அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீர்வளமும் நிலவளமும் விவசாயமும் செழிக்கட்டும்
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும் தர்மம்
தழைத்தோங்கட்டும்.
இந்தப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு
அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
ஒற்றுமையை போற்றுவோம்.
சித்திரை ஒன்று என்பது தமிழர்களின் புத்தாண்டு. தமிழை தாய் மொழியாக
கொண்ட அனைவருமே தமிழர்களே. அனைத்து தமிழர்களும் அடிப்படையில் சைவ
சமயத்தை சார்ந்தவர்களே அதாவது சிவ வழியை பின்பற்றியவர்கள். தமிழ் மொழி சைவ சமயத்தவர்களால் போற்றி
பாதுகாக்கப்பட்டு வருகின்ற மொழி. தமிழர்கள் ஒருபோதும் உயர்வு தாழ்வு
பார்ப்பது இல்லை. இதற்கு சான்றாக சிவன் கோயில்களில் சைவ குறவர்களின் சிலைகளை வைத்து பூஜை செய்வதைப்
பார்த்திருப்பீர்கள். ஐவகை நிலங்களில் வாழ்பவர்களுக்கு
தனித்தனி பெயர்கள் உண்டு. ஆனால் அனைவரும் சமமாகவே மதிக்கப்பட்டார்கள். இதில் மலைகளில் வாழ்பவர்களுக்கு குறவர்கள் என்று
பெயர். எந்த
நிலத்தில் வாழ்பவர்களாக இருந்தாலும் முனிவராக ஆகிவிட்டால் அவரை ஏற்றுக் கொள்வது
தமிழர்களின் மரபு. மற்ற மதங்களை ஏற்றுக் கொண்ட பின்பே தமிழர்களிடையே பிரிவினைகள் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே. மீண்டும் அனைவரையும் ஒற்றுமையாக்க எடுத்த
முயற்சியே முருகன் வள்ளி குறத்தியை திருமணம் செய்து கொண்டது.
தமிழர்கள் எந்த சமயத்தையும் இழிவுபடுத்துவது இல்லை. இதற்கு சான்றாக எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தென்நாடுடைய சிவனே போற்றி என்ற வரிகள் அனைவரும் அறிந்தது. எல்லா நாட்டிலும் இறைவன் என்று சொல்கிறார்கள். அந்த இறைவனுக்கு தமிழர்கள் சிவன் என்று பெயர் வைத்துள்ளோம். இறைவன் என்றால் பஞ்சபூதங்கள். அதற்கு யார் என்ன பெயர் வைத்துக்கொண்டாலும் அது அவரவர் விருப்பம். தமிழர்கள் ஏன் எல்லாவற்றிர்கும் சிவன் பெயரை வைத்தார்கள் என்றால் அவரே ஆயக்கலைகள் 64 ங்கினையும் கொடுத்தவர் மேலும் மொழி தந்தார், எவற்றையெல்லாம் உணவாக சாப்பிடலாம் எவையெல்லாம் சாப்பிடக்கூடாதவை ஒவ்வொரு மரம், செடி. கொடி, பறவைகள், விலங்குகள் போன்றவற்றின் தன்மை பண்புகள் இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம் இதையெல்லாம் தமிழர்களுக்கு சொன்னவர் சிவன். அதனால்தான் கடவுளுக்கும் இறைவனுக்கும் அவர் பெயரையே வைத்துள்ளோம். தமிழ் மரபுகளை தமிழர்கள் அறியவில்லை என்றால் அவர்கள் பிரபஞ்ச ரகசியம், மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் பற்றி எதுவும் அறியாதவர்களாகவே இருப்பார்கள். வேண்டுமென்றால் அவ்வாறானவர்களை சோதித்து பார்த்து அறிந்துகொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.
தமிழை போற்றுவோம் தமிழில் பேசுவோம். அவரவர் தாய்மொழி அவரவருக்கு சிறந்தது.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! ஓங்கட்டும் சிவன் புகழ்!!! தர்மம் தழைத்து
ஓங்கட்டும்!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக