வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!! ஓங்கட்டும் சிவன்
புகழ்!!!
தர்மம் தழைத்து ஓங்கட்டும்!!
அதர்மம் தலைதூக்கி ஆடும்போது தர்மம் காக்கப்படவேண்டியது அவசியமாகிறது.
அதற்காக “கொடும்பாவிகளை” அழிக்கவேண்டும் அதாவது கனிம வளங்களை எடுத்து விற்பனை செய்ப்பவர்களின்
எண்ணங்கள் அழியவேண்டும். அவர்களது எண்ணங்களுக்கு உடந்தையாக இருந்தால் பூமி தன்னை காத்துக்கொள்ள
சில நடவடிக்கைகளை எடுக்கும் அப்போது பெரும் அழிவுகள் நடக்கும் அதற்குப்பதிலாக அந்த
கொடும்பாவிகளை அழித்துவிடுவது நல்லது. இயற்கை நமக்கு சாதகமாக இல்லாதபோது நம்முன்னோர்கள்
கொடும்பாவியை கட்டி இழுத்து சென்று விளக்காமாரு (துடைப்பம்) முரம் போன்றவற்றால் அடித்து
பின்பு எரியவிடுவதை பார்த்திருப்பீர்கள்.
நமது உடலில் கொடும்பாவிகள் (நோய்கிருமிகள்) நம்மை சித்ரவதை செய்யும்போது
நாம் உணவு மற்றும் தண்ணி குடிக்காமல் விரதம் இருப்போம் அப்போது அவைகளுக்கு உணவு தண்ணி
கிடைக்காமல் அழிந்துவிடும். மேலும் உணவுமுறையில் சீர்திருத்தம் செய்து பஞ்சபூத சக்தியை
சமன் செயும்போதும் அவைகளின் வாழ்வாதாரம் அழியும் அதனால் அந்த இனம் அழியும். பூமியும்
தற்போது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போதைய உலகில் மனிதர்களிடம் ௨(2) பங்கு தர்மமும் ௧௦௦(100)
பங்கு அதர்மமும் உள்ளது. விஞ்ஞானம் வளர்ந்த்துவிட்டதாக தோன்றும் மனிதர்களுக்கு மனித
இனம் குறைந்து வருவதை உணர முடியவில்லை.
இரண்டுபேர் இணைந்து ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஒருசிலர் அதுவும் வேண்டாம் லிவ் டுகெதர் (Live together) மட்டுமே போதும் என்ற நிலை
மேலும் சிலர் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு முப்பது வயதைக்கூட தொடமுடியாத நிலை.
. இதன் தாக்கம் மக்கள் தொகை குறைந்துகொண்டே செல்லும். இதற்கெல்லாம்
காரணம் கலி முதிர்ச்சியே. இதற்கு யாரையும் குறை சொல்லமுடியாது. அதுதான் பிரபஞ்ச ரகசியம்.
எந்த இனமாக இருந்தாலும் தொடக்கமும் உண்டு முடிவும் உண்டு.
கலியுக முதிர்ச்சியின் அடையாளங்கள்:
ஒருவர் கருவாகி உருவானது முதல் இறக்கும் வரை நிம்மதியாக வாழமுடியாது.
கருவில் இருக்கும் குழந்தைக்கு தாய் நல்ல உணவையும் நல்ல நிம்மதியான
வாழ்வையும் கொடுப்பதில்லை அதற்கு மாறாக மருந்து மாத்திரைகளும் நிம்மதியற்ற எண்ணங்களும்
கொடுக்கப்படுகின்றன.
குழந்தையை முழு வளர்ச்சியடைய விடுவதில்லை. பத்து இருவதுநாட்களுக்கு
முன்பே வெளியே எடுத்துவிடுகிறார்கள் மேலும் இயல்பாக (Normal) பிறக்கவிடுவதில்லை. முட்டிக்கொண்டு வெளியே வராதவர்களையே முட்டாள் என்பர். தற்காலத்தில்
முட்டுவதற்கான வாய்ப்பே கொடுக்கப்படுவதில்லை. டாக்டர் உங்கள் குழந்தைக்கு முட்டும்
தகுதி இல்லை என்று மறைமுகமாக செல்லுகிறார். அதை நம்புகிறர்கள். எல்லாக்குழந்தைக்கும்
முட்டும் தகுதி உண்டு என்பதைக்கூட அறியாதவர்களாகவே உள்ளார்கள். உள்ளேயே மலம் கழித்துவிட்டதாக
சொல்கிறார்கள் அதையும் நம்புகிறார்கள். கருவறையில் உள்ளவரை வாய்வழியாக சாப்பிடாது மூக்குவழியாக
சுவாசிக்காது மலம் உருவாகாது கழிக்காது சிறுநீர் கழிக்காது என்பதை அறியாதவர்களாவே இருக்கிறார்கள்
பிறந்தபின்பும் தாய்ப்பாலுக்கு பதிலாக விளம்பரங்களில் காட்டப்படும்
மாவுக்களும் மருந்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன.
அதன்பின்பு மற்றவர்களின் அரவணைப்பிலும் காப்பகங்களிலும் வளர்க்கின்றனர்
அங்கு அவர்களுக்கு ஏக்கமே வாழ்க்கையாகிறது.
இரண்டரை வயதுமுதல் பள்ளி வாழ்க்கை. இங்கு தொடங்கி கல்லூரி படிப்பை
முடிக்கும் வரை விடுமுறை இல்லை. படி படி என்று பள்ளியில் டார்ச்சர் பெற்றோர் டார்ச்சர்
டியூஷன் வாத்தியார் டார்ச்சர் போன்றவற்றை அனுபவிக்க வேண்டும்.
வேலை கிடைத்தவர்கள் அனைவரும் நிர்வாக அடிமைகளாக பணத்திற்காக
வாழ்வார்கள். இவர்கள் தனது விருப்பத்திற்கு வாழ்க்கையை வாழமுடியாது.
வேலை கிடைக்காதவர்கள் ஏக்கத்துடனே வாழ்வார்கள். வேறுவேலைகள்
பார்த்தாலும் நாம் பார்ப்பது நமக்கான வேலையில்லை படிப்புக்கான வேலை இல்லை என்ற எண்ணத்துடனே
வாழ்வார்கள். ஆகமொத்தத்தில் நிம்மதியற்ற வாழ்க்கையே அமைகிறது.
உலகில் அரசியல் தலைவர்கள் அனைவரும் மக்களை காப்பாற்றுவதற்கு
பதிலாக மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச்செல்வார்கள். அறிவியல் வளர்ச்சி ஆபத்துகளை விளைவிக்க
கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு நான்காயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய
அணு ஆயுதங்கள். இவற்றை பிரயோகப்படுத்தினால் கற்பனைகூட செய்யமுடியாத அளவுக்கு அழிவு
ஏற்படும்.
போர்தர்மப்படி இருதரப்பிலும் சண்டைக்கு நிற்பவர்கள் மட்டுமே
மோதிக்கொள்ளவேண்டும். பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் சண்டையில் கலந்துகொள்ளாதவர்களை
கொல்லக்கூடாது. ஆனால் தற்காலங்களில் தனது உடலில் வெடிகுண்டு வைத்துக்கொண்டு சண்டையை
விரும்பாத அப்பாவிகள் அழிக்கப்படுவது என்பது கலியுக முதிர்ச்சியின் அடையாளம்.
மக்களும் இயற்கையை மறந்துவிட்டார்கள். ஆயில் மற்றும் கேஸை நம்பி
மரங்களை வளர்க்கவும் காக்கவும் மறந்துவிட்டார்கள். இதுவும் கடந்துபோகும் என்பது நினைவில்
இல்லை. ஒருநாள் ஆயில் மற்றும் கேஸ் எடுக்கும் இடங்களும் கனிம வளங்களை எடுக்கும் இடங்களும்
பாதிப்பை சந்திக்கும் அன்றய நிலையை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். எவர் வீட்டிலும்
அடுப்பு எரியாது.
இங்கு அனைத்தையும் சுட்டிக்காட்ட இயலாது இது புரிதலுக்கு மட்டுமே.
மேலும் கலி முதிர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றும்கூட. இவை அனைத்தும் பிரபஞ்ச
தத்துவப்படிதான் நடக்கிறது. அனைத்து இனங்களுக்கும் தொடக்கமும் முடிவும் இயற்கையானதே.
இவற்றை புரிந்துகொள்ள உன்னையே நீ அறிந்துகொள்ள வேண்டும்.
“முந்தாநாள் இருவருமே கூடி சேர்த்த மூலமதை அறியாட்டல் மூலம்பாரே”.-
மாமுனிவர் அகத்தீஸ்வரர்.
அதாவது முன்பு ஒருநாள் தாயும் தந்தையும் சேர்ந்ததில் இருவருடைய
ஒரு ஒரு உயிரணு சேர்ந்துதான் உடல் உறுப்புகள் அனைத்தும் வந்தது என்பதை அறிந்துகொள்ள
வேண்டும். மூலகாரணமான அந்த விஷயத்தையும் அந்த உயிரையும் அறியாதவர்களுக்கு நான் (தான்)
என்ற ஆணவமும் துன்பமும் தவிர்க்க இயலாததாக இருக்கும். இதேபோலத்தான் அனைத்து உயிர்களும்
பிறக்கின்றன. யானையா இருந்தாலும் பூனையா இருந்தாலும் தாவரங்கள் பறவைகள் போன்ற பிரபஞ்சத்தில்
அனைத்தும் இவ்வாறுதான் பிறக்கிறது - இதைத்தான்
முனிவர் திருவள்ளுவ பெருமான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார்.
அறம் காக்க நாமும் இயற்கைதான் என்பதை உணர்ந்து இயற்கையோடு சேர்த்து
வாழவேண்டும் அதாவது பழைய மரபியல் வாழ்வை வாழவேண்டும் மேலும் பாகுபாடு இல்லாமல் இனம்
காக்க பிரார்த்தனை செய்யவேண்டும்.
மரபியல் வாழ்க்கைக்கயை வாழ விருப்பம் உள்ளவர்கள் அதற்கு வழிகாட்டிகளாக
விளங்கும் உயர்திரு ம.செந்தமிழன், உயர்திரு.ஹீலர் பாஸ்கர், போன்றவர்களை பின்பற்றலாம்
மேலும் பலரும் இருக்கிறார்கள் அவர்களை இனங்கண்டு கற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.
கு. மணிக்கண்ணன்
மேலும் யுகம் பற்றி அறிய பின்வரும் இணைப்பை சொடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக