தமிழ் தோன்றிய காலம்



வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! ஓங்குக சிவன் புகழ்!!!

 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல அவரவர் தாய்மொழி அவரவருக்கு சிறந்தது.

 எந்த மொழி உலகின் முதல் மொழி  என்றும் ஒவ்வொரு மொழியினரும் தமது மொழியே உலகின் மூத்த மொழி என்றும் கூறி வருகின்றார்கள்.  இதில் ஒரு சிலர்   மூன்று  ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் 5 ஆயிரம் ஆண்டுகள் காலம் பழமையானது என்று  கூறி வருகிறார்கள் காரணம் அதற்கான சான்றுகள்  நம்மிடம் இல்லை.  ஆனால் எவ்வளவு காலம்  பழமையானது என்பதற்கான அடையாளம் நம்மிடம் உள்ளது.

  தமிழ் எத்தனை வருடம் பழமையான மொழி என்று எவராலும் கூற இயலாது.   ஆனால் 7500 வருடங்களுக்கு முன்பே  தமிழும் தமிழர்களின் அறிவியலும் சிறப்பாக இருந்தது.

 அதற்கான அடையாளம்  மகாபாரதம் வந்து 5120 வருடங்கள்  ராமாயணம் வந்து 7500 வருடங்களுக்கு மேல் ஆகிறது.  இந்த ராமாயணமும் மகாபாரதமும் பகவத்கீதையும் இந்தியாவில் பரப்பப்படும் போது அவரவர் தாய் மொழிகளும் இருந்துகொண்டுதான் இருந்தது.

   இந்த சமஸ்கிருத நூல்கள்  தமிழ்  மக்களிடம்  வரும் முன்பு  தமிழர்களின் மறை (வேத) நூலாக மனு சூத்திரம் இருந்தது.  மனு சூத்திரம் என்பது ஆயக்கலைகள்அறுபத்தி நான்கில் கண்ணாக விளங்கக்கூடிய ஜோதிட நூல்கள் அதாவது ஜாதகம் பார்ப்பது.  அதாவது ஒவ்வொரு மனிதனும் ஒரு சூத்திரத்தின் அடிப்படையிலேயே செயல்படுகிறார்கள்.  ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இலக்கணம் உண்டு அந்த இலக்கணத்தை குறிப்பதே ஜாதகத்தில் லக்கனம் என்கிறோம்.  இதிலிருந்து புரிந்து இருக்கும் தமிழர்களுக்கு வானவியல் அறிவியலும் ஆன்மீக அறிவியலும் மிக சிறப்பாக இருந்தகாலம் இந்த 7 ஆயிரத்து 500 வருடத்திற்கு முந்தைய காலங்கள்.  அதனால் எவ்வளவு பழைமையானது என்று எவராலும் கூற இயலாது. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே தமிழும் இருந்து கொண்டுதான் இருக்கிறது

 ஆதி சித்தனாகிய சிவன் தமிழ் மொழியை நமக்கு தந்தார் அதன் பின்பு அவர் வழி வந்த அவரது சீடர்கள் நந்தி, தட்சிணாமூர்த்தி, ஆதி திவாகர முனிவர்,  திவாகர  முனிவர், அகத்தியர்,  தொல்காப்பியர் திருமூலர்  திருவள்ளுவர் ஔவையார், ராமலிங்க அடிகளார் போன்ற பல முனிவர்கள் தமிழைப் போற்றி காத்து வந்தார்கள்..

 தமிழ் எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையானவர் ஆதி சிவன்  என்பதனை திருவள்ளுவர் பெருமான்  தனது முதல் குறளில் தெரிவித்துள்ளார்.

அகர முதல எழுத்தெல்லாம்  ஆதி
பகவன் முதற்றே உலகு.

 இதில் ஆதி பகவன் என்றால் ஆதி சிவன் என்று பொருள்.  இதை நானாக  ஏதோ கற்பனையாக சொல்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.  பிங்கல முனிவர் எழுதிய பிங்கல நிகண்டு என்ற நூலில் பகவன் என்ற சொல்லிற்கு சிவன் என்று பொருள்   கூறியுள்ளார்.  என்ன காரணம் என்று தெரியவில்லை  திருக்குறளுக்கு தெளிவுரை எழுதுகிறவர்கள் இந்த நிகண்டை  பொருட்படுத்தவில்லை.

 தற்போது இந்த நிகண்டு கடைகளில் கிடைப்பதும் இல்லை.  தமிழைப் போற்றி காக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் கிடைக்கும்  பிங்கல நிகண்டு பிரிண்ட் எடுத்து படிக்கவும்.

நன்றி வணக்கம்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு