மனித இனத்தின் எதிர்காலம்
முட்டை காளான் புடுங்கி : இந்த வார்த்தைகளை ஒரு சிலர் கேள்விபட்டிருப்பீர்கள். அடிப்படை அறிவு இல்லை என்று சொல்வதை மறைமுகமாக இப்படி சொல்வார்கள்.
அதாவது காளானை பற்றி அறிந்தவர்கள் எது சாப்பிடக்கூடிய காளான் என்று அறிந்து பிடுங்குவார்கள் அறியாதவர்களோ வயலில் முட்டை முட்டையாக அழகாக இருக்கும் காளானை புடுங்கி வருவார்கள். இதை சாப்பிட்டால் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடும். எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்பது அடிப்படை அறிவு. இது வழிவழியாக ஒருவர் கற்றுக்கொடுக்க மற்றவர் கற்றுக்கொள்வர். இது கற்றல் முறையில் அறிவது. புத்தகம் படித்தல் முறையில் இதுபோன்ற கல்வி கற்க முடியாது.
ஆனால் தற்போதைய கல்வி முறை படித்தல் மூலம் மதிப்பெண் பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளதால் படித்தவர்கள் எந்த தாவரங்கள் பற்றியும் அறியாமல் உள்ளார்கள். மேலும் மூலிகையாகவும் மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் தாவரங்களை சாப்பிட பயப்படுகிறார்கள். மாத்திரை மருந்துகள் மீது உள்ள நம்பிக்கை தாவரத்தின் மீது இல்லை. இதன் விளைவு அடுத்த தலைமுறைக்கு எதுவும் கற்றுத்தராமல் அறியாமையில் மூழ்கிவிடுவார்களோ என்ற எண்ணம் என்னுள் எழுகிறது.
அன்பர்கள் அனைவரிடமும் வேண்டுவது என்னவென்றால் முதியோர்களை மதித்து அவர்கள் கற்று அறிந்தவற்றை கற்றுக்கொள்ளுங்கள் மேலும் தாங்கள் கற்றவற்றை அடுத்த சந்ததிக்கு கற்றுக்கொடுங்கள்.
விலங்குகளுக்கு இயல்பாகவே இந்த சக்தி உள்ளது, எதை சாப்பிடலாம் எதை சாப்பிட கூடாது என்று அறிந்து உண்ணும். அவைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மனிதனுக்கு தானாக உணரும் சக்தி இல்லாததால் கற்றுக்கொடுப்பது அவசியம்.
விலங்கினம் கற்காமல் நீரில் நீந்துவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் மனிதன் நீச்சல் கற்றபின்பே நீந்த முடிகிறது என்பதை உதாரணமாக கருதலாம். கற்றவர்களுக்கு பயம் இல்லை, கற்றுக்கொள்ளாமல் படிப்பதை நோக்கமாக கொண்டால் எதைபார்த்தாலும் பயமும் நம்பிக்கை இன்மையும் ஏற்படும். தூதுவலை சாப்பிடலாம் என்றால் அந்த செடி எப்படி இருக்கும் எப்படி சாப்பிடுவது எதற்க்காக சாப்பிட வேண்டும் என்பவற்றை கற்றல் மூலம் அறிதல் அவசியம்.
நன்றி வணக்கம்.

கருத்துகள்
கருத்துரையிடுக