"ஓம் திருவள்ளுவர் ஐயா போற்றி" என்று ஐயனின் பொற்பாதங்களை போற்றி வணங்கி அவர் வழி நின்று இந்த உறையை தொடங்குகிறேன். அவர் ஒரு முனிவர் (சித்தர்) என்பது முதலில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. காரணம் சாதிமத வேறுபாடு அற்றவர்களாக வாழ்பவர்கள் முனிவர்கள். மேலும் இவரது கடவுள் வாழ்த்து பத்து குறள்களும் இதற்கு சான்றாக கொள்ளலாம். இன்னும் சொல்ல வேண்டுமானால் உலகம் அமைந்துள்ள விதம் முனிவர்களால் மடுமே அறிய முடியும். அதை அவரது முதல் குறளிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.
சரி முதல் குறளை பார்ப்போம்.
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
அகரம் முதலிய எழுத்துக்களுக்கு எல்லாம் உலகின் முதன்மையானவர் ஆதி குரு அல்லது ஆதி சிவன் ஆவார். தமிழ்வழி வந்த அனைத்து முனிவர்களும் சித்தர்களும் ஆதி சித்தனாகிய சிவனையே குருவாக வணங்குவது வழக்கம்.
பகவன் என்பதற்கு சிவன் என்று பொருள் - பிங்கல நிகண்டு, இரண்டாவது வானவர்வகை செய்யுள் எண் : 2.
எழுத்துக்களுக்கு "அ" முதன்மையானது அதுபோல் மனித இனத்திற்கு ஆதி சிவன் முதன்மையானவர். சிவனையே ஆதி சித்தன் ஆதி குரு என்றும் சொல்வார்கள் சான்றோர்கள்.
பகவன் - சூரிய பகவன், சந்திர பகவன், புதன் பகவன், குரு பகவன்,சுக்கிர பகவன், சனி பகவன், ராகு பகவன், கேது பகவன் என்றும் மேலும் ஐந்து சக்தி (பஞ்ச பூத) கோயில்களும் பகவன் என்றே அழைக்கப்படுகிறது.
பகவன் என்பதற்கு சிவன் என்று பொருள் - பிங்கல நிகண்டு, இரண்டாவது வானவர்வகை செய்யுள் எண் : 2.
எழுத்துக்களுக்கு "அ" முதன்மையானது அதுபோல் மனித இனத்திற்கு ஆதி சிவன் முதன்மையானவர். சிவனையே ஆதி சித்தன் ஆதி குரு என்றும் சொல்வார்கள் சான்றோர்கள்.
பகவன் - சூரிய பகவன், சந்திர பகவன், புதன் பகவன், குரு பகவன்,சுக்கிர பகவன், சனி பகவன், ராகு பகவன், கேது பகவன் என்றும் மேலும் ஐந்து சக்தி (பஞ்ச பூத) கோயில்களும் பகவன் என்றே அழைக்கப்படுகிறது.
உலகு -
நமது உடல் பலகோடி ஜீவன்களின் கூட்டுத்தொகுப்பு, நமது உடலில் தினமும் கோடிக்கணக்கான உயிரினங்கள் பிறப்பதும் இறப்பதும் நடந்துகொண்டுள்ளது. இதேபோல் பூமி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்(குரு), வெள்ளி(சுக்கிரன்), சனி போன்ற பலகோடி கிரகங்களிலும் இதுவே நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு உடலும் தனி தனி உலகம்.
இதில் குறையேதும் இருப்பின் சான்றோர் பெருமக்கள் மன்னித்து எனக்கு தெளிவுபடுத்தும்பாடி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கற்றதனால் என்ன பயன் என்றால்
வாலறிவன் – வால்+ அறிவன் = பகுத்தறிவன்.
வால் என்பதற்கு சுத்தம் என்று பொருள் - பிங்கல நிகண்டு, செய்யுள் எண் : 1028.
வால் என்பதற்கு சுத்தம் என்று பொருள் - பிங்கல நிகண்டு, செய்யுள் எண் : 1028.
நற்றாள் – அனைத்து உயிர்களும் உருவாக மூலக்காரணமானவர்.
அதாவது எடுத்துக்காட்டாக நாம் கருவாகி உருவாக காரணமான அந்த இரண்டு செல்கள், அவை இரண்டும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து உடல் உறுப்புகள் அனைத்தும் உருவானது. மேலும் நாம் உண்ட உணவு ஜீரண மண்டலத்தை கடந்து பலவகையான உயிரினமாக வருகிறது. இந்த செல்களுக்கு உயிர் கொடுத்த மற்றும் மூலகாரணம் ஆனவர் யார் என்று யோசித்தால் இது நமது அறிவுக்கு அப்பாற்பட்டு நடப்பது புரியும் மேலும் பிரபஞ்சத்தில் நமது அறிவால் எதுவும் நடப்பதில்லை என்பது புரியும். இப்படி புரிந்தவர்கள் இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் காரணகர்த்தாவான இறைவனை தொழுவார்கள்.
அப்படிப்பட்ட இறைவனை தொழவில்லை என்றால் கற்று என்ன பயன். தெளிவாகவில்லை என்றுதானே அர்த்தம்.
இறைவன் என்றால் ஆதியும் அந்தமும் அற்றவன் என்று அர்த்தம். அதாவது முதலும்( தொடக்கமும்) முடிவும் இல்லாதவர் என்று அர்த்தம். இதை அந்த குறள் படிக்கும்போது விளக்குகிறேன்.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர்மிசை ஏகினான் – மலரும் இசையை அடைந்தவர். அதாவது குண்டலினி சக்தி ஆக்கினை சக்கரத்திற்கு ஏறி தீபச்சுடராக சுற்றி பின்பு துரிதமான உச்சந்தலையை அடைந்தவுடன் பிடரியில் ஒளிவட்டம் தெறியும். இதை குண்டலினி மலர்ச்சி அல்லது உயிர்மலர்ச்சி என்பர். இப்படி குண்டலினி மேலேறும்போது ஒரு இசை வரும். இந்த இசையை ஆதிசித்தனாகியவரான சிவன் குடுகுடுப்பை இசை போல் இருப்பதாக சொன்னார். பின்பு 7500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வால்மீகி முனிவர் சங்கு இசைபோல் உள்ளதாக சொன்னார். இந்த இசை இரண்டு இசைகளுக்குமே பொருந்தும்படிதான் உள்ளது. இதை உணர்ந்தவர்களுக்கு நன்றாக புரியும்.
மாணடி சேர்ந்தார் – இறைவனது அடியை சேர்ந்தவர். அதாவது முனிவரானவர்கள் இறைவனுக்கு அடிபணிந்தும் அவரது வழிகாட்டுதலின்படியும் (அடியாராகவும்) வாழ்வார்கள்.
நிலமிசை நீடுவாழ் வார் –
பூமி உயிரோடு உள்ள காலம் வரை நீடூடி வாழ்வார். அவரது புகழ் நிலைதிருக்கும்.
இசை என்றால் புகழ் - பிங்கல நிகண்டு.
இசை என்றால் புகழ் - பிங்கல நிகண்டு.
4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
உலகில் படைக்கப்பட்ட கோடான கோடி உயிரினங்களில் இது தனக்கு வேண்டிய
இனம் இது தனக்கு வேண்டாத இனம் என்று இறைவன் பார்ப்பதில்லை. இறைவனின்
அதே வழியை பின்பற்றி வாழ்பவர்களுக்கு துன்பம் ஒருபோதும் இல்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இருள்சேர் இருவினை – அதாவது ஒரு தொடக்கம் இருந்து அதற்கு முடிவு ஏற்ப்பட்டால்
அந்த முடிவுக்கு பிறகு இருள் சேர்ந்ததாக கொள்ளவேண்டும் (எ.கா.பிறப்பு இறப்பு).
இருவினையும் சேரா இறைவன் – இறைவனுக்கு இந்த இரண்டு
வினைகளுமே சேர்வது இல்லை. அப்படிப்பட்ட இறைவன் பொருளையும் புகழையும்
கிடைக்கச்செய்வார். பொருள் சேருதல் என்றால் கோடிக்கணக்கில் பணம்
சேர்த்தல் என்றோ அல்லது ஊரார் சொத்துக்ளை தன்னுடையதாக்குவது என்றோ அர்த்தம் இல்லை.
தேவைக்கேற்ப பொருள் சேர்த்தல் என்று எடுத்துக்கொள்ளவும். தேவைக்கேற்ப என்பது தெளிவானவர்களுக்கு புரியம். பஞ்சபூத
சக்திகள் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுகிறது. மேலும் அந்த சக்திகள்
அதிகமானாலும் குறைந்தாலும் துன்பம் (நோய்) ஏற்படும்.
நிலம், நீர், நெருப்பு,
காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களே இறைவன் என்று
அழைக்கப்படும். இதில் ஒன்று இல்லை என்றாலும் எந்த உயிரினமும்
வாழ முடியாது. இவைகள்
அனைத்துக்கும் தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.
அதனால்தான் ஆதியும் அந்தமும் அற்றவர் இறைவன் என்கிறோம். (எ.கா)
நம் உடலில் உள்ள சூடு (வெப்பம்) எங்கே தொடங்கி எங்கே முடிகிறது, சுவாசிக்கும் காற்று
எங்கே உருவானது, யார் உருவாக்கியது, எங்கு
முடிகிறது. புரிதலுக்கு இது போதும் என்று நம்புகிறேன்.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐந்தவித்தான் பொய்தீர்– நமது உடலில் உணரக்கூடிய ஐந்து உணர்வுகளை பொறிவாயில் ஏற்படும் தீச்சுடரில் வைத்து சிந்திக்கும்போது ஆறாவது உணர்வான சிந்தனையில் பொய்கள் நீக்கப்பட்டு உண்மைகள் புரியும்.
ஆறு உணர்வுகளையே(Sense) ஆறு அறிவு(Knowledge) என்கிறார்கள்.
அவைகள்: 1. கண்ணால் பார்ப்பது. 2. காதால் கேட்பது. 3. மூக்கால் நுகர்வது. 4. நாக்கால் ருசிப்பது. 5. தொடு உணர்வு (உடலில் தொடுவதால் ஏற்படும் உணர்வு). 6. சிந்திக்கும் திறன்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
இறைவனின் எட்டு குணங்களில் ஒன்றுதான் தனக்கு உவமை இல்லாதவன். அப்படிப்பட்ட இறைவனின் காலடியை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களின் மனக்கவலையை மாற்றுவது என்பது அரிதான ஒன்றுதான்.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறவழியில் வாழக்கூடிய அந்தணனின் அடிகளை சேர்ந்தவர்வர்களை தவிர மற்றபடி வாழ்பவர்கள் பிறவிக்கடலை கடப்பது அரிது ( இயாலாத காரியம்).
அந்தணன் என்பதன் வேறு பெயர்கள் : ஐயர், முனிவர், மாதவர், இலிங்கிகள், முனைவர், படிவர், உறுவர், பண்ணவர், அறவோர், தபோதனர், அறிஞர், துறவோர், கடிந்தோர், மோனியர், யோகியர், கோபங்காய்ந்தோர், நீத்தோர், மெய்யர், தாபதர், இருடிகள். - பிங்கல நிகண்டு.
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
ஒருவருக்கு நல்ல குணங்கள் இல்லை என்றால் அவருடைய தலை இறைவனை வணங்காத தலையாகதான் இருக்கும். இறைவனை உணர்ந்தவர்கள் நல்ல குணங்களுடன் இருப்பார்கள்.
எண்குணத்தான் என்பது இறைவனை குறிக்கும்
சிவனெண்குணத்தின் பெயர் – பிங்கல நிகண்டு
1. பவமின்மை – பிறப்பின்மை.
2. இறவின்மை – இறப்பின்மை.
3. பற்றின்மை – எந்த ஒரு பற்றுதலும் இல்லை.
4. பெயரின்மை – இதுதான் பெயர் என்று இல்லை.
5. உவமையின்மை – உவமையாக எதனுடனும் ஒப்பிட முடியாது.
6. ஒருவினையின்மை – எந்த வினையும் இல்லை ( புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை).
7. குறைவிலறிவுடைமை – குறையாத அறிவுடைமை (நிறைந்த அறிவுடைமை).
8. கோத்திரமின்மை – இந்த தெய்வத்தை வணங்குகிறார் என்று சொல்ல இயலாமை.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனடியை சேர்ந்தவர்கள் பிறவி என்னும் பெருங்கடலை நீந்தி மறுபிறப்பு இல்லாத நிலையை அடைவார்கள். மற்றவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து கர்ம வினைகளை அனுபவிப்பார்கள்.
குறிப்பு : அனைத்து படைப்புகளும் இறைவன் செயலே ( இறை நினைப்போடு இருப்பதும் இறை நினைப்பே இல்லாமல் இருப்பதும்).
***முற்றிற்று***.
கருத்துகள்
கருத்துரையிடுக