கரகம் சுமந்து வருபவர்


கரகம் சுமந்து வருபவர் : கரு + அகம் சுமந்து வருபவர் என்பது கர்ப்பிணி பெண்ணை குறிக்கும். அகம் என்றால் உள்ளே என்று அர்த்தம். கருவை உள்ளே சுமந்து வருபவர். இவர் செல்லும் வீட்டிலெல்லாம் இவருக்கு சிறந்த உணவு படைக்கப்படும் (தயாரித்து கொடுக்கப்படும்). இதனாலேயே கரகம் சுமந்து வருபவருக்கு சுண்டல், மாவு, பழரசம் (பானம்) வழங்கப்படுகிறது.  மேலும் இவர் (கர்ப்பிணி) வெயிலில் நடக்கும்போது அவரது துன்பம் தீர்க்க அவரது காலில் தண்ணீர் ஊற்றுவார்கள்.

நோக்கம்: கர்ப்பிணி பெண் இன்பமாக இருந்தால்தான் கருவில் இருக்கும் குழந்தை (கடவுள்) அறிவளியாகவும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சொல்லிக்கொண்டே போகலாம். புரிதலுக்கு இது போதும் என்று நம்புகிறேன். 

கரகம் சுமந்து வருபவருக்கான பூஜை: கரு + அகம் சுமந்து வருபவர் என்பது கர்ப்பிணி பெண்ணை குறிக்கும். இது நமது ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் சடங்கு முறைதான். அதாவது கர்ப்பிணி பெண்ணுக்கு மூன்றாம் மாதம், ஐந்தாம் மாதம், ஏழாம் மாதம் மற்றும் ஒன்பதாம் மாதத்தில் காப்பு இடப்படுகிறது. அப்போது கர்ப்பிணி பெண்ணுக்கு அலங்காரம் செய்து ஒரு இருக்கையில் அமரவைத்து அவரது முன்பு தீபம் ஏற்றப்படும். பின்பு உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து அப்பெண்ணின் கழுத்தில் பூமாலை போட்டு பூஜை (வணங்குவார்கள்) செய்வார்கள்.

ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?

உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் சக்தி(தெய்வம்) உள்ளது. ஆனால் கர்ப்பகாலத்தில் உள்ளவர்களுக்கு ஐந்து மடங்கு சக்தி இருக்கும். அப்போது சக்தியாக விளங்கியவள் மஹாசக்தியை விளங்குவாள். இதை புரிய வைக்கவே அம்மன் தலையில் ஐந்து தலை நாகம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த தாயின் எண்ணங்களும் செயல்களும் கருவில் இருக்கும் குழந்தையின் எதிர்காலத்தையும் அக்குழந்தையின் செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் மூலக்காரணமாகவும் விளங்குகிறது. கர்ப்பிணியின் சக்தியின் அளவில் சந்தேகம் உள்ளவர்கள் அல்லது சோதிக்க நினைப்பவர்கள் பின்வரும் சோதனையை செய்து பார்க்கவும். மூன்று கிலோ எடை உள்ள ஒரு பொருளை அடி வயிற்றில் கட்டிக்கொண்டு நாள் முழுவதும் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்யவும் பின்பு அப்படியே தூங்கவும் மீண்டு காலையில் எழ வேண்டும். இப்போது அவளின் சக்தியின் அளவு புரிந்துவிடும். 

கர்ப்பிணி பெண்ணை எப்பொழுதுமே வணங்க வேண்டும். அப்பொழுது அவர்களுக்கு மனதினுள் தெய்வீக எண்ணம் தோன்றும் (நம்மை தெய்வமாக வணங்குகிறார்கள் என்று) இதனால் கருவில் இருக்கும் குழந்தை புனிதமான தெய்வீக எண்ணத்துடன் பிறக்கும். இக்குழந்தையின் வாழ்வு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஆனால் நாம் இதை வளைகாப்புக்குமட்டும் ஒரு சடங்கு சம்பிர்தாயக செய்கிறோம். இப்போது உண்மைகளை உணர்ந்துவிட்டோம்.இனிமேல் கர்ப்பிணி பெண்களை வணங்குவோம் உண்மையாய் வாழ்வோம்.

அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள், இதை மதம் சார்ந்து பார்க்க வேண்டாம் கரணம் மற்ற சமயங்கள் உருவாகும் முன் சிவனால் சொல்லப்பட்டு திராவிடர்களால் பின்பற்றப்பட்ட அறிவியல் இது. இப்போது இவைகள் எனது தவ (ஆழ்ந்த சிந்தனை) வலிமையால் சிறிது சிறிதாக மீட்டெடுக்கப்படுகிறது. மதம் என்ற சொல்லுக்கு உயர்வு தாழ்வு பார்த்தால் என்று அர்த்தம். இங்கே அனைவரும் ஒன்றுதான் உயர்வு தாழ்வுக்கு இடம் இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.

இங்கு எதையும் நான் புதிதாக சொல்லவில்லை. முன்பே சொல்லப்பட்டவற்றை தெளிவு படுத்துகிறேன் அவ்வளவுதான். மதம் சார்ந்து பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு சிவன் பெயரை குறிப்பிட்ள்ளீர்களே என்று கேட்கலாம். சொன்னவரின் பெயரை சொல்லவேண்டுமல்லவா அதுதானே நியாயம் தர்மம். அதனால்தான். புரிதலுக்கு இது போதும் என்று நம்புகிறேன்.

 

நீர் வளம் நில வளம் பெருகட்டும் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும்!. செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம்!, உலக மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும்!. எனக்கும் உபதேசம் செய்த இறைவனுக்கு (சிவன்) நன்றி கூறி போற்றி வணங்குகிறேன். நன்றி வணக்கம்.

எல்லாம் சிவமயம்.

 

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு