமக்கு இரவு பகல் வருவது போல்
பூமிக்கும் இரவு பகல் வருகிறது.இதில் பகல் காலத்தை உத்ராயன காலம் என்பர்.(அதாவது
தை மாதம் முதல் ஆணி மாதம் வரை) இரவு காலத்தை தட்சாயன காலம் என்பர் (ஆடி மாதம்
முதல் மார்கழி மாதம் வரை).இதில் ஆடி மாதம் என்பது மாலை நேரம் அதாவது பகல் முடியும்
நேரம் இரவு தொடங்கும் நேரம்.ஆடி மாதம் 18 நாட்களுக்கு பிறகு முழு இரவு காலம். ஆடி
மாதம் 18 நாட்களுக்குள் கருவாகி உருவாகும் குழந்தைகள் பல துன்பங்களை அனுபவிக்கும்,
நிம்மதியாக வாழாது, பிறப்பதும் கடும் வெய்யில் காலமான சித்திரை மாதத்தில்
பிறக்கும். இவைகளை தவிர்க்கவே புது பொண்ணு மாப்பிள்ளையை ஆடி பதினெட்டு வரை
பிரித்து வைப்பார்கள்.பழைய பொண்ணு மாப்பிள்ளையை பிரிக்க முடியாது என்பதால் அம்மன்
கோயில் திருவிழா கொண்டாடுவார்கள்.இக்காலக்கட்டத்தில் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது
மீறி சேர்ந்தால் அது பாவச்செயல் ஆகும்.
மார்கழி மாதம்:
இது பூமிக்கு விடியற்காலம் நேரம்
ஆகும்.இது மிகச்சிறந்த காலம் என்பதால் பூசைக்கு உகந்த காலம் என்பர்.இம்மாதத்தில்
கருவாகி உருவாகும் குழந்தைகள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள் சிலர்
மிகச்சிறந்த ஞானியாகவும் வருவார்கள்.அதனால்தான் இந்த மாதத்தில் ஐயர்கள் திருமணம்
செய்துகொள்வார்கள்.
சூழ்ச்சி: மற்றவர்களை இந்த மாதம் பீடை
மாதம் என்று சொல்லி அனைத்து நல்லக்காரியங்களையும் தவிர்க்கும்படி சொல்வார்கள்.
குறிப்பு:
நம் முன்னோர்கள் மனித இனம்
நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வதர்க்காகவே
கோயில் கட்டி வழிபடும் முறைகளையும், திருவிழா மற்றும் சடங்கு முறைகளையும்
கொடுத்துள்ளார்கள்.
தெய்வ நிலையை காண்பது
தெய்வ நிலையை காண நான்கு நிலைகள்
உள்ளன.அவை தமிழில் சரியை, கிரியை, யோகம், ஞானம் இதை சமஸ்கிருதத்தில் நான்கு வர்ணம்
சூத்ரியன், வைசியன், சத்ரியன், பிராமணன்.
அதில் முதல் நிலை தமிழில் சரியை சமஸ்கிருதத்தில்
சூத்திரியன்.ஆதாவது ஒரு கல்லு சிலையையோ செப்பு சிலையையோ போட்டோவையோ வைத்து
இதுதான் தெய்வம், இதுதான் கடவுள், இதுதான் இறைவன் என்று நம்ப வைக்கும்
நிலை.இதற்காக பல கதைகள் சொல்லி நம்பவும் வைப்பார்கள்.இந்த முதல் நிலையில்
உள்ளவர்களால் தன்னை உணர முடியாது.தான் உருவான விதம், தான் சாப்பிட்ட சாப்பாடு சீரண
மண்டலத்தில் உயிர் பெறுவது போன்ற விடயங்களை கூட உணரமாட்டார்கள்.இவர்களுக்கு ஆசை,
கோபம், பொறாமை, பற்றுதல், உயர்வு தாழ்வு பார்த்தல் (மதம்), பழிவாங்குதல் போன்ற
உணர்வுகள் அதிகமாக இருக்கும்.
இரண்டாவது நிலை தமிழில் கிரியை சமஸ்கிருதத்தில்
வைசியன்.அதாவது தெய்வம் (உயிர்,
குண்டலினி) தன்னுள்ளே இருப்பதை உணர்ந்தவர்கள் அதை காண மூச்சு பயிற்சி (வேள்வி), யோகா
செய்வார்கள்.
மூன்றாவது நிலை தமிழில் யோகம் சமஸ்கிருதத்தில்
சத்திரியன்.இந்நிலையில்
குண்டலினி(உயிர்) மூல ஆதார சக்கரத்திலிருந்து நெற்றிக்கு வந்து நெற்றியில் (ஆக்கினை,
சுழிமுனை) தீபச்சுடராக சுற்றும். அதாவது மூக்கு நுனியியை பார்த்துக்கொண்டே இருந்தால்
மூக்கு கரைந்துவிடும்.இவ்வாறு செய்வதற்கு பதிலாகதான் வினாயகர் சதுர்த்தி என்று மண்
பிள்ளையாரை கரைக்கிறார்கள்.பின்பு இரண்டு கண்களையும் மூடி இரண்டு கண் பார்வையையும்
நெற்றியில் செலுத்தி பார்க்க வேண்டும்.அப்போதான் தீபச்சுடரை பார்க்க முடியும்.இதற்கு
நெற்றி கண் என்று பெயர்.
நான்காவது நிலை தமிழில் ஞானம் சமஸ்கிருதத்தில்
பிராமணன்.இந்நிலைக்கு சிவ நிலை, சித்த
நிலை, ஞான நிலை, முனிவ நிலை என்றும் அழைப்பார்கள். குண்டலினியை உச்சந்தலைக்கு(துரிதம்)
ஏற்றிய பின்பு பிடரியில் வெளிச்சத்தை பார்க்கலாம். பின்பு நேரம் கிடைக்கும்போது சுழிமுனையை
பார்க்க கிருஷ்ணன், ராமர் நிறத்தில் ஒளிவட்டம் தெரியும்.அப்போது ஆறு குணம் சீரமைக்கப்பட்டு
தெய்வ தரிசனம் தினமும் காண முடியும்.இந்த நிலையை கோடியில் ஒருத்தன் அல்லது கோடான கோடியில்
ஒருத்தனால் மட்டுமே அடைய முடியும். இந்த நிலையைஅடைந்தவர்கள் சிவன், நந்தி, அகத்தியர்,
திருமூலர் போன்றவர்கள் பலர் நம் பகுதியிலும் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள்
பகுதியில் வால்மீகி, வியாசர் போன்றவர்கள்.
தெளிவு :
பூ
நூல் போட்டவர் எல்லாம் பிராமணன் அல்ல.
ஈஸ்வரப்பட்டம் : எப்பொழுதெல்லாம் புருவ
மத்தியை பூசை (மனதை ஒருநிலைபடுத்துதல்) செய்கிறார்களோ அப்பொதெல்லம் நாக்கில் விருவிருப்பு
ஏற்படும், இந்த நிலையில் சொல்கின்ற சொல் எல்லாம் நடக்கும். இதற்கு ஈஸ்வரப்பட்டம் என்று
பெயர்.இதில் திட்டம்போட்டு சொல்லக்கூடாது எதார்த்தமாக சொல்லும் வார்தைகளே நடக்கும்.இந்நிலைகளை
முதன் முதலில் அடைந்தவர் சிவன்.அதனால்தான் சிவனை ஆதி சித்தன் என்கிறோம்.சிவன் சொன்ன
வழி முறைகளை பின்பற்றி ஞான நிலையை அடைபவர்களை சிவனடியார் என்கிறோம்.
இவ்வாறு ஞான
நிலையை அடைந்தவர்களுக்கு சிவனை நேரில் பார்க்கும் வாய்ப்பும் சிவனின் திருவிளையாடலை
அனுபவிக்கும் பாக்கியமும் சிவன் என்ற பட்டமும் கிடைக்கும்.இதனால்தான் அனைத்து சித்தர்களையும்
சிவன் என்றும் சித்தன் வாக்கே சிவன் வாக்கு என்றும் சொல்வார்கள்.
சிவன் என்கின்ற
பட்டம் மேடை போட்டு மக்கள் கூடி தேர்ந்தெடுத்து வழங்கப்படும் பட்டம் அல்ல. இறைவன் அசரிரியாக
இருந்து உன் உயிர்தான் சிவமதாச்சு என்று சொல்வார்.அதன் பின்பே நம் மனதால் உலகம் எவ்வாறு
அமைந்துள்ளது என்பதை உணர முடியும்.இதை வியாச முனிவர் அனுபவித்ததால் மகாபாரத கதையில்
அர்ச்சுனனுக்கு கிரிஷ்ணன் தன் விஸ்வரூபத்தை காட்டியதாக எழுதியிருக்கிறார்.
திராவிடர்கள் :
மேலே குறிப்பிட்டுள்ளபடி சிவனையும் அம்மனையும்
வழிபட்டு அம்மன் கோயில் திருவிழா கொண்டாடி மற்றும் சிவக்கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தவர்கள்
திராவிடர்கள்.ஆரியர்கள் கொள்கைகளை ஏற்காமல் சிவக்கொள்கையை விடாப்பிடியாக கொண்டவர்கள்
ஆதிதிராவிடர்கள்.இதேபோல் ஆரியர்கள் கொள்கைகளைகளுக்கு எதிரானவர்கள் இந்தியா முழுவதும்
இருக்கிரார்கள்.நம் மொழியில் ஆதிதிராவிடர்கள் என்பதுபோல் ஆதிஆந்திரா, ஆதிகர்நாடகா என்று
உள்ளார்கள். மற்ற மொழியில் சொல்ல எனக்கு தெரியவில்லை அந்தந்த மொழிக்காரர்களுக்கு தெரியும்..
திராவிடம் :
எதுவரை திராவிடம்?திராவிடம் என்பதற்கான வரலாறும்
இல்லை, புராணத்திலும் இல்லை என்று முகநூலில் தெரிவித்திருந்தார்கள்.எனக்கும் எதுவரை
திராவிடம் என்று தெரியாது ஆனால் எதுவரை ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்களோ அதுவரை திராவிடம்
என்று சொல்ல முடியும்.வரலாற்று புத்தகதில் இல்லை என்பது அவர்களின் கருத்து.இங்கு நான்
எழுதுகின்ற எந்த தகவலுகும் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. இவைகள் அனைத்தும் ஞான நிலையில்
ஆழ்ந்து யோசித்து (தவம் செய்து) உணர்வுபூர்வமாக உணர்ந்து எழுதப்பட்டவையே..
தெளிவு :
சூத்ரியன்
என்றாலும்தாழ்ந்தவர் இல்லை ஆதிதிராவிடர் என்றாலும் தாழ்ந்தவர் இல்லை என்பது இப்போது
புரிந்துவிட்டது.
இப்போது மற்றொரு சந்தேகம் தோன்றி இருக்கும் சாதி என்றால் என்ன?.
எந்த நாட்டிலும்
இல்லாத சாதி நம் நாட்டில் மட்டும் எங்கிருந்து வந்தது?.மனிதனின் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை. பின்பு எங்கே இருந்து வந்தது உயர்வு தாழ்வு?.
அறியாமை! தாய்மொழி அறியாமை.சாதி என்பது பழந்தமிழ், தொழில் என்பது புதுதமிழ்.சாதி என்றாலும் தொழில் என்றாலும் ஒரே அர்த்தம்தான்.
ஆரியர் வருகைக்கு
பிறகு ஆரியர்களையும் அவரது கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டவர்கள் உயர்ந்தவர்கள் என்றும்
ஏற்க மறுத்தவர்கள் எதிர்த்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வேறுபாடு உண்டாயிற்று. யாரால்
அவர்களுக்கு அதிக லாபமோ அதை பொருத்து உயர்நிலையுலும் வேறுபாடு வந்தது.
சரி
சாதியின் அர்த்தங்களை பார்ப்போம்.
செய்தி வாசிப்பவர் - பறையர்–(எ.கா. )ஒரு மன்னர் சொன்ன
தகவலை மக்களிடம் அறிவிப்பவர். இதற்கு பயன்படும் கருவிக்கு பறை என்றும், இத்தொழிலுக்கு
பறை சாற்றுதல் என்றும் அழைக்கப்பட்டது.அதாவது டி.வி, ரேடியோவில் செய்தி வாசிப்பவர்
பிரச்சாரம் செய்பவர் மட்டுமே தன்னை பறையர் என்று சொல்லவேண்டும்.மற்றவர்கள் தன்னை பறையர்
என்று சொல்லக்கூடாது.
போர்வீரர் (மிலிட்டரி ) - படையாட்சி - ஒரு மன்னன் ஆட்சி அமைக்க
வேண்டுமானால் போர் வீரர்கள் தேவை. இப்படி போர்வீரர்களாக இருக்கும் தொழிலுக்கு படையாட்சி.என்று
பெயர்.மிலிட்டரி மேன் மட்டுமே தன்னை படையாட்சி என்று சொல்லவேண்டும்.மற்றவர்கள் தன்னை
படையாட்சி என்று சொல்லக்கூடாது.
சிற்பி - பல்லர் - சிற்பங்கள், சிலைகள்
செய்பவர்.
வியாபாரி (பிசினஸ் மேன்) - செட்டியார்.அதாவது எந்த வியாபாரம் செய்தாலும் அவர் செட்டியாரே.பெரிய பிசினஸ்
பன்னினா அவர் பெரிய செட்டியார்.மற்ற தொழில் செய்பவர்கள் தன்னை செட்டியார் என்று சொல்லக்கூடாது.
சமையல் செய்பவர் - பிள்ளை, சைவம் சமைத்தால் சைவ பிள்ளை (பிள்ளைமார்).அதாவது ஹோட்டல்ல
கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் குக்கா இருக்கிறவர்கள் தன்னை பிள்ளை என்று சொல்லலாம்.மற்ற
தொழில் செய்பவர்கள் தன்னை பிள்ளை என்று சொல்லக்கூடாது.
நாயகன் ( ஹீரோ) – நாயக்கர் அதாவது சினிமா நாடகம் போன்றவற்றில்
கதாநாயகனாக நடிப்பவர்..
மாடு வளர்ப்பவர் - கோனார்.
ஆடு வளர்ப்பவர் - இடையர்.
விவசாயம் செய்பவர் – வேளாளர்.அதாவது வேளான்மை செய்பவர்.
ஆசான் - ஆச்சாரியார் - தனக்கு தெரிந்த கலையை
கற்பிப்பவர்.மஹாபாரத கதையில் கிருபனை கிருபாச்சாரியார் என்றும் துரோனரை துரோனாச்சாரியார்
என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பற்ற வைப்பவர் (வெல்டர்) - பத்தர்.
தெளிவு :
தொழிலை குறிக்கும் பெயர்களே சாதி
என்று உணரவும்.
தொழிலை சாரத பெயர்களை சாதி என்று
சொல்லக்கூடாது உதாரணத்திற்கு பின் வரும் பெயர்கள்.
முதலீட்டாளர், முதலாலி ( ஓனர், பிராபிரிட்டர்)
- முதலியார்.
அதாவது ஒரு பெரிய கம்பெனி முதலாலிகிட்ட நீங்க என்ன செய்றிங்க என்று கேட்டால் அவர் அதற்கு
ஐ அம் ஓனர் அஃப் த கம்பெனின்னு சொல்லுவார் இல்லையா அதைதான் முதலியார் என்கிறோம். சம்பலத்துக்கு
வேலைக்கு செல்பவர்கள் தன்னை ஓனர் (முதலியார்) என்று சொன்னால் அவரிடமே விளக்கம் கேட்டுக்கொள்ளவும்.ஒருவேளை
அவர் நிலத்துக்கு, காருக்கு அல்லது வீட்டுக்கு ஓனர் என்பதை குறிப்பிடலாம்.
தலித் :
தலித் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பிரிக்கப்பட்டவர்கள் என்று
அர்த்தம்.இரண்டு வெவ்வேறு தொழில் செய்பவர்களின் பிள்ளைகள் திருமணம் செய்துக்கொண்டால்
அவர்களை பிரித்தார்கள். (எ.கா) ஒரு ஆசிரியர்(ஆச்சாரியார்)ன் பிள்ளையும் ஒரு மிலிட்டரிகாரர்(படையாட்சி)ன்
பிள்ளையும் திருமணம் செய்தால் பிரித்தார்கள். அதாவது இருவர் வீட்டிலும் சேர்த்துக்கொள்ளாமல்
தனிமைபப்டுத்தப்பட்டனர்.இது எடுத்துக்காட்டுக்காக மட்டுமே.ஆதாவது ஒரே (Same) தொழிலை
செய்பவர்கள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.உயர்வு
தாழ்வு இல்லாமல் அண்ணன் தம்பி மாமன் மச்சான் என்று வாழ்ந்தவர்களே பிற்காலத்தில் அடுத்தவர்
பேச்சை கேட்டு பிரிந்துவிட்டார்கள்.
வேண்டுகோள்: தலித் மற்றும்
அருந்ததியினர் என்ற வார்த்தைகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மலைவாழ் மக்கள்:
மலையில் வாழும் மக்களை மலை வாழ் மக்கள் என்கிறர்கள்.இவர்களை
பழைய தமிழில் குறவர்கள் என்பர். ஐவகை நிலங்கள் என்று படித்திருப்பீர்கள். குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல், பாலை இதில் குறிஞ்சி - மலையையும், முல்லை - காட்டையும், மருதம்
- விவசாய நிலத்தையும், நெய்தல் - கடல் சார்ந்த பகுதியையும், பாலை - பாலைவனத்தையும்
குறிக்கும். அந்தந்த பகுதியில் வாழ்வதற்கு தேவையான அறிவு அங்குள்ளவர்களுக்கு மட்டுமே
சிறப்பாக இருக்கும். இதில் ஒரு பகுதியை சார்ந்தவர் மற்றொரு பகுதியை சார்ந்தவரை சாதரணமாக
நினைப்பதே வேறுபாடு.உதாரணமாக நகரத்தார் கிராமத்தாரை சாதரணமாக நினைப்பது போல்.நினைத்து
பாருங்கள் கிராமத்தாருக்கு தெரியும் எந்த விஷயமும் நகரத்தார்க்கு தெரியாது.கிராமத்தார்
அறவழியில் வாழ்வார்கள் அதாவது விவசாயம், மரம், செடி, கொடி, மாடு, ஆடு போன்ற உயிரினங்ளை
வாழ வைத்து தானும் வாழ்வார்கள். நகரத்தார் பிஸினஸ் என்ற பெயரில் ஒருவரை ஒருவர்
ஏமாற்றி வாழ்வார்கள். ஆனால் தானே உயர்ந்தவர் என்ற எண்ணம் இருக்கும். இதுபோல்தான் வேறுபாடுகள்
உருவாயின.
வன்னியர் :
வன்னியர் என்பது ஒரு சிறந்த தளபதியின் பெயர். அவர் சிறப்புற்று
விளங்கியதால் அவருடைய உறவுகள் சொந்தம் பந்தம் அனைவரும் அவர் பெயரை அவரவர் தொழிலுக்கு
அடை மொழியாக வைத்துகொண்டார்கள்.எ.கா.வன்னிய குல ஷத்ரியர் – வன்னிய குல போர்வீரர் (படையாட்சி), வன்னிய நாயக்கர் – வன்னிய குல ஹீரோ, வன்னிய கவுன்டர்.
ஆதிதிராவிடர்:
ஆரியர்களுக்கு
எதிராகவும், சாமியார் மற்றும் பூசாரிக்கு ஆதரவாகவும் இருந்தவர்கள் ஆதிதிராவிடர்கள்.
இவர்கள் சிவனின் வழியை பின்பற்றியவர்கள்.
இவர்கள் ஐயரைவைத்து
எந்த பூசையும் செய்யமாட்டார்கள். இதுவே பிற்காலத்தில் தலைகீழாக மாறிவிட்டது.
அதாவது ஆரியர்கள்
வருகைக்கு முன்பு கோயில்களில் சாமியாரும் பூசாரியும் பூசை செய்து வந்தார்கள்.
சாமியார்- ஒருவருக்கு நடந்தது நடப்பது
நடக்கஇருப்பது துன்பத்திற்கான காரணம் எப்போது விலகும் என்பன போன்ற விஷயங்களை சொல்பவர்.இதுபோல்
சக்தி உடையவர்களுக்கு சாமி என்று பெயர் மறியாதையாக சாமியார் என்று அழைப்பர். பிற்காலத்தில்
ஒருசாரர் ஐயரை சாமி என்று அழைக்க தொடங்கிவிட்டனர்.
பூசாரியார் – பூ என்றால் மனம் என்று
அர்த்தம், ஆச்சாரி என்றால் ஆசிரியர்.அதாவது மனதை ஒருநிலைப்படுத்தி காரிய சித்தி அடைய
கற்றுக்கொடுப்பவர்.இவருக்கு மற்றவர் மனதில் உள்ளது தெரியாது.நம் மனதில் உள்ளதை சொன்னால்
எப்படி பூசை செய்தால் (மனதை ஒருநிலைப்படுத்தினால்) காரிய சித்தி அடையமுடியும் அல்லது
துன்பம் அகலும் என்று சொல்லித்தருவார்.
நடந்தசம்பவம்:
ஆரியர்கள் ராமாயணம் மற்றும்
மஹாபாரத கதைகளை சொல்லி அதில் உள்ள நெறிமுறைகளை பின்பற்ற செய்தார்கள்.இவர்கள் கொள்கைகளை
ஏற்றுக்கொண்டவர்களே கடுவுளை உணர்ந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு
ராமம் போட்டுக்கொண்டார்கள்.பின்பு அது தனி சமயமாக மாறியது.அதற்கு வைஷ்ணவம் என்று பெயரிடப்பட்டது.அதாவது
வைஷ்ணவம் என்றால் வைசியன் – இரண்டாம் நிலை என்று மேலே சொல்லியிருந்தேன் அல்லவா அந்த
நிலையை ஒரு சமயம் என்று சொல்லிக்கொண்டார்கள்.சிவனை வழிபடுபவர்கள் அசுரர்கள் என்றும்
ராமர், கிரிஷ்ணரை வழிபடுபவர்கள் தேவர்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.இங்கிருந்தவர்கள்
கொஞ்ச கொஞ்சமாக சமயம் மாறினார்கள்.அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சொந்தம், பந்தம்
என்று வாழ்ந்தவர்களிடையே மதம் (உயர்வு தாழ்வு பார்த்தல்) உருவானது.சிவ சமயம் வைணவ சமயம்
என்று இரு பிரிவுகளாக மாறி பல கலவரங்கள் நடந்தன.
பின்பு சில
ஆரிய வம்சத்தினர் சைவ சமயத்திற்கு மாறினார்கள்.மாறிய பின்பு பூசை இப்படி செய்யவேண்டும்
அப்படி செய்ய வேண்டும் என்று கூறி சிலரின் ஆதரவைப்பெற்று கோயிலை கைப்பற்றினார்கள்.அதன்பின்பு
கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை வைத்து உயர்வு தாழ்வு உருவாக்கப்பட்டது.கோயில்களில் இருந்த
ஆவணங்களை கோயில் பராமரிப்பு என்ற பெயரில் அழித்தார்கள்.அதனால் தமிழில் இருந்த வேத நூல்கள்
நமக்கு கிடைக்காமல் போய்விட்டது.இவர்களின் கட்டுப்பாட்டில் சிக்காத ஓலைச்சுவடிகளே ஆங்காங்கே
இருக்கின்றன.
தேவர்கள்:
இவர்கள் ஆரியர்களுக்கு
ஆதரவாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள்.அதாவது கோயிலில் பூசை செய்வதை மையமாக வைத்து
ஊர் மக்கள் இரண்டு பிரிவானார்கள்.ஒரு பிரிவினர் சாமியார் மற்றும் பூசாரிக்கு ஆதரவாகவும்
மற்றொரு பிரிவினர் ஐய்யருக்கு ஆதரவாகவும் இருந்தார்கள்.ஐயரை கோயிலில் பூசை செய்ய வைத்து
அவர்களை பாதுகாக்க மற்றவர்களிடம் சண்டையிட்டார்கள்.அதனால் பிராமணனை காப்பதினால் நீதான்
தேவன் என்றார்கள், கோயில் பூசையிலும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அதன்பின்பு
சாமியார்,பூசாரி மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் கோயிலுக்கு வருவதை நிருத்திக்கொண்டார்கள்.தனியே
மூல ஆதார சக்கரம் வைத்து அல்லது கல்லை வைத்து கும்பிட தொடங்கினார்கள்.
ஆரியர்களின்
ஆதரவாளர்கள் : யாரெல்லாம் ஐயரை வீட்டிற்கு அழைத்து பூசை செய்கிறார்களோ அவர்கள்தான்
ஆரியர்களின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். .
உண்மையான சக்தி
உடையவர்கள் ஆங்காங்கே குறி சொல்லிக்கொண்டு இருப்பதை இப்பொழுதும் பார்க்கலாம்.இவர்களுக்கு
கொயில்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
இங்கு
முழுமையாக அனைத்து சாதிகள் பற்றி பதிவிட இயலாது. இது புரிதலுக்காக மட்டுமே.மற்றவற்றை
அவரவர்களே புரிந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
எழுதியவன்
எந்த சாதி:என்னை
பொருத்தவரை நான் பல சாதிக்கு சொந்தக்காரன். அரசாங்கத்தில் பணிபுரியும் படித்தவர்கள்
வன்னியர் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.பூ விற்றேன், மாடு மேய்த்தேன், ஆடு மேய்த்தேன்,
விவசாயம் செய்தேன், பிரச்சாரங்கள் செய்தேன் தற்போது பொறியாலராக (Engineer) உள்ளேன்.எனக்கு
ஐயர் சடங்கு முறையில் சிறிதளவும் உடன்பாடில்லை.இறை தரிசனத்திற்கு பிறகு சடங்கு முறைகள்
எல்லாம் சுய நலனுக்கு செய்யப்படுபவை என்பது புறிந்தது.
ஆரியர்கள்:
இவர்கள் சமஸ்கிருதத்தை
தாய் மொழியாக கொண்டவர்கள்.ராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகளைக் கொண்டு தர்மத்தை நிலைநாட்ட
வந்தவர்கள்.காலப்போக்கில் சுயநலம் அதிகமானதினால் அதர்மத்தை நிலை நாட்டிவிட்டார்கள்.
வியாச முனிவர்
மஹாபாரத கதையை எழுதி கந்தர்வர்களுக்கு கொடுத்தார்.கந்தர்வர்கள் என்றால் நடித்துக்காட்டி
கதை சொல்பவர்கள்.
அவரது மகன்
நாரதர்களுக்கு கொடுத்தார்.நாரதர்கள் என்றால் பாட்டு பாடுபவர்கள் என்று அர்த்தம்.இப்படி
ஆடியும் பாடியும் ராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகளை சொல்லிக்கொண்டு வந்தவர்களே ஆரியர்கள்.அதனால்தான்
நடனம் மற்றும் சங்கீதம் அவர்களின் பாரம்பரிய கலை என்று சொல்லப்படுகிறது.
சிந்திக்க:
பகவத்
கீதையில் நான்கு வர்ணங்களே உள்ளன.ஆனால் வர்ணம் என்ற பெயரில் சாதிகளை சொல்வது தவறு என்பதை
புரிந்துகொள்ளுங்கள்.இது சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்களுக்கே புரியாத ஒன்று.நமக்கு
எப்படி சரியை, கிரியை, யோகம், ஞானம் புரியவில்லயோ அதேபோல்தான் அவர்களும்.இவைகளை சொல்லி
புரிய வைக்க முடியாது உணரத்தான் முடியும்.சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும்போது ஏதோ
உயர்வாக நினைக்கிறோம்.அதை அவரவர் தாய் மொழியில் சொன்னால் இவ்வளவுதானா என்றாகிவிடும்.அன்று
சமஸ்கிருதத்தால் மனிதனிடையே வேறுபாடு உருவானது இன்று ஆங்கிலத்தால் மனித இனமே உயிரோடு
சித்திரவதை அனுபவித்து பாதி ஆயுட்காலத்திலேயே அழிகிறது.சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு
சக்கரை மாத்திரை கொடுத்து முப்பது வயதுக்குள் டயாலிசிஸ் செய்து கொன்றுவிடும் நிலை.
என்ன ஆங்கில மருத்துவ அறிவியல்?சிந்தியுங்கள் நன்றாக சிந்தியுங்கள்.
வேண்டுகோள்:
இது
முழுக்க முழுக்க உண்மையை உணரவும் மனித வேறுபடுகளை களைந்து ஒன்றிணைக்க தொகுக்கப்பட்டது.இதை
படித்தபின் யார் மீதும் வெருப்புணர்வு வரவேண்டாம்.இவைகள் அனைத்தும் முன்னோர்கள் செய்த
வினை.தற்போது உண்மையை உணர்ந்துவிட்டோம் ஒற்றுமையாய் வாழ்வோம்.
வள்ளுவர்: உண்மையை
பேசுபவர், ஆன்மீக உண்மைகளை உணர்ந்தவர்கள், அறநெறியுடன் வாழ்பவர்களை வள்ளுவன் என்பர்.
அதனால் வள்ளுவன் வாக்கு பொய்க்காது என்றும் சொல்வார்கள். இந்த நிலையில் வாழ்ந்தவர்தான்
திருவள்ளுவர். இவர் பெயர் எவருக்கும் தெறியாது. இவர் வள்ளுவக்குலத்தில் பிறந்ததால்
திருவள்ளுவர் என்று அழைக்கிறோம்.
மும்மூர்த்திகள்: பிரம்மா, விஷ்ணு, சிவன்.
பிரம்மன்:
உச்சந்தலைக்கு ஏற்றப்பட்ட குண்டலினி சக்திக்கு பிரம்மம் அல்லது பிரம்மன் என்று பெயர்.
இதுபோல் ஏற்றியவர்கள் ஐந்து மடங்கு சக்தியுடன் செயல்படுவார்கள்.இதை புரிய வைக்க பிரம்மனுக்கு
ஐந்து தலை வைத்து காட்டினார்கள்.கோயில்களில் சிலைகளின் தலையில் ஐந்து தலை நாகம் இருக்கும்.அதாவது
குண்டலினி சக்தி இருக்கும் இடத்தை உணர்த்துவது.
விஷ்ணு – பிண்டு: பெண்ணின் கருவரைக்கு சென்ற குண்டலினி சக்தி குழந்தையாக உருவெடுக்கிறது
அதாவது கோயில் கட்டப்படுகிறது. இது கருவரையில் இருக்கும் நீர் குடத்தில் வளரும். அப்போது
ஐந்து மடங்கு சக்தியுடன் இருக்கும்.இந்த நீர்குடத்தை பாற்கடல் என்றும் உள்ளே படுத்திருக்கும்
கருவை விஷ்ணு என்றும் சொல்வார்கள்.இதைத்தான் விஷ்ணு பாற்கடலில் பள்ளிக்கொண்டுள்ளார்
என்று ஐந்து தலை நாகத்தின் மீது படுத்திருப்பதாக காட்டுவார்கள்.
சிவன்: உடலை
சிவன் என்பார்கள். சிறிய உடலோ பெறிய உடலோ எதுவாக இருந்தாலும் அது சிவனே. உயிரை சக்தி என்பர்.
சிவன் சிலை:
பூமியை சிவனின் உடலாகவும் இமயமலை சிவனின் சடாமுடியாகவும் காசி சிவனின் சுழிமுனையாகவும்
(ஆக்கினை சக்கரம்) இராமேஸ்வரம் பூமியின் மூல ஆதாரச்சக்கரமாகவும் கருதப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இமயமலையில் கங்கை உருவாகி வருவதால் கங்கையை தலையில் வைத்துள்ளதாக கூறுவார்கள்.
இதைத்தான் சிவன்
வானத்துக்கும் பூமிக்கும் நின்றார் பிரம்மன் சிவனின் தலையை. பார்க்க சென்றார் என்றும்
விஷ்ணு சிவனின் பாதத்தை பார்க்க சென்றார் என்றும் பார்க்க முடியாமல் பூமியை முட்டிக்கொண்டு
திரும்பி வந்துவிட்டார் என்றும் ஒரு கதை சொல்வார்கள்.
தெய்வம்:
உயிரை தெய்வம் என்கிறோம். உயிறோடு இருக்கிற அனைத்தையும் தெய்வமாக வழிபடுவது நமது வழக்கம்.உதாரணத்திற்கு
அரச மரம், வேப்பம் மரம், வில்வ மரம், துளசி செடி, மாடு, ஆடு, யானை, குதிரை, நாய் என்று
அனைத்தும் தெய்வம்.நம்மைப்போல் மற்ற உயிர்களும் இறைவன் படைப்புகளே.
முருகன்: ராமாயணம்
மற்றும் மஹாபாரத கதைகளைக்கொண்டு மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டிருந்தார்கள். இதை உணர்ந்த
நம்ம ஊர் சித்தர்கள் ஒளவையார், திருமூலர் போன்றவர்கள் முருகனை உருவாக்கினார்கள்.முருகு
என்றால் அழகு என்று பொருள்.குண்டலினி மேலே வந்தவுடன் ஆறு குணம் சீரமைக்கப்பட்டு அழகான
குணம் வரும்.இதற்கு முருகன் என்று பெயரிட்டார்கள்.ஆறு தலை உடையவன் என்றும் சொல்வார்கள்.
ஞானப்பழம்: ஞானம் என்றால் அறிவு தெளிவு
அல்லது அறிவு முதிர்ச்சி என்று சொல்லலாம். இதை புரியவைக்க சினிமாவில் மாம்பழத்தை காட்டினார்கள்.அதைப்பார்த்து
சிலர் ஞானப்பழம் என்றால் மாம்பழம் என்று நினைக்கிறார்கள்.
தமிழ்கடவுள்: இவரை தமிழ் கடவுள் என்றும்
தமிழில் மட்டுமே பூசை செய்யவேண்டும் என்றார்கள். அதாவது சமஸ்கிருதத்தில் பூசை செய்யக்கூடாது
என்றார்கள்.காரணம் சமஸ்கிருதம் மனிதர்களிடம் வேறுபாடுகளை உருவாக்கியது என்பதால்.
வள்ளித்திருமணம்:மலைகளில் வாழ்பவர்கள் குறவர்கள்.
இவர்களை தாழ்ந்தவர்கள்என்றார்கள்.சித்தர்கள் பூமியுடைய தலை என்று மலைப்பகுதிகளை கருதி
கதை எழுதுவது வழக்கம். சிவனின் தலையாக இமய மலையை கருதி தலையில் கங்கை நதி உள்ளது என்று
கூறுகிறார்கள் அல்லவா, அதுபோல் தலையாகிய மலையில் ஏறிய முருகன் வள்ளிக்குறத்தியை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்தார் என்று
கதை கட்டினார்கள். என்ன கதை கட்டினாலும் சமஸ்கிருத கதைக்கு முன்னால இந்த கதை எல்லாம்
எடுபடவில்லை.சாதி வேறுபாடுகளும் ஒழியவில்லை, கோயில்களிலும் சமஸ்கிருத பூசைகளே நடந்துகொண்டிருக்கிறது.தமிழர்களுக்கு
தன் மொழியை தாழ்வாகவும் மற்ற மொழியை உயர்வாகவும் நினைப்பது என்பது நீண்ட காலமாகவே உள்ளது
என்பது இதன் மூலம் தெரிகிறது.
மயில்வாகனன்:
நம் கையில்
நாடி பார்க்கும்போது வாதம் மயில்போல் ஓடும் பித்தம் குயில்போல் ஓடும் கபம் ஆமைபோல்
ஓடும். இதில் வாதம் என்பது காற்று பித்தம் என்பது சூடு கபம் என்பது நீர்.மூச்சு பயிற்சி
செய்யும் போது மயில்போல் ஓடும் காற்றுதான் குன்டலினியை உச்சந்தலைக்கு கொண்டு செல்லும்.அதனால்தான்
மயில்வாகனன் என்று பெயர்.
இந்திரன்: இந்திரியம் அதாவது இரண்டு
செல்கள் சேர்ந்து உடல் உருவானது அல்லவா. அந்த செல்களைதான் இந்திரன் இந்திராணி என்கின்றோம்.
இதனால் இவரே தேவர்களுக்கு தலைவன். இவர்களுக்கு உள்ள இனப்பெருக்க உறுப்புகள் இவர்களுக்கே
தெரிகிறது, நம் கண்களுக்கு தெரிவதில்லை. இதற்கும் ஒரு கதை சொல்வார்கள்.
எமன்: எம்மண் – என்னுடைய மண்,
ஒருவர் இறந்த பின்பு அடக்கம் செய்வது மண்ணில்தான் இந்த மண் பாசமாக பாசக்கயிர் போட்டு
இழுப்பதாக சொல்வார்கள். நம் உடலிலும் தினமும் ஏகப்பட்ட ஜீவன்கள் இறக்கின்றன. அதை நாம்
உணர்வதில்லை.
வால்மீகி முனிவர்: இவர் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக்கொண்டவர். இவர்
7000ம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.இவர் ஞான நிலையை
அடைந்தவுடன் சிவன் காட்சி கொடுத்து ஒரு பங்கு தர்மமும் பத்து பங்கு அதர்மமும் இருப்பதாக
கூறினார். அதாவது 1/10= 10%.அதை அவர் மற்றவர்களிடம் சொல்ல யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.காரணம்
இவர் வேடர் குலத்தில் பிறந்தவர் என்பதால்.ஒரு மன்னரோ அல்லது செல்வச்சீமானோ சொன்னால்
அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.அதனால் தர்மத்தை மக்களுக்கு உணர்த்த ராமாயணம் என்ற கதையை
எழுதினார்.
கதாபாத்திரம்: அவருடைய உயிருக்கு சீதை
என்றும், நல்ல எண்ணத்திற்கு ராமர் என்றும் கெட்ட எண்ணங்களுக்கு ராவனன் என்றும் பெயரிட்டார்.
அவருடைய குழந்தை பருவத்தில் சீதை உச்சந்தலையில் இருந்தது, அவர் வளர்ந்த்ததும் கெட்ட
எண்ணங்களும் வளர்கிறது அப்போது சீதை மூல ஆதாரச்சக்கரத்தை அடைந்துவிட்டது.மூல ஆதாரச்சக்கரம்
என்பது இலங்கை, கிட்னி என்பது இலங்கையை சுற்றி உள்ள கடல்.நம் உடலில் மூல ஆதாரச்சக்கரமும்
கிட்னியும் அருகருகில் இருக்கும். பின்பு நல்ல எண்ணத்தை பயன்படுத்தி மூச்சு பயிற்சி
செய்து சீதையை மேலே ஏற்றுகிறார். அதாவது சீதையை மீட்டு கொண்டுவந்துவிட்டார், அது நெற்றியில்
தீபச்சுடராக சுற்றிய பின்பு துன்பம் நீங்குகிறது. இதைத்தான் சீதை தீக்குளித்ததாக எழுதினார்.இதை
புரிந்துகொள்ள முடியாமல் பெண்களை தீக்குளிக்க செய்துவிட்டார்கள்.தர்மத்தை நிலை நாட்ட
எழுதிய கதை அதர்மத்தை நிலைநாட்டிவிட்டது.
வியாச முனிவர்:இவர் பெயர் வியாசர். இவர் வேதத்தை சுருக்கி எழுதியதால் வேதவியாசர்
என்று பெயர்பெற்றார்.இவர் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக்கொண்டவர். இவர் பிறந்து 5118 ஆண்டுகள் ஆகின்றன..
இவர் ஞான நிலையை அடைந்தவுடன் சிவன் காட்சி கொடுத்து ஐந்து பங்கு தர்மமும் நூறு பங்கு
அதர்மமும் இருப்பதாக கூறினார். அதாவது 5/100= 5%. அதை அவர் மற்றவர்களிடம் சொல்ல யாரும்
ஏற்றுக்கொள்ளவில்லை.காரணம் இவர் மீனவர் குலத்தில் பிறந்தவர் என்பதால்.ஒரு மன்னரோ அல்லது
செல்வச்சீமானோ சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.அதனால் தர்மத்தை மக்களுக்கு உணர்த்த
மஹாபாரதம் என்ற கதையை எழுதினார்.அதாவது வேதத்தை சுருக்கி எழுதினார்.
கதாபாத்திரம்: அவருடைய உயிருக்கு துறவுபதி
என்றும் அதாவது லட்சங்களை கொண்டவனை லட்சாதிபதி என்கிறோம் துறவுக்கு கரணம் உயிர் உச்சந்தலையை
அடைவது அதனால் துறவுபதி என்று பெயர், நல்ல எண்ணத்திற்கு பஞ்சப்பாண்டவர்கள் என்றும்
கெட்ட எண்ணங்களுக்கு கெளரவர்கள் என்றும் பெயரிட்டார்.
கிருஷ்ணர்: குண்டலினியை சுழிமுனையில்
வைத்து பார்க்கும் போது கிருஷ்ண பட்சம் அதாவது தேய்பிறை நிறத்தில் தெரியும், அதுவே
ஞான நிலையில் உண்மைகளை உணரச்செய்யும், இதனால் இதற்கு கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.
வேதமும் மஹாபாரதமும்
கர்ணன்: சூரியனின்
பிள்ளை. அதவது சிம்ம ராசிக்காரன்.இவன் அதர்மத்திற்கு அரசன்.அதாவது சிம்மராசிக்காரனுக்கு
பேராசை, கடுங்கோபம், பொராமை, கடும்பற்று, உயர்வு தாழ்வு பார்த்தல் பழிவாங்குதல் போன்ற
குணங்கள் மேலோங்கி இருக்கும்.ஏகனாய் பிறந்திருப்பான் அல்லது சகோதரனுடன் பிறந்திருந்தால்
சாகும்வரை சேர்ந்து வாழமாட்டான்.இதில் கர்ணன் சேர்ந்து வாழவில்லை.எவனாவது திரமையாக
எதாவது செய்தால் அவனுக்குமட்டும்தான் தெரியுமா அவனை விட சிறப்பாக நான் செய்கிறேன் பார்
என்று போட்டியிடுவான்.அர்ச்சுனனுடன் போட்டியிடுவான்.பெண்ணை இழிவுப்படுத்தி ரசிப்பான்.பாஞ்சாலி
சேலையை உருவும்போது ரசிப்பதுபோல்.பேராசை உடையவனே இவனுக்கு நண்பன் ஆவான் துரியோதினன்
போல. இவனுக்கு வணக்கம் போடவில்லை என்றால் கூட நிம்மதி இழந்துவிடுவான் பழிவாங்க துடிப்பான்.
எந்த அளவுக்கு துன்பத்தை அனுபவிப்பார்கள் என்றால் தாய் தந்தை யார் என்று தெரியாதவர்கள்
சமூகத்தில் எவ்வளவு அவமானங்களை சந்தித்து துன்புறுவார்களோ அந்த அளவுக்கு துன்புருவார்கள்.
பெண்ணின் சேலையை உருவி இழிவுப்படுத்தினால் எப்படி இருக்கும் அந்த அளவுக்கு இவர்கள்
மற்றவரை இழிவுப்படுத்தி ரசிப்பார்கள். கடைசி காலத்தில் செய்த பாவங்களுக்காக நீண்ட காலம்
துன்பத்தை அனுபவித்து இறப்பார்கள்.
சொர்க்கம்: கட்டுபாடுடைய மனம் (சுவர்+அகம்).
இந்த மனம் உடையவர்கள் சந்தோஷமாக நிம்மதியாக இருப்பார்கள், மற்றவர்களையும் நிம்மதியாக
வைப்பார்கள்.தனது தேவை என்ன என்று அறிந்தவர்கள்.நல்ல மனதுடன் கூடிய உடலை சொர்க்க உலகம்
என்பார்கள்.
நரகம்: கெட்ட மனம் (நர+அகம்).
தானும் நிம்மதியாக இருக்கமாட்டார் மற்றவர்களையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார்.தனக்கு
என்ன தேவை எவ்வளவு தேவை என்று அறியாதவர்கள். கெட்ட மனதுடன் கூடிய உடலை நரக உலகம் என்பார்கள்..
துரியோதினன்:சிம்மராசிக்காரருக்கு பேராசை உடைய ஒருவன்தான் சிறந்த நண்பனாக இருப்பான்.சிம்மராசிக்காரரை பயன்படுத்தி தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்.
பீஷ்மர்:இவரை கங்கையின் மைந்தன் என்பர். அதாவது கங்கை நதிக்கு மனித குழந்தை பிறக்கவில்லை, கதையில் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. இவர் எட்டாவது குழந்தை ( எட்டாம்பேர்).
வேதம்: எட்டாவதாக பிறந்தவர்கள் தன்னுடைய குடும்பவாழ்வை சிறப்பாக வாழமாட்டார்கள். அதர்மக்காரர்களுக்கே துணையாக பாதுகாவலராக இருப்பார்.இவர்களது குடும்ப அங்கத்தினர்களே அதர்மிகளாக இருப்பர்.இவர் சொல்லை அவர்கள் மதிக்கமாட்டார்கள். பலதிரமைகள் உடையவர். நீண்டநாள் வாழக்கூடியவர். செய்த பாவங்களுக்காக நீண்டநாட்கள் நொந்து வேதனையடைந்து துன்புற்று இரப்பார்கள்.
அர்ச்சுனன் :இவர் தனுசுராசிக்காரர். தனுசு என்பது குரு வீடு. இவர் அதர்மத்தை அழிக்கும் திறன் படைத்தவர். நல்ல குணம், பண்புகள், தர்மத்தை உணரக்கூடியவர்கள். நிம்மதியாக வாழ்பவர்கள்.அதாவது சொர்க்க உலகத்தில் வாழ்பவர்கள்.
அதாவது உடல் என்பது ஒரு உலகம். நல்ல எண்ணங்கள் உள்ள உடல் சொர்க்க உலகம். கெட்ட எண்ணங்கள் உள்ள உடல் நரக உலகம்.'
துரிதராஷ்டிரன்: இவரது தாயார் உடலுறவில் ஈடுபடும்போது அருவருப்பான எண்ணத்தில் இருந்ததால் குருடாக பிறந்தார்.
பாண்டு:இவரது தாயார் பயந்தநிலையில் உடலுறவில் ஈடுபட்டதால் வெண்மையாக பிறந்தார்.
விதுரன்:இவரது தாயார் இன்பமாக உடலுறவில் ஈடுபட்டதால் குறையில்லாமல் ஞானத்துடன் பிறந்தார்.
தெளிவு: உடலுறவில் எந்த எண்ணத்தில் ஈடுபடுகிறார்களோ அதற்கேற்ப குழைந்தை பிறக்கும்.
அம்பை:இவர் பழிவாங்கும் எண்ணத்துடன் உயிர் துறந்ததால் மீண்டும் பிறந்து பழிவாங்கி தனது எண்ணத்தை நிறைவேற்றுகிறார். அதாவது எந்த எண்ணத்துடன் உயிர் பிரிகிறதோ அதே எண்ணத்துடன் மறுஜென்மம் எடுக்கும்.
ஆயக்கலைகள் ஆறுபத்திநான்கில் வேதம் என்பது ஒரு முக்கியகலை. வேதம் என்பது ஆறாவது உணர்வு பகுத்துணர்வு பற்றி சொல்வது. அதாவது என்ன செய்தால் என்ன நடக்கும் என்பதை உணர்த்துவது.ஆறு உணர்வு (Sense) என்பதைதான் ஆறு அறிவு (Knowledge) என்கிறார்கள். வேதத்தை பற்றி முழுமையாக எனக்குத்தெரியாது. அறிந்தவற்றை எழதியுள்ளேன். அதுவே மேலே குறிப்பிட்டுள்ளவை கோயில்(உடல்) பற்றியும் மகாபாரதத்தின் சிறுதுளியும். மற்றவற்றைப்பற்றி அறிய இன்னும் தவம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. அறிந்தவுடன் தெறிவிக்கிறேன். எங்கேனும் இவற்றை பற்றி பேச வாய்ப்பு கிடைத்தால் தெளிவாக சொல்ல இயலும்.
ஆறுஉணர்வு:
1. கண்ணால் பார்ப்பது.
2. காதால் கேட்பது.
3. மூக்கால் நுகர்வது.
4. நாக்கால் ருசித்து உணர்தல்.
5. தொட்டால் உணர்வது.
6. பகுத்துணர்வு – என்னசெய்தால்என்னநடக்கும், உடல், உயிர், தர்மம் அதர்மம், பாவம் புண்ணியம், நம்மை சுற்றி உள்ள இயற்கை மற்றும் பிரபஞ்சம் பற்றி உணர்தல்.
மனிதனுக்கு மட்டுமே பகுத்துணர்வு உள்ளதாக சொல்கிறார்கள். இதை என் மனம் ஏற்க மறுக்கிறது. காரணம் எறும்புக்கூட எப்பொழுது மழை பெய்யும் என்று அறிந்து முன் ஏற்பாடுகள் செய்வதை பார்த்திருக்கிறேன். இதிலிருந்து அவைகளுக்கும் சிந்திக்கும் திறன் உள்ளதை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு எறும்பை கூறினேன். மற்ற உயிரிணங்களும் அவ்வாறே புழுக்கூட கூடு கட்டி வாழ்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
மனிதன் நிம்மதியாக வாழ நம் முன்னோர் வகுத்த வழி முறைகள்:
தியானம், மூச்சுப்பயிற்சி, குண்டலினியை மேலே ஏற்றுவது போன்றவை சிறந்ததாக இருந்தாலும் இவைகள் அனைவருக்கும் சாத்தியம் இல்லை. அதனால் கோயிலுக்கு சென்று பூசை செய்வது என்பது அனைவருக்கும் ஏற்றதாகும். இன்ப துன்பங்களை உணர்வது உடலா? உயிரா? என்றால் உயிர்தான். அதனால் உயிரை ஒருநிலைப்படுத்துவது அவசியமாகிறது.
சரி எவ்வாறு பூசை செய்வது?
பூசை என்றால் மனதை ஒரு நிலைப்படுத்துதல்.
முதலில் வினாயகர் முன் தோப்புக்கரணம் போட வேண்டும். இவ்வாறு உட்கார்ந்து எழுந்திருப்பதால் உடலும் காதை அழுத்திவிடுவதால் புத்தியும் ஆரோக்கிய மடைகின்றன. உடலும் மனமும் சீரடைந்தவுடன் இருகரம் கூப்பி வேண்டுதலை மனதுக்குள் உச்சரித்தவாறே கோயிலில் வலம் வரவேண்டும் .ஒவ்வொரு சிலை முன்பும் தலைக்குமேல் இருகரம் கூப்பியபடியே சிறிது நேரம் நின்று பூசை செய்ய வேண்டும். வேண்டுதலின் தன்மைக்கேற்ப சுற்றுக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யவேண்டும். இவ்வாறு சென்று மூலவர் அல்லது கருவரைக்கு சென்று பின் வெளியே வரவேண்டும். இப்படி செய்தால் நிம்மதியும் காரிய சித்தியும் கிடைக்கும். கைகளை தொங்கவிட்டபடி வேறு நினைவுகளோடு சுற்றினால் பலன் இருக்காது. நிம்மதியடையாமல் ஒருவர் திரும்பினால் அவர் பூசை செய்த முறையில் தவறு உள்ளது என்றே அர்த்தம்.
தீபம் ஏற்றுதல் :மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காற்றை சுத்தப்படுத்த நல்லெண்ணெய், நெய், இலுப்பைஎண்ணெய் போன்றவற்றில் தீபம் ஏற்றப்படுகிறது.
பூஅலங்காரம்:அழகு படுத்தவும் நறுமனம் வீசவும் பூ பயன்படுத்தப்படுகிறது. அதனால் மனதில் புத்துணர்ச்சி கிடைக்கிறது .இதற்கு மகரந்த சேர்க்கையில் ஈடுபடாத பூக்களே பயன்படுத்தப்படுகிறது. பூ பூத்து பிஞ்சுவிடும் பூக்களை பறிக்கக்கூடாது. அவற்றின் இனவிருத்தியை தடுக்கக்கூடாது. நறுமனத்திற்காக ஊதுபத்தி, சாம்பிரானி போன்றவைகளும் பயன்படுத்தப்படுகிறது.
பலி இடுதல்: ஒரு இனம் மற்றொரு இனத்தை கொன்று தின்று வாழ்வதே இயற்கை. இது தவிர்க்க இயலாத ஒன்று. இதில் மாமிசம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்காது என்றாலும் ஒரு சிலர் மனது மாமிசத்தை விரும்புகிறது. அப்படிப்பட்டவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தரப்பரிசோதனை முறை. அதாவது ஒரு ஆட்டின் மேல் நீரை ஊற்றினால் அது ஆரோக்கியமான ஆடாக இருந்தால் சிலிர்த்துக்கொண்டு நிக்கும். இதுபோன்ற ஆடுகள் உண்ண தகுந்தவை. சிலிர்க்காமல் அப்படியே நின்றால் அது நோய்வாய்பட்ட ஆடு, அதை சாப்பிடக்கூடாது. கொல்லும்போது சித்திரவதை செய்யக்கூடாது. கருனை அடிப்படையில் ஒரே வெட்டில் கொல்வார்கள். இரத்தத்தில் செல்களின் கழிவுகளும் கலந்து இருப்பதால் இரத்தத்தை சாப்பிடாமல் கீழே ஊற்றிவிடுவார்கள். இதற்கு ஆண் இனம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (எ.கா ஆட்டுகிடாய், சேவல்). காரணம் பெண் இனம் இருந்தால்தான் இனவிருத்தி செய்யமுடியும். இதே போல்தான் மனித இனத்திலும் ஆண்கள் மட்டுமே போருக்கு செல்லவேண்டும், பெண்கள் காக்கப்படவேண்டும்.
குறிப்பு: எந்த இனத்தை சாப்பிட விரும்புகிறோமோ அந்த இனத்தை முதலில் வாழவைக்க வேண்டும் பின்பு அதில் சிறிதளவு எடுத்து உணவாக்கலாம்.
மனிதன் எவ்வாறு உயர்ந்தவனாகிறான்?
அறம் செய்து ஆகாரம் செய்ய மனிதனால் மட்டுமே முடியும். இதுவே உயர்வாக கருத காரணம்.
அறம்: உயிரினங்களை வாழவைப்பதற்கு அறம் என்றும் உயிரினங்களை கொன்று உணவாக்குவதற்கு ஆகாரம் என்றும் கூறுவர். உதாரணத்திற்கு நெல் ஒரே இடத்தில் கொட்டி முளைக்கும் போது நன்றாக விளையாது. அதையே தனி தனியே நடும்போது அதன் இனம் நன்றாக தழைக்கும் நல்ல விளைச்சல் இருக்கும். இப்படி 100 மூட்டைநெல்லை வாழவைப்பது அறம்(புண்ணியம்) அதில் 10 மூட்டை நெல்லை உணவாக்குவது ஆகாரம் (பாவம்). பாவத்தைவிட புண்ணியமே மேலோங்கி இருப்பதால் மனிதன் புண்ணியவான் ஆகிறான் .இது நகரத்தில் வாழ்பவருக்கு பொருந்தாது. "நாடுமெச்சும் நகரம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ அறியமாட்டார், ஆடுகின்ற தேவதைகள் அப்பாகேலு அறியதந்த இனம்சேரும் என்றே சொல்வார்" என்று அகத்திய முனிவர் கூறியுள்ளார். அதாவது பாவிகள் ஒன்றாக வாழுமிடம் நகரம். இவர்களுக்கு ஆறாவது உணர்வு சிறப்பாக இருக்காது அப்படியே இருந்தாலும் செயல்படுத்த முடியாது.
இயற்கை: மனிதனின் அறிவியலும் வின்ஞானமும் வளர்ந்துவிட்டது. உண்மைகளை உணர மனம் மறுக்கிறது. தாவரங்களின் வேர், தண்டு, இலை, காய், கனி இவற்றை உண்டுதான் மனிதன், விலங்குகள், பறவைகள், புழு, பூச்சி வாழவேண்டும். அவைகள் சுவாசித்து விட்ட காற்றையே சுவாசிக்க வேண்டும். அதேபோல் மனித கழிவு, விலங்குகள் கழிவு, பறவைகள், புழு, பூச்சிகள் கழிவுகளை உண்டும் தன்னுடைய மக்கிய பாகங்களை உண்டும் தாவரங்கள் வாழ்கின்றன. தாவரங்கள் அழியும்போது மற்ற இனங்கள் தானே அழியும்.... மனித கழிவை தாவரங்களுக்கு கொடுக்கமாட்டோம், விலங்குகளை வளர்க்கவும் வாழவிடவும் மாட்டோம், விவசாயம் செய்யமாட்டோம். இதுவா அறிவு வளர்ச்சி?. சிந்திக்கவும்.. இதுவே கலி முத்தியதற்கு அடையாளம்.
பூமி:சூரியனுக்கும் சந்திரனுக்கும் பிறந்த குழந்தை பூமி. இவரது மாமன் புதன், மனைவி சுக்கிரன், ஆசிரியர் குரு, சகோதரன் செவ்வாய்.பூமியும் நம்மை போல் உயிருடன் இருக்கும் ஜீவன்.நம் உடலில் கோடிக்கணக்கான ஜீவன்கள் வாழ்வது போல் நாம் பூமியின் மேல் பரப்பில் வாழ்கிறோம்.
மனித தர்மம்: பிறந்து விவசாயம் செய்வது சாப்பிடுவது தூங்குவது.
மனித அதர்மம்: அப்பார்ட்மென்ட் கட்டுவது, ஆயில் அன்ட் கேஸ் எடுப்பது அதர்மம் அகும். நம் உடலில் சொரி சிரங்கு வந்து அப்பார்ட்மென்ட் கட்டும்போது நாம் சும்மா இருப்போமா?.நமது உடலிலும் ஆயில் அன்ட் கேஸ் இருக்கிறது, நோய்க்கிருமிகள் அவற்றை எடுக்கும்போது சும்மா இருப்போமா?நடவடிக்கை எடுப்போம் அல்லவா.
பூமியின் நடவடிக்கை: பூமி தனக்கு வந்த நோயை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக ஆயில் அன்ட் கேஸ் எடுக்கும் பகுதிகள் பாதிப்படையும்.அதனால் மற்றபகுதிகள் குறிப்பாக நகரங்கள் ஆயில் அன்ட் கேஸ் இல்லாமல் உணவு தயாரிக்கக்கூட வழி இல்லாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.குறிப்பு:- கம்ப்யூட்டரும் செல்போனும் ஒரு புல்லைக்கூட வாழ வைக்க தகுதியற்றவை. உலக நாடுகள் தயாரித்திருக்கும் அணு ஆயுதங்கள் மனித இனத்தை காக்க அல்ல என்பதை உணரவேண்டும்.
யுகங்கள்:
கிருத யுகம் – பூமியின் குழந்தை பருவம் – 4800 x 360 = 17,28,000 வருடங்கள். இதில் உடல் வளர்ச்சி அடையும்.
திரேதா யுகம் – பூமியின் விடலை பருவம் – 3600 x 360 = 12,96,000 வருடங்கள். இதிலும் உடல் வளர்ச்சி அடையும்.
துவாபர யுகம் – பூமியின் இளமை பருவம் – 2400 x 360 = 8,64,000 வருடங்கள். இதில் உடல் அதே நிலையில் இருக்கும். வளராது.
கலி யுகம் – பூமியின் முதுமை பருவம் – 1200 x 360 = 4,32,000 வருடங்கள். இதில் என்னதான் ஆரோக்கிய உணவுகள் சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்காது. தோல் சுருங்கும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். இதுவே தற்போது நடந்துக்கொண்டிருக்கிறது. தற்போது 5118 ம் வருடம் நடந்துகொண்டிருக்கிறது. அப்போ மீதம் உள்ள ஆண்டுகள் வரை மனித இனம் இருக்குமா என்றால் இருக்காது. நம்மை சுற்றி உள்ள இயற்கையை உற்று கவனியுங்கள் உண்மை புரியும். அன்னப்பறவை அழிந்தது, சிட்டுக்குருவி, பச்சைக்கிளி போன்ற இனம் அழிந்துக்கொண்டே வருகிறது. சில புதிய இனம் உருவாகி வருகிறது. இதேபோல்தான் மனித இனமும். முன்பு இருவர் சேர்ந்து பத்து பதினாறு குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள், தற்போது இருவர் சேர்ந்து இரண்டு அதுவும் குறைந்து ஒன்று என்று ஆகிவிட்டது. அதுவும் தாய்ப்பால் மற்றும் பாசத்தை கொடுக்க முடியாத அதர்ம தாய்மார்கள். இதிலேயே புரிந்திருக்கும் தர்மத்தின் நிலை என்னவென்று. மேலும் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
கல்கி அவதாரம்: சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டால் அந்த உடலில் உள்ள பல ஆயிரம் கோடி ஜீவன்களும் அழிந்துவிடுகிறது. இதைதான் கல்கி அவதாரம் என்கின்றோம். உயிர் மீண்டும் புதிய உடல் எடுத்து வருகிறது அதைதான் புதிய உலகம் என்கின்றோம்.
வேண்டுகோள்: நல்ல எண்ணம் மற்றும் இறை நம்பிக்கை உள்ளவர்கள் வாருங்கள் ஒன்றிணைவோம் உண்மையையும் தர்மத்தையும் சத்தியத்தையும் மக்களுக்கு உணர்த்தி மனித இனத்தை காப்போம். இதில் உள்ள விஷயங்களை கடந்த ஒன்றரை வருடங்களாக காது கொடுத்து கேட்பவர்களிடம் சொல்லி வருகிறேன். பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் சிறிதளவு அவர்கள் தெளிவு பெற்றதை உணர முடிகிறது. இது உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் கொடுங்கள் அல்லது ஆளுக்கு 50, 100 சேர்த்து அச்சிட்டு மக்களுக்கு கொடுங்கள் தர்மத்தை வளர்த்த புண்ணியம் கிடைக்கும். எங்கேனும் இதைப்பற்றி பேச வாய்ப்பு கொடுத்தாலும் பேச விருப்பத்துடன் உள்ளேன். இதில் உள்ள தகவலை இதுவரை யாரும் புத்தகமாகவோ அல்லது கூகுலிலோ வெளியிடவில்லை. இது குண்டலினியை தலைக்கு ஏற்றி ஞான நிலையில் இருந்து உணர்ந்து எழுதப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் வெளியிடலாம்.
நன்றி: எனக்கு
காட்சி கொடுத்து தீட்சை கொடுத்து உபதேசம் செய்து எழுத தூண்டிய சிவனை போற்றி வணங்கி
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.யோக நிலை மற்றும் ஞான நிலையை அடைய குருவாக இருந்து
வழிகாட்டிய அகத்திய முனிவரை போற்றி வணங்குகிறேன்.இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்த
பதஞ்சலி முனிவர் மற்றும் சிவவாக்கிய முனிவரை போற்றி வணங்குகிறேன்.
எல்லாம் சிவ மயம்
ஒம் சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி தென்நாட்டவர்க்கு சிவனே போற்றி
மேலே குறிப்பிட்ட வரிகளுக்கு அர்த்தம் எல்லா
நாட்டிலும் இறைவன் என்று சொல்லுகிறார்கள் எங்கள் தென்நாடான தமிழ் நாட்டில் சிவன்
என்று சொல்கிறோம்.காரணம் தமிழ் மக்களுக்கு வேதத்தை கொடுத்து உபதேசமும் செய்தவர்.அவர்
வழி வந்த அனைத்துசித்தர்களுமே சிவன் என்றே அழைக்கப்பட்டார்கள்.
வாழ்க வளமுடன் வளர்க
மாட்டு இனம் செழிக்கட்டும்
விவசாயம்
மனிதனிடம் சமத்துவமும் சகோதரத்துவமும் வளரட்டும்
எனக்கு ஞான தீனி போட்டவர்கள்:
சரியை நிலையில்:
பெற்றோர்கள்:
மேன்மைமிகு. குருசாமி பழனியம்மாள் – K.N.குப்பம் – சாமி சாமி என்று தெய்வ நம்பிக்கையை ஊட்டிவளர்த்தவர்கள்
அதோடு துன்பம் வரும் நேரங்களில் ஜாதகத்தை பார்த்து விதிப்படி எல்லாம் நடக்கிறது என்பதை
உணரச்செய்தவர்கள்.
பெரியப்பா:
மேன்மைமிகு. தங்கமுத்து -– K.N.குப்பம் – பஞ்சாங்கம் பார்க்க, ஜாதகம் பார்க்க, பல்லி சொல்லுக்கு
பலன் பார்க்க, மழை வரும் தேதிகளை முன்கூட்டியே கணிப்பது போன்ற விஷயங்களை கற்றுக்கொடுத்தவர்.
சித்தர்கள்
ராஜ்யம் மேன்மைமிகு தோழி தர்ஷினி – இலங்கை (www.siththarkal.com) – 2011ம் ஆண்டுமுதல்
இவருடைய பதிப்புகளை படிப்பது எனது வழக்கம். கிடைக்காத பல நூல்கள் இவரது பதிவுகளில்
படிக்கமுடிந்தது. ஒரு சித்தரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசையை தூண்டியது, இவரது
அகத்தியர் தொகுப்பில் சொல்லப்பட்டபடி சிவ தரிசனம் காண முடிந்தது. குருவருள் இருந்தால்
குரு நம்மை தேடி வருவார் என்பதும் உண்மையே.
மேன்மைமிகு
ஹீலர் பாஸ்கர் - கோவை (anatomictherapy.org) –
2012ல் இவரது மருந்தில்லா மருத்துவம் ஆடியோ கேட்டேன். அதில் என்னுடைய
தேடுதல்களுக்கு முழு அளவில் விடை கிடைத்தது. காரணம் 2008 முதல் 2010 வரை ஆங்கில மருத்துவர்களால்
எனது வாழ்க்கை சீரழிக்கப்பட்டு பின்பு நானே சில பழைய குறிப்புகளை வைத்து குணப்படுத்திக்கொண்டேன்.
எனவே இது சம்மந்தமான தேடுதல் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. இவர் சொல்லும் விஷயங்கள்
மிகவும் ஆச்சரியமாக இருக்கும் ஒரு ஆள் எப்படி இவ்வளவு விஷயம் தெரிந்து இந்த அளவுக்கு
சொல்ல முடிகிறது என்று. தற்போது உலக அரசியல், பானு வீட்டுக்கல்வி முறை என்ற கல்வி சீர்திருத்தம்
போன்றவை மிகவும் சிந்திக்க வைத்தவை.
மற்றவர்கள்:
இங்கே அனைவருடய
பெயர்களையும் குறிப்பிட முடியவில்லை. எண்ணி சொல்லிவிடவும் முடியாது. பெரியவர் சிரியவர்
என்ற வேறுபாடில்லாமல் எனது தேடுதல்களுக்கு எவர் தெளிவுபடுத்தினாலும் என் மனதிற்கு சரி
என்று தோன்றியவற்றை ஏற்றுக்கொள்வது எனது வழக்கம்.
கிரியை
நிலை:
மேன்மைமிகு
பாபா ராம்தேவ் – பதஞ்சலி யோகா குரு – இவரது வீடியோவை பார்த்து பயிற்சி செய்தேன். அதுவே
குண்டலினியை மேலே ஏற்றியது.
யோகம்
மற்றும் ஞான நிலை:
ஞானவெட்டியான்
– திண்டுக்கல் – இவர்
சிவவாக்கியர் பாடலை விளக்கத்துடன் இணையதளத்தில் விட்டவர்.
அகத்திய
முனிவர்: YOUTUBEல்
“மனமது செம்மையானால்” என்ற அகத்தியர் பாடலை வெளியிட்டிருந்தார் அவர் பெயர் தெரியவில்லை
–. இந்த பாடல் வரிகளே குண்டலினியை ஏற்றவும் அதன் மூலம் உலகை காணவும் வழி செய்தது. இது
எனக்கு அகத்தியரே நேரில் குருவாக இருந்து சொன்னதுபோல் தோன்றியதால் இவரே எனது முக்கிய
குரு ஆவார். 40 நிமிட பாடல் ஆனால் நாட்கணக்கில் பேசலாம்.
சிவன்:
ஈசனே
20-6-2015 பூச நட்சத்திரத்தன்று சிறு திருவிளையாடல் நடத்தி நேரடி காட்சி கொடுத்து தீட்சையும்
கொடுத்து உண்மைக்கு மதிப்பு 10 பொய்யுக்கு மதிப்பு 500 (அதாவது 2% உண்மை) உள்ளது என்பதை
உணர்த்தினார் அதன்பின்பே ஞான நிலையில் மேலே சொன்ன விஷயங்கள் உணரப்பட்டது.
வேண்டுகோள்:
தமிழ் அறிஞர்கள் இதில் உள்ள இலக்கண மற்றும் எழுத்து பிழைகளுக்கு மன்னித்துக்கொள்ளும்படி
வேண்டுகிறேன்.
.இவன்
கு.மணிக்கண்ணன்.
கு.மணிக்கண்ணன்.
https://manikannan882.blogspot.in/
Cell: 8526319082.
சொந்த ஊர் முகவரி: வசிப்பிடம்:
K.N.குப்பம், 4/407,
செந்தில் நகர்,
கூவத்தூர் ( அஞ்சல்) பார்வதி
நகர், பழைய பெருங்களத்தூர்,
உடையார்பாளையம் (வட்டம்) சென்னை
- 63
அரியலூர் (மாவட்டம்) PIN: 621803.
கருத்துகள்
கருத்துரையிடுக